search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CM MK Stalin"

    • ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தினோம்.
    • விவசாயிகள் பெயரில் வாங்கிய கடன் வலையில் இருந்து விவசாயிகளை விடுவிக்க தமிழ்நாடு அரசு, வங்கி நிர்வாகங்கள் மற்றும் ஆலை நிர்வாகத்தோடு பேசி தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று சந்தித்து பேசினார்.

    அப்போது சில பிரச்சினைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி கோரி முதல்-அமைச்சரிடம் மனுக்கள் அளித்தார்.

    அதைத்தொடர்ந்து கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி வருமாறு:-

    பொதுவுடமை இயக்கங்களின் முன்னோடியான பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து போராடிய மார்க்சிய சிந்தனையாளர் சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா, அவரது மகள் பேராசிரியர் ஸ்டெபானி ஆகியோருக்கு சென்னையில் வருகிற 18-ந் தேதி வரவேற்பு விழா நடைபெற உள்ளது.

    இதில் முதல்-அமைச்சர் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பிதழ் அளித்தோம்.

    குமரி மாவட்டம் உள்ளிட்ட தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடைபெற்ற தோள்சீலைப் போராட்டத்தின் 200-வது ஆண்டு விழா, நாகர்கோவிலில் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கும் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

    ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தினோம். தஞ்சை, கடலூர் மாவட்டங்களில் செயல்படும் திருஆருரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகள் பெயரில் வாங்கிய கடன் வலையில் இருந்து விவசாயிகளை விடுவிக்க தமிழ்நாடு அரசு, வங்கி நிர்வாகங்கள் மற்றும் ஆலை நிர்வாகத்தோடு பேசி தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.

    கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து தமிழக அரசுக்கும், மக்களுக்கும் விரோதமாகவும், பழமைவாத சனாதன கருத்துக்களையும், அரசியல் சாசனத்திற்கும் முரண்பாடாக பேசி வருகிறார். கவர்னராக இருந்து கொண்டு அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

    புதிய கல்விக்கொள்கையை அமலாக்குவது, தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க மறுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார். நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு என்ற பெயரை பயன்படுத்துவது தவறு என பேசி உள்ளது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது.

    கவர்னரின் இந்த போக்கு குறித்த தமிழக மக்களின் கொந்தளிப்பான எதிர்ப்பு உணர்வுகளை முதல்-அமைச்சருக்கு தெரியப்படுத்தினோம். அனைத்து பிரச்சினைகளையும் கேட்டறிந்த முதல்-அமைச்சர், எங்கள் கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    கவர்னருக்கு எதிராக தனித்தனியாக போராட்டம் நடத்துவதற்கு பதிலாக அனைவரும் ஒன்றாக இணைந்து இயக்கமாக போராட்டம் நடத்தலாம் என தி.மு.க. தலைவர் என்ற முறையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கூறினேன். அதை பரிசீலிப்பதாக அவர் கூறினார்.

    அண்ணாமலை தலைமையில் இயங்கும் தமிழக பா.ஜனதா கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது ஒரு கட்சி சம்பந்தப்பட்டது அல்ல. அது கிரிமினல் வழக்கு தொடர்பானது.

    அதற்கு பதில் கூறாமல் பத்திரிகையாளர் மீது கோபப்படுவது 3-ம் தர அரசியல்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த சந்திப்பின்போது முன்னாள் எம்.பி. பெல்லார்மின் உடனிருந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியா சார்பில் ஓபன் பிரிவில் 3 அணிகளும், பெண்கள் பிரிவில் 3 அணிகளும் ஆக மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டன.
    • செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டிகளை உலகமே பாராட்டும் வகையில் வெற்றிகரமாக தமிழ்நாடு அரசு நடத்தி முடித்துள்ளது.

    சென்னை:

    இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்பட்டது.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த 28-ந்தேதி நடந்தது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியை தொடங்கி வைத்தார்.

    29-ந்தேதி முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்தது. 11 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி சுவிஸ் முறையில் நடைபெற்றது. ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் போட்டி நடத்தப்பட்டது. இதில் 186 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

    இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் ஓபன் பிரிவில் 3 அணிகளும், பெண்கள் பிரிவில் 3 அணிகளும் ஆக மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டன.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 11-வது மற்றும் இறுதி சுற்று நேற்று நடந்தது. இந்தப் போட்டியின் முடிவில் இந்தியாவின் 2 அணிகள் வெண்கல பதக்கம் பெற்றன.

    ஓபன் பிரிவில் குகேஷ், நிஹல் சரின், பிரக்ஞானந்தா, அதிபன், சத்வானி ஆகி யோரை கொண்ட இந்திய 'பி' அணி வெண்கல பதக்கம் பெற்றது. பெண்கள் பிரிவில் ஹம்பி, ஹரிகா, வைசாலி, தானியா சச்தேவ், பக்தி குல்கர்னி ஆகியோர் அடங்கிய இந்திய 'ஏ' அணி வெண்கல பதக்கம் பெற்றது. இது தவிர தனி நபர் பிரிவில் 7 இந்தியர்கள் பதக்கம் பெற்றனர்.

    நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த நிறைவு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கங்களை வழங்கினார்.

    இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இந்தியாவின் 2 அணிகளுக்கும் தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டிகளை உலகமே பாராட்டும் வகையில் வெற்றிகரமாக தமிழ்நாடு அரசு நடத்தி முடித்துள்ளது.

    இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் பொதுப்பிரிவில் 'இந்திய பி அணியும்' பெண்கள் பிரிவில் 'இந்திய ஏ அணியும்' என இரண்டு அணிகள் பதக்கம் வென்று செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திருப்பது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

    44-வது பன்னாட்டு சதுரங்க விளையாட்டு போட்டிகளில் பொதுப் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற 'இந்திய பி அணிக்கும்', பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற 'இந்திய ஏ அணி (பெண்கள்)' ஆகிய இரண்டு அணிகளுக்கும் பரிசுத்தொகையாக தலா ஒரு கோடி‌‌ ரூபாய் வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பிக்கும்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் தங்கமும், அர்மெனியா வெள்ளியும், பெண்கள் பிரிவில் உக்ரைன் தங்கமும், ஜார்ஜியா வெள்ளி பதக்கமும் பெற்றன.

    • ரூ.14.71 கோடி மதிப்பிலான 93 ரோந்து வாகனங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை காவல் துறையின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • இவ்வாகனங்களில் ரோந்து வாகன சமிக்ஞை விளக்குகள் மற்றும் ஒலி பெருக்கிகள் பொருத்தப்பட்டு உள்ளன.

    சென்னை:

    2021-22ஆம் ஆண்டு காவல்துறை மானியக் கோரிக்கையில் முதல்-அமைச்சர் நவீன கட்டுப்பாட்டு அறையை பலப்படுத்தும் விதமாக பழுதடைந்துள்ள பழைய ரோந்து வாகனங்களுக்கு மாற்றாக புதிய வாகனங்கள் வாங்கப்படும் என்றும், சுமார் 10 வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வரும் வாகனங்களுக்கு பதிலாக புதிய ரோந்து வாகனங்களும் வாங்கப்படும் என்று அறிவித்தார்.

    அதன்படி, சென்னை காவல் துறையின் நவீன காவல் கட்டுப்பாட்டறையின் மூலம் நாள்தோறும் பெறப்படும் அவசர சேவை அழைப்புகளுக்கு விரைந்து சேவை வழங்கிடவும் மற்றும் சேவையை பலப்படுத்தும் விதமாகவும் தற்போது பயன்பாட்டில் இருந்து வரும் பழுதடைந்த ரோந்து வாகனங்களுக்கு பதிலாக புதிதாக 46 ரோந்து வாகனங்களும், சென்னை பெருநகரில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்திடவும், அவசர ஊர்திகளின் பயன்பாடு மற்றும் மிக முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்தினை விரைவுப்படுத்திடவும் சுமார் 10 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் பழைய போக்குவரத்து ரோந்து வாகனங்களுக்கு பதிலாக புதிதாக 47 போக்குவரத்து ரோந்து வாகனங்களும், என மொத்தம் ரூ.14.71 கோடி மதிப்பிலான 93 ரோந்து வாகனங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை காவல் துறையின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இவ்வாகனங்களில் ரோந்து வாகன சமிக்ஞை விளக்குகள் மற்றும் ஒலி பெருக்கிகள் பொருத்தப்பட்டு உள்ளன. இதன்மூலம் காவல் கட்டுப்பாட்டறையில் பெறப்படும் சேவை அழைப்புகளுக்கும், போக்குவரத்து காவல் மூலம் பெறப்படும் சேவை அழைப்புகளுக்கும் விரைந்து நடவடிக்கை எடுக்க மிகவும் பயனுள்ளதாக அமைவதுடன் சென்னை பெருநகர காவல் பணி மேன்மேலும் சிறக்க உறுதுணையாக இருக்கும்.

    நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, தலைமைச் செயலாளர் இறையன்பு, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், காவல்துறை தலைமை இயக்குநர் செ. சைலேந்திர பாபு, சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆன்லைன் ரம்மி விளையாட்டின்பால் ஈர்க்கப்பட்டு, அதில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் துயரமான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
    • இது தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இணையதள சேவைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாள்தோறும் பன்மடங்கு அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. முந்தைய ஆட்சியாளர்களால் கடந்த 25-2-2021 அன்று ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு எதிராகச் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது.

    இந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சில நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, கடந்த 3-8-2021 அன்று வழங்கிய தீர்ப்பில், இச்சட்டம் போதுமான காரணங்கள் மற்றும் ஆதாரங்களின்றி பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அதனை ரத்து செய்தது. மேலும், இச்சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தபோது, அச்சட்டம் நிறைவேற்றப்படுவதற்கான அறிவியல்பூர்வமான தரவுகளை விளக்கத் தவறியதாகவும் கருத்து தெரிவித்திருந்தது.

    சென்னை உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் 13-11-2021 அன்று தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. மேலும், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட சட்டங்களும் அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டின்பால் ஈர்க்கப்பட்டு, அதில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் துயரமான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

    இது தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக் கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், இவ்விளையாட்டுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், இவ்விளையாட்டுகளை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை கூர்ந்தாய்வு செய்து, அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும்,

    இரண்டு வாரங்களுக்குள் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஐ.ஐ.டி. தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனரும் உளவியலாளருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார், காவல்துறை கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடே ஆகியோர் அடங்கிய குழு ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    மேற்குறிப்பிட்ட குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் இச்சமூகப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண வேண்டிய அவசியம் கருதி, அவசரச் சட்டம் விரைவில் இயற்றப்படும். இதன் மூலம் இச்சட்டம் பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டிடும் வகையில் முன் மாதிரிச் சட்டமாக அமையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    புதுக்கோட்டை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    புதுக்கோட்டை அருகே கீரனூரில் ஆடு திருடியவர்களை துரத்திச் சென்று பிடிக்க முற்பட்ட போது சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைத்து போலீசார்  தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

    புதுக்கோட்டை எஸ்ஐ

    இந்த நிலையில், சிறப்பு எஸ்.ஐ பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க ஸ்டாலின் மேலும் கூறுகையில், “ரோந்து பணியில் இருக்கும் போது எஸ்.ஐ மர்மநபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தை கேள்வியுற்று மிகுந்த துயரம் அடைந்தேன். பூமிநாதன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். 

    முதல்-அமைச்சர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறி முதற்கட்டமாக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கொடுத்து இருக்கிறார் என கேஎன் நேரு கூறியுள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் அரசு சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

    இதில் அமைச்சர் கே.என். நேரு பேசியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் மழை அதிகமாக பெய்து, சென்னை மாநகரம் பெரிய அளவில் பாதித்தது. சென்னையை போன்று பல்வேறு நகரங்களும் பாதிக்கின்ற நிலை ஏற்பட்டது. அந்த பகுதிகளில் எல்லாம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சென்னையில் 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் கிட்டத்தட்ட 500 பேருக்கு மேல் இறந்திருக்கிறார்கள். ஆனால், இந்த முறை அதே அளவுக்கு மழை பெய்தும் கூட 3 பேர் தான் அவர்களுடைய உடல் நலமின்மை காரணமாக தான் இறந்தனர்.

    ஓரிரு இடங்களை தவிர மற்ற இடங்களில் ஒரே நாளில் நீரை அகற்றி பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி செயல்பட்டு கொண்டிருக்கின்றது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறி முதற்கட்டமாக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கொடுத்து இருக்கிறார். சாலைகளை சீரமைப்பதற்காக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். நகராட்சி நிர்வாக துறைக்கு பேரீடர் தொகையாக ரூ.300 கோடி வழங்கி உள்ளார். கிட்டத்தட்ட ரூ.1000 கோடிக்கு முதல்-அமைச்சர் அனுமதி அளித்து இருக்கிறார்.

    முக ஸ்டாலின்

    ஒருவர் 5 ஆண்டு காலம் ஒரே இடத்தில் குடியிருக்கிறார் என்றால் அந்த இடத்திற்கு அவருக்கு பட்டா வழங்க வேண்டும் என ஏற்கனவே தலைவர் கலைஞர் சொல்லி இருக்கிறார். எனவே உங்களிடம் வாங்கிய மனுக்களுக்கு உரிய முறையில் பரிசீலித்து நல்ல தீர்வு மாவட்ட நிர்வாகம் வழங்கும். உறுதுணையாக நாங்கள் இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    குறைதீர்க்கும் முகாமில் தி.மு.க. மாவட்ட துணை அமைப்பாளர் மல்லிகா திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக நிர்வாகிகள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

    இதையும் படியுங்கள்...20 பொருட்களுடன் பொங்கல் பரிசு தொகுப்பு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

    முதலமைச்சர் முக ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு மர்ம நபர் போன் செய்து பேசினார்.

    அப்போது அவர் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வீட்டில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறி விட்டு போனை துண்டித்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உஷாரானார்கள்.

    வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர். மிரட்டல் வந்த போன் நம்பரை வைத்து துப்பு துலக்கப்பட்டது. அப்போது மிரட்டல் விடுத்த நபரின் பெயர் பழனிவேல், கடலூரைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

    சென்னை மாம்பாக்கம் பகுதியில் தங்கி இருந்து ஓட்டலில் வேலை செய்து வரும் பழனிவேல், சினிமா பாடராகி உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் பாட வேண்டும் என்பதற்காக இது போன்று மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார்.

    ×