search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chess tournament"

    • செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • இது போன்ற வாழ்க்கைக்கு தேவையான விசயங்களை இந்த செஸ் விளையாட்டு நமக்கு கற்றுத்தருகிறது.

    விருதுநகர்

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை (28-ந் தேதி) முதல் 10-ந் தேதி வரை 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடக்கிறது.

    இதையொட்டி விருதுநகர் மருத்துவக்கல்லூரி கலைய–ரங்கில் மாவட்டத்தில் பல்வேறு கட்டங்களாக நடந்த செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர், எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன் முன்னிலை வகித்தனர்.

    கலெக்டர் மேகநாத–ரெட்டி தலைமை தாங்கி செஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற 200-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    விழாவில் கலெக்டர் பேசுகையில், இந்த விளையாட்டில் ஒரு நகர்வில் வெற்றி பெற முடியாது. தொடர்ச்சியாக ஒவ்வொரு படியாக நகர்ந்து, தோல்விகளையும் சந்தித்து தான் வெற்றி பெற முடியும். இது போன்ற வாழ்க்கைக்கு தேவையான விசயங்களை இந்த செஸ் விளையாட்டு நமக்கு கற்றுத்தருகிறது.

    எனவே அனைவரும் படிப்பிலும், இது போன்ற விளையாட்டுகளிலும் ஈடுபடுத்திக்கொண்டு தனித்திறமைகளை வளர்த்துக் கொண்டு, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றார்.

    முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் இருந்து செஸ் ஒலிம்பியாட் ஜோதி சிலம்பாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மூலம் ஊர்வலமாக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி வரை எடுத்து செல்லப்பட்டது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி, சிவகாசி சார் ஆட்சியர் பிருத்திவிராஜ், கோட்டாட்சியர்கள் கல் ய ா ண குமார்(அருப்புக்கோட்டை), அனிதா(சாத்தூர்), திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) தெய்வேந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ரிஷிவந்தியம் அரசு பள்ளியில் செஸ் போட்டிநடைபெற்றது.

    கள்ளக்குறிச்சி:

    மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர் தொடங்குகிறது. இதையொட்டி பள்ளி கல்வித்துறை சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியம் வட்டார அளவிலாள செஸ் போட்டி ரிஷிவந்தியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் என்று 3 பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டனர்.

    • அரசு பள்ளியில் சதுரங்க போட்டியை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • தலைமை ஆசிரியர் குணசீலன், தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ரெயில்வேபீடர் ரோட்டில் உள்ள சேத்தூர் சேவுகபாண்டியனார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 44-வது சர்வதேச செஸ் போட்டியை முன்னிட்டு ராஜபாளையம் வட்டார அளவிலான சதுரங்க போட்டி நடந்தது.

    இதில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    அவர் பேசுகையில், புகழ் பெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில், தமிழ்நாட்டில் நடக்க இருப்பது முதல்வரின் விடா முயற்சியே காரணம். சதுரங்கபோட்டியானது மன்னர் ஆட்சி காலத்தில் மன்னர்கள் அறிவு கூர்மையை வளர்த்துக் கொள்ள தங்களை தாங்களே சோதித்துக் கொள்ள இந்த போட்டியை தேர்ந்தெடுத்து விளையாடினர். அதுபோல் மாணவசெல்வங்களாகிய நீங்கள் உங்களது அறிவை தீட்டுவதற்கும், கவனத்தை ஒருநிலைப்படுத்தவும் இந்த போட்டி உதவியாக இருக்கும் என்றார்.

    இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர் குணசீலன், தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • விழிப்புணர்வு சதுரங்க போட்டியை போலீஸ் டி.எஸ்.பி. தொடங்கி வைத்தார்.
    • அனைத்து ஏற்பாடுகளையும் உடற்கல்வி ஆசிரியர் பாலசுந்தரம் செய்திருந்தார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்ப ள்ளியில் முதுகுளத்தூர் ஒன்றியத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலை பள்ளிகளிடையே விழிப்புணர்வு சதுரங்க போட்டி நடந்தது.

    போலீஸ் டி.எஸ்.பி. சின்னகன்னு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியர் சந்தனவேல், பயிற்சி டி.எஸ்.பி. ஆர்லியாஸ் ரெபோனி முன்னிலை வகித்தனர்.

    விளங்குளத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியதாஸ் வரவேற்றார் இதில் 22 பள்ளிகளைச் சேர்ந்த 56 மாணவர்களும், 48 மாணவிகளும் கலந்து கொண்டனர். 6, 8-ம் வகுப்பு பிரிவில் முதல் பரிசு காக்கூர் செல்வப்பாண்டி, 2-ம் பரிசு விளங்குளத்தூர் வெற்றிவேல், 3-ம் பரிசு முதுகுளத்தூர் விஷ்வா ஆகியோர் வென்றனர்.

    மாணவிகள் பிரிவில் முதல் பரிசு உலையூர் ஜெனி ஸ்ரீ, 2-ம் பரிசு காக்கூர் மாலினி, 3-ம் பரிசு விளங்குளத்தூர் சங்கீதா ஆகியோர் பெற்றனர். 9-10-ம் வகுப்பு பிரிவில் முதலிடம் அலங்கானூர் முத்துகுமார், 2-ம் இடம் கீரனூர் அருண்குமார், 3-ம் இடம் கீரனூர் டேனில் ஆகியோர் பெற்றனர்.

    10 -12-ம் வகுப்பு மாணவர் பிரிவில் முதல் பரிசு கீழத்தூவல் எழில்வேந்தன், 2-ம் பரிசு அலங்கானூர் ஹரீஷ் திவாகர், 3-ம் பரிசு அலங்கானூர் ஸ்ரீராம், 11 - 12 மாணவிகள் பிரிவில் முதல் பரிசு கீழத்தூவல் நிவேதா, 2-ம் பரிசு முதுகுளத்தூர் சிவபாரதி, 3-ம் பரிசு அலங்கானூர் அங்காளஈஸ்வரி, 9-10-ம் வகுப்பு மாணவிகள் பிரிவில் முதல் பரிசு கீழத்தூவல் மகாலட்சுமி, 2-ம் பரிசு காக்கூர் பவனா, 3-ம் பரிசு விளங்குளத்தூர் முத்துப் பிரியா ஆகியோர் பெற்றனர்.

    சதுரங்க விளையாட்டுப் போட்டியில் 5 உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அனைத்து ஏற்பாடுகளையும் உடற்கல்வி ஆசிரியர் பாலசுந்தரம் செய்திருந்தார்.

    • அரசு பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க போட்டி நடந்தது.
    • 23 பள்ளிகளை சேர்ந்த 142 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஒன்றிய அளவிலான நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான சதுரங்கப்போட்டி நடந்தது. இதில் 23 பள்ளிகளை சேர்ந்த 142 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செங்கதிர் மேற்பார்வையில் போட்டிகள் நடத்தப்பட்டன. தலைமையாசிரியர் (பொறுப்பு) கர்ணன் தொடங்கி வைத்தார். உடற்கல்வி ஆசிரியர்கள் நவமணி, பாலின் ஜெரால்டு மேரி, சர்மிளா ஆகியோர் போட்டியை கண்காணித்தனர். இதில் அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.

    • சென்னை அருகே மாமல்லபுரத்தில் உலக செஸ் ஒலிம்பியாட் செஸ் போட்டி நடைபெற உள்ளது.
    • இதில் பார்வையாளர்களாக கலந்து கொள்ள மாணவ- மாணவிகளுக்கான செஸ் போட்டி நடைபெற்றது.

    வேடசந்தூர்:

    சென்னை அருகே மாமல்லபுரத்தில் உலக செஸ் ஒலிம்பியாட் செஸ் போட்டி நடைபெற உள்ளது. இதில் பார்வையாளர்களாக கலந்து கொள்ள மாணவ- மாணவிகளுக்கான செஸ் போட்டி நடைபெற்றது.

    இதில் வெற்றி பெறும் மாணவ- மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு அதிலும் வெற்றி பெறுபவர்களுக்கு மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் போட்டியில் பார்வையாளராக கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்.

    வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த போட்டியில் 13 பள்ளிகளைச் சேர்ந்த 93 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் சுரேஷ்பாபு, உடற்கல்வி இயக்குனர் ஆரோக்கியசாமி, உடற்கல்வி ஆசிரியர் தாமஸ், ராபர்ட்வில்லியம், ஜான்சி, பாலசுப்பிரமணி மற்றும் ஐயப்பன், சுந்தரவடிவேல், அந்தோணி, விமல்ராஜ், ரமேஷ் ஆகியோர்கள் மேற்பார்வையாளர்களாக இருந்து போட்டிகளை நடத்தினர்.

    வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை தேர்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.

    • முதியோர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கான செஸ் போட்டிகள் 2நாட்கள் நடக்கிறது.
    • மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் பங்குபெற்று திறமைகளை வெளிப்படுத்தலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சதுரங்க ஒலிம்பியாட் என்பது மனிதகுலத்தின் புத்தி கூர்மை வாய்ந்த சிறந்த படைப்புத் திறனை உடைய சிந்தனைகளின் சங்கமிக்கும் போட்டியாகும். மேலும் சதுரங்க வீரர்களும், சதுரங்க விளையாட்டின் மீது ஆர்வமுடையவர்களும் முக்கியமாக எதிர்பார்க்கும் நிகழ்வுகளில் ஒன்றாகும்.

    சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு ஏற்பாடு செய்த முதல் அதிகாரப்பூர்வ சதுரங்க ஒலிம்பியாட் போட்டி 1927-ம் ஆண்டு லண்டனில் நடந்தது. சதுரங்க ஒலிம்பியாட்ஸ் போட்டிகள் ஆண்டுதோறும் அவ்வப்போது நடைபெற்று வந்தது.

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், இதற்கு முன்னதாக 2018-ம் ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பியாட்டில் அதிகளவு பங்கேற்பான 176 நாடுகளின் பங்கேற்பை மிஞ்சும் வகையில் தற்போது 187 நாடுகளின் சாதனைப் பங்கேற்பை எதிர் நோக்கியுள்ளது. இந்த சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள், இந்திய சதுரங்க போட்டிகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தனித்தன்மை உடையதாக நடைபெற உள்ளது.

    இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முக்கியத்துவம் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்துத்துறைகள் ஒருங்கிணைந்து பல்வேறு போட்டிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில், அனைத்துத் தரப்பு சதுரங்க விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றன.மேலும், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, ஊரக வளர்ச்சி முகமை புதிய அலுவலக கூட்டரங்கில் நாளை (21-ந் தேதி) 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், நாளை மறுநாள் (22-ந்தேதி) மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கும் செஸ் போட்டிகள் நடைபெற உள்ளது.

    இந்த சதுரங்கப்போட்டியில் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் பங்குபெற்று திறமைகளை வெளிப்படுத்தலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதுவையில் சர்க்கிள் ஸ்போர்டிப் சங்கம் சார்பில் மாநில அளவிலான செஸ் போட்டி 3 நாட்கள் அண்ணா திடல் உள் விளையாட்ட ரங்கில் நடந்தது.
    • அனைத்து வயதினருக்கும் தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவையில் சர்க்கிள் ஸ்போர்டிப் சங்கம் சார்பில் மாநில அளவிலான செஸ் போட்டி 3 நாட்கள் அண்ணா திடல் உள் விளையாட்ட ரங்கில் நடந்தது. அனைத்து வயதினருக்கும் தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

    உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. நேரு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவிகளுக்கு பாளை வ.உ.சி. மைதானத்தில் இன்று சதுரங்க போட்டி நடைபெற்றது.
    • 200 நாடுகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ள செஸ் ஒலிம்பியாட் திருவிழா முதல்முறையாக சென்னையில் நடைபெற உள்ளது.

    நெல்லை:

    200 நாடுகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ள செஸ் ஒலிம்பியாட் திரு விழா முதல்முறையாக சென்னையில் நடைபெற உள்ளது.

    இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பார்வை யாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் நெல்லை மாவட்ட தனியார் பள்ளிகளில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு சதுரங்க போட்டிகள் நடைபெற்று அதில் சிறப்பாக விளையாடியவர்கள் சென்னையில் நடைபெறும் போட்டியில் பார்வையாளராக கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களையும், இதேபோல் சதுரங்க போட்டி வைத்து பார்வையாளராக அழைத்து செல்ல வேண்டும் என மாவட்ட கலெக்டர் விஷ்ணு அறிவுறுத்தினார்.

    அதன்படி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவிகளுக்கு பாளை வ.உ.சி. மைதானத்தில் இன்று சதுரங்க போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள 125 மாணவ - மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    இதில் 110 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். சதுரங்க போட்டியில் சிறப்பாக விளையாடும் மாணவ-மாணவிகள் சென்னை ஒலிம்பியாட் போட்டியில் பார்வை யாளராக பங்கேற்க அழைத்து செல்லப்படுவார்கள்.

    • தமிழக அரசு, நீலகிரி மாவட்ட சதுரங்க சங்கத்தின் சார்பில் கோத்தகிரி ரிவர் சைடு பப்ளிக் பள்ளியில் சதுரங்க போட்டி நடைபெற்றது.
    • 9 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் ஒரு சுற்றிற்கு 25 நிமிடங்கள் அளிக்கப்பட்டு விளையாடினர்.

    அரவேணு:

    சென்னை மகாபலி புரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தமிழக அரசு, நீலகிரி மாவட்ட சதுரங்க சங்கத்தின் சார்பில் கோத்தகிரி ரிவர் சைடு பப்ளிக் பள்ளியில் சதுரங்க போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டியில் நீலகிரி மாவட்டத்தில் கல்வி பயிலும் 1‌5 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த போட்டி 2 நாட்கள் நடைபெற்றது.

    மொத்தம் 9 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் ஒரு சுற்றிற்கு 25 நிமிடங்கள் அளிக்கப்பட்டு விளையாடினர்.இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    அத்துடன் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை சென்னையில் நடைபெறும் ெசஸ் ஒலிம்பியாட் போட்டியை காணவும் அழைத்து செல்லப்பட உள்ளதாக அதன் ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர். போட்டிக்கான ஏற்பாடுகளை அகில இந்தியா சதுரங்க சங்கம் மற்றும் தமிழ்நாடு சதுரங்க சங்கம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.

    இந்த போட்டியானது மாணவர்களின் அறிவுத்திறன், ஞாபக சக்தியை அதிகரிக்கும் எனவும், மாணவர்களின் எதிர்கால கல்வி சிறப்பாக அமையும் என்று ரிவர் சைடு பள்ளியின் தாளாளர் கந்தசாமி கூறினார்.

    • ராமநாபுரத்தில் மாநில அளவிலான செஸ் போட்டியில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
    • செஸ் போட்டி கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் முதல்வர் முகம்மது செரீப் தலைமையில் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட சதுரங்கம் கழகம் சார்பில் 34-வது 9 வயதிற்குட்பட்டோர் பொது மற்றும் சிறுமியர்களுக்கான மாநில அளவிலான சாம்பியன்ஷிப் செஸ் போட்டி கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் முதல்வர் முகம்மது செரீப் தலைமையில் நடந்தது.

    மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட செஸ் அசோசியேஷன் தலைவர் அப்பா மெடிக்கல் சுந்தரம் வரவேற்றார்.

    கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிம், கல்லூரி துணை முதல்வர் செந்தில்குமார், கீழக்கரை துணை காவல் கண்காணிப்பாளர் சுபாஷ், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி, தமிழ்நாடு செஸ் அசோசியேஷன் மாநில துணை செயலாளர் எப்ரோம், துணைத் தலைவர் தேவி உலக ராஜ், டைமண்ட் சீ புட்ஸ் எக்ஸ்போர்ட்டர்ஸ் அன்பழகன், ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேஷன் புரவலர்கள் சண்முக சுந்தரம், ராஜாராம்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    4 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் ராமநாதபுரம் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து 200-க்கும் அதிகமான குழந்தைகள் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேஷன் செயலாளர் ரமேஷ் பாபு, கல்லூரி உடற்கல்வி இயக்குனர் சுரேஷ் குமார் ஆகியோர் செய்தனர்.

    சர்வதேச பீடே ரேட்டிங் செஸ் போட்டியில் சென்னை வீரர் கோகுல் சாம்பியன் பட்டம் பெற்றார்.


    மாடர்ன் சீனியர் பள்ளி சார்பில் 11-வது சர்வதேச பீடே ரேட்டிங் செஸ் போட்டி சென்னை நங்கநல்லூரில் உள்ள அந்த பள்ளி வளாகத்தில் நடந்தது.

    இதில் வேலம்மாள் பள்ளி வீரர் கோகுல்ராஜ் 7.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றார். அவருக்கு ரூ.25 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. ரத்தினசபாபதி (வேலம்மாள்), தனுஷ் ராகவ் (அக்‌ஷயா அகாடமி) தலா 7 புள்ளியுடன் 2-வது, 3-வது இடங்களை பிடித்தனர்.

    கிராண்ட்மாஸ்டர் என்.ஸ்ரீநாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். மாடர்ன் சீனியர் பள்ளி தலைவர் எஸ்.வீரராகவன், செயலாளர் எஸ்.பட்டாபிராமன், முதல்வர் கே.மோகனா, தலைமை நடுவர் எம்.விஜய்குமார், காஞ்சீபுரம் மாவட்ட செஸ் சங்க இணை செயலாளர் எச்.சந்தானம் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

    ×