search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coconut plant"

    போடி அருகே 250 தென்னங்கன்றுகளை ஆசிட் ஊற்றி அழித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியான ராசிங்காபுரம், குரங்கணி, மேலசொக்க நாதபுரம் உள்ளிட்ட கிராமங்கள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. இயற்கை எழில் சூழ்ந்து காணப்படும் இந்த பகுதிகளில் ஏராளமான மா மரங்கள், தென்னந்தோப்புகள் அதிக அளவில் உள்ளது.

    இந்த பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு விவசாயமே முக்கிய தொழிலாக உள்ளது. எனவேதான் ஏராளமான விளை நிலங்கள் காணப்படுகிறது. போடி அருகே மரிமூர்குளம் பகுதியில் கந்தவேல் தோட்டத்தில் ஏராளமான தென்னங்கன்றுகள் நட்டு பராமரித்து வருகிறார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு கந்தவேலின் மகன் குமார் தென்னங்கன்றுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது தென்னங் கன்றுகள் கருகி அழிந்த நிலையில் காணப்பட்டது. இந்த தென்னங்கன்றுகளில் ஆசிட் ஊற்றப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.சுமார் 250 தென்னங்கன்றுகள் மர்ம கும்பலால் ஆசிட் ஊற்றப்பட்டுள்ளது.

    இந்த பகுதியில் வன விலங்குகள் அதிகம் சுதந்திரமாக உலா வருகிறது. அந்த விலங்குகள் இந்த பகுதியில் மேயும் போது ஆசிட் படிந்த புற்களை தின்றால் அவை உயிரிழக்க நேரிடும் அபாயம் உள்ளது. இது குறித்து குமார் குரங்கணி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குபதிவு செய்து தென்னங்கன்றுகளுக்கு ஆசிட் ஊற்றிய நபர்கள் யார்? எதற்காக ஊற்றிச் சென்றனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×