search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cleanliness"

    • தூய்மை பணி முகாம் 6-வது வார்டு பகுதியில் நடைபெற்றது.
    • இதில் 90-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து பணிகளை மேற்கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் 4-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் 6-வது வார்டு பகுதியில் நடைபெற்றது.

    முகாமில் பேரூராட்சி மன்றத் தலைவர் கருணாநிதி தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர், பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன், பில் கிளர்க்குகள் குணசேகரன், பன்னீர்செல்வம், வார்டு உறுப்பினர், தூய்மைப் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உட்பட 90-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து பணிகளை மேற்கொண்டனர்.

    இதில், பொது சுகாதாரப் பணிகளான மழைநீர் வடிகால்கள் தூர்வாறுதல், செடி, கொடி, முட்புதர்கள் அகற்றுதல், தெருக்களை சுத்தம் செய்தல், குடிநீர் பைப்லைன் பழுதுகள் சரி செய்தல், தெரு மின்விளக்குகள் மற்றும் மின் இணைப்புகள், மின்மோட்டார்கள் பராமரிப்பு செய்தல் போன்ற பொது மக்களின் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டது.

    • கலெக்டர் மகாபாரதி அரியாபிள்ளை குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • முதல் கட்டமாக குளத்தில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தொடங்கியது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி - சிதம்பரம் நெடுஞ்சாலையில் அரியாப்பிள்ளை குளம் உள்ளது. பல ஏக்கரில் பறந்து விரிந்துள்ள இந்த குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப் படாமல் அப்பகுதியில் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தற்போது சீர்காழி நகராட்சி மூலம் ரூ.1 கோடியே 11 லட்சம் செலவில் குளத்தை அழகுப்படுத்தும் விதமாக கரைகளை பலப்படுத்தி, நீர் நிரப்பி, சுற்றி நடைபாதை அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி கடந்த வாரம் பணிகளை தொடங்க நகராட்சி நிர்வாகம் முற்பட்டபோது ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தற்காலிகமாக பணி நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி அரியா பிள்ளை குளத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தொடங்கிட நகராட்சி ஆணையர் வாசுதேவனுக்கு அறிவுறுத்தினார்.

    இதனை அடுத்து சீர்காழி டிஎஸ்பி லாமெக் தலைமையில், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட போலீசார் குளத்தை சுற்றி குவிக்கப்பட்டு முதல் கட்டமாக குளத்தை தூய்மைப்படுத்த ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தொடங்கியது. நகராட்சி ஆணையர் வாசுதேவன், பொறியாளர் சித்ரா, நகர்மன்ற உறுப்பினர் நாகரத்தினம்செந்தில் ஆகியோர் மேற்பார்வையில் ஜேசிபி எந்திரம் கொண்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    போலீஸ் பாதுகாப்புடன் குளம் தூர் வாரும் முதல் கட்ட பணிகள் தொடங்கி உள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • ஆறு, குளங்களில் கழிவுநீரை விடுவதால் அனைத்து நீர்நிலைகளையும் ஆக்கிரமித்து விட்டது.
    • மீண்டும் உற்பத்தியாகிவிடும் .மூன்று மாதங்களுக்கு தொடந்து தூய்மை செய்ய வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட கலெக்டருக்கு, திருத்துறைப்பூண்டி பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

    திருவாரூர் மாவட்டத்தில் ஆறு, வாய்க்கால், குளங்களில் வெங்காய தாமரைகளைச்செடி ஆக்கிரமித்து நீர்நிலைகளையும், மீன்வளத்தையும், சுற்றுசூழலையும் பெருமளவில் பாதிக்கிறது. முன்பு கழிவு நீரில் மட்டுமே வளர்ந்த இந்த செடிகள்.

    தற்போது ஆறு, குளங்களில் கழிவுநீரை விடுவதால் அனைத்து நீர்நிலைகளையும் ஆக்கிரமித்து விட்டது.

    இதனால் பாசன மதகுகளில் அடைத்துக்கொண்டு பாசனத்திற்கு பெரிய இடையூராக உள்ளது.

    நீர் நிலைகளை இடைவெளி இல்லாமல் மூடிவிடுவதால் ஆக்ஸிஜன் குறைந்து நன்னீர் மீன் இனங்கள் உட்பட அனைத்து நீர்வாழ் உயிரினங்களும் அழிந்து வருகிறது.

    இதனால் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.

    உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, கோடைகாலங்களில் மக்களும், கால்நடைகளும் பயன்படுத்த முடியாமல் நீரை ஆவியாக்கிவிடுகிறது.

    எனவே மாவட்ட அளவில் வெங்காய தாமரை அகற்றும் பணியை மக்கள் இயக்கமாக மேற்கொள்ள வேண்டும்.

    ஒரு செடி கிடந்தாலும் மீண்டும் உற்பத்தியாகிவிடும் .மூன்று மாதங்களுக்கு தொடந்து தூய்மை செய்ய வேண்டும்.

    இச்செடிகளை ஒவ்வொரு நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் செயல்படும் நுண்ணுரம் தயாரிப்பு மையங்கள் மூலமும், அல்லது நிழலான பகுதிகளில் மூடாக்கு அமைத்து பஞ்சகவ்யா மூலம் எளிதாக மக்க வைத்து விவசாயிகளுக்கு வழங்க முடியும். எனவே தனி கவனம் எடுத்து இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சமூக ஆர்வலரான ரா.பிரனேஷ் இன்பன்ட்ராஜ் இவர் இளம் விஞ்ஞானி, முனைவர் பட்டம், பல விருதுகளைப் பெற்றவர்.
    • உலகத்தில் இருக்கும் முக்கிய பிரச்சனை பூமி வெப்பமயமாதல், நாம் நமது பஞ்ச பூதங்களை மாசில்லாமல் பாதுகாப்பது அவசியம், நோயில்லாமல் வாழ தூய்மையான காற்று அவசியம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பூக்கார முதல் தெருவை சேர்ந்தவர் ரா.பிரனேஷ் இன்பன்ட்ராஜ் (வயது 23). சமூக ஆர்வலரான இவர் இளம் விஞ்ஞானி, முனைவர் பட்டம், பல விருதுகளைப் பெற்றவர். லயன் தூதர்.

    இவர் தஞ்சையில் பல இடங்களில் தனது சொந்த செலவில் மரக்கன்றுகள் வாங்கி நட்டு வருகிறார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உலகத்தில் இருக்கும் முக்கிய பிரச்சனை பூமி வெப்பமயமாதல், நாம் நமது பஞ்ச பூதங்களை மாசில்லாமல் பாதுகாப்பது அவசியம். நோயில்லாமல் வாழ தூய்மையான காற்று அவசியம்.

    இன்று காற்று மாசுபடுகிறது. மரங்களை அழிக்காமல் இருந்தாலே நாம் பெரும்பாலான பிரச்சனைகளை தவிர்த்து விடலாம். நடும் மரங்களை நாம் அனைவரும் ஒன்றாக பராமரித்தல் அவசியம்.

    உலகில் மரங்களை நடுபவர்கள் மிகக் குறைவு.

    ஆனால் மரங்களைப் பயன்படுத்துபவர்கள் அதிகம். மரம் மனிதனின் பயன்பாட்டிற்கு தன்னை அர்ப்பணிக்கிறது. மரங்களை நடுவது நிலையான தர்மத்திற்கு நிகரானது.

    மரம் வளர்க்க முயல்பவர்களுக்கு துணை நிற்க வேண்டும்.

    இதன் மூலம் இயற்கை வளங்களை நிச்சயம் பாதுகாக்க முடியும்.

    பழங்காலத்தில் நமது முன்னோர்கள் 100 ஆண்டை கடந்தும் வாழ்ந்தார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் இயற்கையை பேணி பாதுகாத்தது தான். நாம் உயிர் வாழ ஆக்சிஜன் முக்கியமானது.

    அந்த ஆக்சிஜனை மரங்கள் கொடுக்கிறது.

    தவிர்க்க முடியாத காரணத்தால் ஒரு மரத்தை வெட்ட நேரிட்டால் அதற்கு பதில் 100 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். மற்றப்படி மரங்களை வெட்ட நினைக்க கூடாது.

    நான் ஆண்டுக்கு 500 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க முடிவு செய்து அதறகான பணிகளை தொடங்கி விட்டேன். அனைவரும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் 3-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் நடைபெற்றது.
    • சுய உதவிக்குழு உறுப்பி னர்கள் உட்பட 75-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து 11 மற்றும் 12-வதுவார்டு ஆகிய பகுதியில் பொது சுகாதாரப் பணிகளை மேற்க்கொண்டனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் 3-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் நடைபெற்றது.

    முகமிற்கு பேரூராட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன், அலுவலக பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பி னர்கள் உட்பட 75-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து 11 மற்றும் 12-வதுவார்டு பகுதிகளான பாப்பாத்தி அம்மன் கோவில் தெரு, காமாட்சி அம்மன் கோவில் தெரு, காவேரி சாலை கஞ்சிமடம் தெரு, அக்ரகாரம் தெரு ஆகிய இடங்களில் பொது சுகாதாரப் பணிகளை மேற்க்கொண்டனர்.

    மேலும் பராமரிப்பு செய்தல், கொசு ஒழிப்பு மருந்து அடித்தல் மற்றும் பொது மக்களின் தேவைகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.

    • என் குப்பை எனது பொறுப்பு தலைப்பின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மக்கும் குப்பை ,மக்காத குப்பை அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பெருமாம்பாளையம் பகுதியில் "நகரங்களின் தூய்மையான மக்கள் இயக்கம்" திட்டத்தின் சார்பில் என் குப்பை எனது பொறுப்பு தலைப்பின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

    சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி பொதுமக்களிடம் மக்கும் குப்பை ,மக்காத குப்பை பிரித்து தர வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இதில் சாமளாபுரம் பேரூராட்சி மன்றதுணைத்தலைவர் குட்டிவரதராஜன் , சாமளாபுரம் பேரூராட்சி 7-வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணவேணி, முன்னாள் வார்டு கவுன்சிலர் பொன்னுச்சாமி, மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்கள் , மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சாமளாபுரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து வழங்கிய பெருமாம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு  வழங்கப்பட்டது . 

      

    • நெற்குப்பை பேரூராட்சியில் தூய்மை குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • மக்கும் குப்பை, மக்காத குப்பை குறித்தும், பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்ப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் தீவிர தூய்மை மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரூராட்சி சேர்மன் புசலான் தலைமை தாங்கினார். பொதுமக்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை குறித்தும், பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்ப்பது குறித்தும் தெளிவுபடுத்தியதோடு, நாள்தோறும் வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை முழுமையாக முறையாக தூய்மை பணியாளர்களிடம் வழங்கும்படியும் சேர்மன் கேட்டுக்கொண்டார். இதில் செயல் அலுவலர் கணேசன், இளநிலை உதவியாளர் சேரலாதன், வரி தண்டலர் துரைராஜ், கவுன்சிலர் கண்ணன், சேக்கப்பன், மாணவர் அணி அமைப்பாளர் பாலமுருகன், 10-வது வார்டு செயலாளர் ரியாஸ் அகமது, 2-வது வார்டு துணை செயலாளர் சேவுகன், தூய்மை பணி மேற்பார்வையாளர் சிற்றரசு மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • மதுரை ரயில் நிலையத்தில் தூய்மை வார விழா நடந்தது.
    • மதுரை கோட்ட அலுவலகத்தில் தூய்மை பராமரிப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

    மதுரை

    மதுரை ெரயில்வே கோட்டத்தில் வருகிற அக்டோபர் 2-ம் தேதி வரை தூய்மை இரு வார விழா கடைபிடிக்கப் படுகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை ெரயில்வே காலனியில் தேசிய மாணவர் படையினர், பேராசிரியர் கார்த்திகேயன் தலைமையில் ஊர்வலமாக சென்று தூய்மை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அடுத்தபடியாக மதுரை கோட்ட அலுவலகத்தில் தூய்மை பராமரிப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

    நிகழ்ச்சியில் கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த், கூடுதல் மேலாளர் தண்ணீரு ரமேஷ்பாபு, கோட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மகேஷ் கட்கரி உள்பட பலர் கலந்து கொண்டனர். மதுரை மட்டுமின்றி நெல்லை, திண்டுக்கல், தூத்துக்குடி, விருதுநகர், ராமேசுவரம் ெரயில் நிலையங்களிலும் தூய்மை பராமரிப்பு உறுதியேற்பு நடந்தது

    • என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விளம்பர பேனர்களை அகற்றும் பணிகளை நகராட்சி கமிஷனர் தொடங்கி வைத்தார்.

    தாராபுரம் :

    தாராபுரம் பஸ் நிலையத்தில் என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தாராபுரம் நகராட்சி கமிஷனர் ராமர் கலந்துகொண்டு மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்து உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டார்.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் கவுன்சிலர்கள் பவர் சேகர், அம்மன் நாகராஜ், முத்துலட்சுமி ,பழனிசாமி ,புனிதா, சக்திவேல், தேவிஅபிராமி, கார்த்திகேயன் மற்றும் நகராட்சி ஆய்வாளர் அருண் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தாராபுரம் நகரில் அனுமதி பெறாத பிளக்ஸ் மற்றும் சினிமா சுவரொட்டிகள் , விளம்பர சுவரொட்டிகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்படும் என கூறி விளம்பர பேனர்களை அகற்றும் பணிகளை நகராட்சி கமிஷனர் தொடங்கி வைத்தார். 

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் இரண்டாம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் துவங்கப்பட்டது.
    • 80-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து தூய்மை பணி செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் இரண்டாம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் துவங்கப்பட்டு வார்டு 10 திருவள்ளுவர்சாலை (குமரன் நகர்) பகுதிகளில் பொதுசுகாதாரப் பணிகளான மழைநீர் வடிகால்கள் தூர்வார்தல், செடி, கொடி, முட்புதர்கள் அகற்றுதல், தெருக்களை சுத்தம் செய்தல், குடிநீர் பைப்லைன் பழுதுகள் சரி செய்தல், தெரு மின்விளக்குகள் மற்றும் மின் இணைப்புகள், மின்மோட்டார்கள் பராமரிப்பு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்பட்டது. பொது மக்களின் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் தூய்மைப் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட 80-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து தூய்மை பணி செய்தனர்.

    2-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாமிற்கு பேரூராட்சி மன்றத்தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். செயல் அலுவலர் கணேசன் முன்னிலை வகித்தார். முகாமில் மன்ற உறுப்பினர்கள், இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன் மற்றும் அலுவலக பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், தன்னார்வலர்கள் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழக ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம் சாா்பில், நாமக்கல் சி.ஐ.டி.யு. மாவட்டக் குழு அலுவலகத்தில் நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
    • 3 ஆண்டுகள் பணி முடித்தவா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

    நாமக்கல்:

    தமிழக ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம் சாா்பில், நாமக்கல் சி.ஐ.டி.யு. மாவட்டக் குழு அலுவலகத்தில் நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் துணைத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளா் வேலுசாமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

    இக்கூட்டத்தில், தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு, ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையில் 2016-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நிா்ணயிக்கப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும். 3 ஆண்டுகள் பணி முடித்தவா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

    மேலும், 31 சதவீத அகவிலைப்படி உயா்வை நடப்பு ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் கணக்கிட்டு வழங்கவும், ஊதிய உயா்வு மற்றும் அகவிலைப் படியையும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 5-ந் தேதி நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது.

    • நெற்குப்பையில் தூய்மை இயக்க நிகழ்ச்சி நடந்தது.
    • செயல் அலுவலர் கணேசன், இளநிலை உதவியாளர் சேரலாதன், வார்டு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் நகரங்களின் தூய்மை இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி பேரூராட்சி சேர்மன் புசலான் தலைமையில் நடந்தது.

    இதில் சைக்கிள் பேரணி, மாராத்தான் ஓட்டம், மரக்கன்றுகள் நடுதல், நீர்நிலை தொட்டிகளை சுத்தம் செய்தல், நீர்வரத்து கால்வாய்களை சுத்தம் செய்தல், போன்றவை நடத்தப்பட்டு அதில் பங்கேற்ற மகளிர் சுயஉதவி குழுவினர், மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் செயல் அலுவலர் கணேசன், இளநிலை உதவியாளர் சேரலாதன், வார்டு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.

    ×