search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector distribute certificate"

    • பொது சுகாதாரத்துறையின் கீழ் பணிபுரியக்கூடிய மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பணியாளர்களை கொண்டு, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.
    • விளையாட்டுப்‌ போட்டிகளில்‌ முதல்‌ மூன்று இடங்களில்‌ வெற்றி பெற்றவர்களுக்கும், சிறப்பாகப்‌ பணியாற்றி ஓய்வு பெற்ற அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்களுக்கு பதக்கம்‌ மற்றும்‌ சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

    தேனி:

    பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் பொது சுகாதாரத்துறையில் சிறப்பாகப்‌ பணியாற்றி ஓய்வு பெற்ற அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்களுக்கு பதக்கம்‌ மற்றும்‌ சான்றிதழ்களை வழங்கினார்.

    பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை 1922 ஆண்டு தொடங்கப்பட்டு, 2022-ஆம் ஆண்டு 100-ஆண்டுகள் கடந்ததை முன்னிட்டு, விழிப்புணர்வு கலை நிகிழ்ச்சிகள் நடத்துதல், மாவட்ட அளவில், வட்டார அளவில் விளையாட்டு போட்டிகள் நடத்துதல், பொது சுகாதாரத்துறையில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை கவுரவித்தல் உள்ளிட்டவைகள் வாயிலாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில், நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, சென்னை பொது சுகாதாரம்‌ மற்றும் ‌நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநரகத்திலிருந்து தமிழகம் முழுவதும் ஜோதி ஓட்டம் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து, இன்றைய தினம் தேனி மாவட்டத்திற்கு வந்த ஜோதியை கலெக்டர் முரளிதரன் பெற்றுக்கொண்டார்.

    தேனி மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறையின் கீழ் பணிபுரியக்கூடிய மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பணியாளர்களை கொண்டு, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

    விளையாட்டுப்‌ போட்டிகளில்‌ முதல்‌ மூன்று இடங்களில்‌ வெற்றி பெற்றவர்களுக்கும், சிறப்பாகப்‌ பணியாற்றி ஓய்வு பெற்ற அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்களுக்கு பதக்கம்‌ மற்றும்‌ சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். இதன்‌ தொடர்ச்சியாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    ×