search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cleanliness work"

    • நெல்லை மாநகராட்சி கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது.
    • மாநகரில் 55 வார்டுகளிலும் சீரான குடிநீர் வழங்கும் வகையில் விரைவில் அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது. துணைமேயர் கே.ஆர்.ராஜு, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மேயர் சரவணன் பேசியதாவது:-

    செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

    மேலும் இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி உள்ளார். முதல்-அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சீறிய நடவடிக்கையால் நெல்லை மாநகர பகுதியில் உள்ள 33 அரசு பள்ளிகளில் இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது.

    மாநகரில் 55 வார்டுகளிலும் சீரான குடிநீர் வழங்கும் வகையில் விரைவில் அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே சென்று குறைகளை தீர்க்கும் வகையில் மக்களை தேடி மேயர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாநகர பகுதியில் தூய்மை பணிகளை மேற்கொள்ள புதிதாக 300 பேர் நியமனம் செய்ய உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் பாளை மண்டல தலைவர் பிரான்சிஸ் பேசும் போது, மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பாதாள சாக்கடை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    மேலும் தி.மு.க. கவுன்சி லர்கள் பழையபேட்டை வாகன முைனயம் அருகில் உள்ள ஆடு அறுக்கும் நிலையத்தை மறுடெண்டர் விட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    தொடர்ந்து பேசிய 3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் தச்சை சுப்பிரமணியன் வழக்கம் போல் இந்தாண்டும் அரசு விதிகளை பின்பற்றியே டெண்டர் விடப்பட்டது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்த முறை கவுன்சிலர்களின் தலையீடு அதிகம் உள்ளதாக குற்றம் சாட்டினார்.

    • குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பது குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
    • துணிப்பையை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஞ்சப்பை மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    திட்டச்சேரி பேரூராட்சி சார்பில் ஒட்டுமொத்த தூய்மை பணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திக்கா தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் முன்னிலை வகித்தார். இதில் பொதுமக்களுக்கு ஸ்வச்சதா செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது, குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பது குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

    அதை தொடர்ந்து அனைத்து தெருக்களிலும் ஒட்டுமொத்த தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு பிளாஸ்டிக் பை பயன்படுத்துவதை தவிர்த்து துணிப்பையை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஞ்சப்பை மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகளுக்கு திடக்கழிவை உரமாக்குதல் குறித்து உரம் தயாரிக்கும் மையத்திற்கு அழைத்து சென்று விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், வரி தண்டலர் ஜெகவீரபாண்டியன், அலுவலக உதவியாளர் மாதவன், அமானுல்லா, அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • படகு சவாரி திட்டம் தயார் நிலையில் இருந்தாலும், ஆகம விதிகளின்படி அது ஏற்புடையதாக இல்லை.
    • மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கும்பகோணத்துக்கு ரூ.1,100 கோடியில் திட்ட வரைவு தயார் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் பல்வேறு இடங்களில் நகரங்க ளுக்கானதூய்மை இயக்கத்தின் சார்பில் தூய்மை பணி மேற்கொள்ள ப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கும்பகோணம் மகாமக குளத்தில் ஒருங்கி ணைந்த தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணிக்கு கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவ ணன் தலைமை தாங்கினார். ஆணையர் செந்தில் முருகன், துணை மேயர் சு.ப. தமிழழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அன்பழகன் எம்.எல்.ஏ. தூய்மை பணியை தொடங்கி வைத்தார். நகர் நல அலுவலர் பிரேமா, சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோரின் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் மகாமக குளத்தின் 4 கரைகளிலும் தூய்மை பணி மேற்கொண்டனர்.

    தொடர்ந்து அன்பழகன் எம்.எல்.ஏ. கூறும்போது:- கும்பகோணத்தின் ஆன்மிகச் சின்னமாகவும் மகாமக குளம் விளங்குகிறது. இதில் படகு சவாரி திட்டம் தயார் நிலையில் இருந்தாலும், ஆகம விதிகளின்படி அது ஏற்புடையதாகஇல்லை என்ற கருத்தின் படி படகு சவாரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கும்பகோ ணத்துக்கு ரூ.1,100 கோடி யில் திட்ட வரைவு தயார் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. கும்பகோ ணத்தை தனி மாவட்டமாக அறிவிப்பது உறுதி. அதன் பிறகு கும்பகோணம் மாந கரம் புதுப்பொலிவு பெற்று முன்னணி மாநகரங்களில் ஒன்றாக திகழும் என்றார்.

    • குளங்களில் கரையோர பகுதிகளில் மரக்கன்றுகள் நடுதல், பள்ளிவாசல் தெரு, வார்டு 6, மரைக்காயர் தெரு வார்டு 13-ல் மரங்கள் நடுதல் என 45-க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
    • மணியன் குளம் அருகில் “என் குப்பை என் பொறுப்பு” என்ற பிளக்ஸ் வைக்கப்பட்டது.

    மதுக்கூர்:

    தஞ்சை மாவட்ட கலெ க்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவு படியும், மதுக்கூர் பேரூராட்சி செயல் அலுவலர் ராமபிரசாத் வழிகாட்டுதல் படியும், மதுக்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் பாப்பாத்திகுளம், ஆதி திராவிடர்குளம், மணியன் குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் சுத்தம் செய்யப்பட்டன. பிளாஸ்டிக் கழிவுகள் திடக்கழிவுகள் நீக்கி சுத்தம் செய்யப்பட்டன.

    அம்மா குளம், ஆதிதிராவிட குளத்தில் கருவேல மரங்கள், ஆகாய தாமரைகள்அகற்ற ப்பட்டன. மேலும் படப்பை காடு வார்டு 1, மேல சூரியதோட்டம் வார்டு 2 ஆகியவற்றில் வடிகால் சுத்தம் செய்யப்பட்டது.

    இதேபோல் மணிய ன்குளம், ஆதி திராவிடர் குளம் உள்ளிட்ட குளங்களில் கரையோர பகுதிகளில் மரக்கன்றுகள் நடுதல், பள்ளிவாசல் தெரு, வார்டு 6, மரைக்காயர் தெரு வார்டு 13-ல் மரங்கள் நடுதல் என 45-க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.இதேபோல் மணியன் குளம் அருகில் "என் குப்பை என் பொறுப்பு" என்ற பிளக்ஸ் வைக்கப்பட்டது. மேலும் நீர் நிலைகள் அருகில் உள்ள குப்பைகள் எல்லாம் அகற்றம் செய்யப்பட்டது.இதில் பேரூராட்சி மன்ற தலைவர் வகிதா பேகம் ஹாஜா, மாணவர்கள், தன்னார்வலர்கள், குடியி ருப்பு நல சங்கம், தூய்மை பணியாளர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    ×