search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chief minister kumaraswamy"

    ஆஸ்தான ஜோதிடர் கூறிய ஆலோசனையின் படி கர்நாடக முதல்வரின் அண்ணன் தினமும் 350 கி.மீ. பயணம் செய்யும் தகவல் வெளியாகியுள்ளது. #Revanna
    பெங்களூர்:

    கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி குடும்பத்தினர் தெய்வ நம்பிக்கை கொண்டவர்கள். ஜோதிடத்தின் மீதும் அதீத நம்பிக்கை வைத்து அதன்படியே செயல்படுவார்கள்.

    குமாரசாமியின் தந்தையும் முன்னாள் பிரதமருமான தேவேகவுடா அடிக்கடி கோவில்களுக்கு செல்வார். தமிழக கோவில்களுக்கு அடிக்கடி வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

    அவரது மகன் குமாரசாமி முதல்-மந்தியாக பதவி ஏற்கும் முன் கர்நாடகத்தில் உள்ள மடாதிபதிகளை சந்தித்து ஆசி பெற்றார். திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கும் வந்து சாமி கும்பிட்டார். அதன் பிறகு தான் பதவி ஏற்றார்.

    குமாரசாமி மந்திரி சபையில் அவரது அண்ணன் எச்.டி. ரேவண்ணா பொதுப்பணித்துறை மந்திரியாக இடம் பெற்றுள்ளார். கடவுள் மற்றும் ஜோதிடத்தின் மீதும் நம்பிக்கை கொண்டவர்.

    இவர் மந்திரியாக பதவி ஏற்றதும் தனது ஆஸ்தான ஜோதிடரிடம் சென்று ஆலோசனைகள் கேட்டார். தனது மந்திரி பதவி நீடிக்குமா? ஆட்சிக்கு இடையில் ஆபத்து வருமா? போன்ற கேள்விகள் கேட்டார்.

    அப்போது ஜோதிடர் அவரிடம், உங்கள் ராசிப்படி நீங்கள் பெங்களூரில் தூங்கக் கூடாது. சொந்த ஊரில்தான் தூங்க வேண்டும், அப்போதுதான் உங்களது மந்திரி பதவி நீடிக்கும் என்று சொன்னார். அத்துடன் எந்தெந்த நேரத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்ற நேரத்தையும் குறித்துக் கொடுத்துள்ளார்.

    ஜோதிடர் சொன்னதை ஏற்றுக்கொண்ட ரேவண்ணா அவர் சொன்னபடியே செய்து வருகிறார். பெங்களூரில் அவருக்கு மந்திரிகளுக்கான பங்களா ஒதுக்கப்பட்டும் அதில் குடியேறவில்லை. பெங்களூரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள தனது சொந்த ஊரான கொள்ளே நரசிபுரா கிராமத்துக்கு தினமும் காரில் சென்று வருகிறார். போக வர என தினமும் 350 கி.மீ. தொலைவுக்கு காரில் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ரேவண்ணா இதற்காக அதிகாலை 5 மணிக்கே எழுந்து விடுகிறார். பூஜைகள் முடித்து விட்டு தனது தொகுதி மக்களை சந்தித்து குறைகள் கேட்டு மனுக்களை பெற்றுக் கொள்கிறார்.

    ரேவண்ணாவுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களா மற்றும் அவரது வீடு

    அதன்பிறகு பெங்களூருக்கு 8 மணிக்கு காரில் புறப்பட்டு 10.30 மணிக்கு தனது அலுவலகத்துக்கு வந்து விடுகிறார். அரசு துறை சம்பந்தப்பட்ட பணிகளை முடித்துவிட்டு இரவு 10 மணிக்கு மீண்டும் சொந்த ஊரான கொள்ளே நரசிபுரா போய் சேருகிறார்.

    இந்த பயணத்தால் ரேவண்ணா களைப்படுவதுடன் அரசுக்கும் கூடுதலாக எரிபொருள் செலவு ஏற்படுகிறது என்றாலும் ஜோதிடத்தின் மீதுள்ள நம்பிக்கையால் சிரமங்களை பொருத்துக் கொள்கிறார். பெங்களூரில் உறவினர்களது வீடுகள் இருந்தும் அங்கு கூட போய் தங்க மறுத்துவிட்டார்.

    ரேவண்ணாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பெங்களூர் குமார பார்க் பங்களா மிகவும் ராசியானது என்று கூறப்படுகிறது. இதில் முன்னாள் பொதுப்பணித்துறை மந்திரி மகாதேவப்பா தங்கி இருந்தார். அவர் 5 ஆண்டு காலம் மந்திரியாக நீடித்தார். ஆனால் ரேவண்ணா ஜோதிடர் சொன்னதால் ராசியான பங்களா என்றாலும் தனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டு சொந்த ஊருக்கு சென்று வருவது குறிப்பிடத்தக்கது. #Revanna
    ×