search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "championship"

    சவுதி அரேபியாவில் முதல் முறையாக எலெக்ட்ரிக் கார் பந்தயம் நடைபெற இருக்கிறது. 2018 மற்றும் 2019-ம் ஆண்டிற்கான எலெக்ட்ரிக் கார் பந்தயத்தின் முதல் சுற்று போட்டிகள் ரியாத்தில் நடைபெறுகிறது. #ElectricCar



    கச்சா எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று. உலகின் பெருமளவிலான பெட்ரோல், டீசல் தேவையைப் பூர்த்தி செய்பவையே வளைகுடா நாடுகள்தான். அப்படிப்பட்ட சூழலில் சவுதி அரேபியாவிலேயே எலெக்ட்ரிக் கார் பந்தயம் முதல் முறையாக நடத்தப்பட உள்ளது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    2018 மற்றும் 2019-ம் ஆண்டிற்கான எலெக்ட்ரிக் கார் பந்தயத்தின் முதல் சுற்று போட்டிகள் ரியாத்தில் உள்ள அட் ரியாத் எனுமிடத்தில் நடைபெற உள்ளது. இப்பகுதியானது தலைநகரை ஒட்டிய புறநகர் பகுதியாகும். இங்குதான் எலெக்ட்ரிக் கார் பந்தய போட்டிகளை நடத்த சவுதி அரேபியா அரசருடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். 

    இதற்காக அரச குடும்பத்தினர் நடத்தும் ஜெனரல் ஸ்போர்ட்ஸ் அத்தாரிடி மற்றும் தேசிய மோட்டார் சம்மேளனத்துடன் 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த அதிரடி மாற்றத்திற்கு பின்னால், அத்தியாவசியமான காரணமும் ஒளிந்திருக்கிறது. 

    அடுத்த 50 ஆண்டுகளில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் என்பதால், அதற்கு மாற்றான எரிபொருளுக்கு பழக்கப்படுத்தி வருகிறார்கள். அதில் மின்சார வாகனங்களே முன்னிலை பெறுகின்றன. மின்சக்தியில் இயங்கும் கார்கள், சுற்றுச்சூழலுக்கு ஏற்றவை என்பதால் மின்சார கார்களும், பஸ்களும் அதிகமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.



    குறிப்பாக சவுதி அரேபியாவில் பிரபலமாக நடைபெற்று வரும் பார்முலா 1 பந்தய கார்களையும், எலெக்ட்ரிக் கார்களாக மாற்றி பந்தயம் நடத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இத்தகைய எலெக்ட்ரிக் கார் பந்தயங்களே வருங்காலத்தை ஆட்சி செய்ய இருக்கின்றன என்பதை உணர்ந்தே இந்த அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருவதாக சவுதி இளவரசர் அப்துல் அஜிஸ் பின் துர்கி அல் பைசல் அல் சவுத் தெரிவித்துள்ளார்.

    இ-ரேஸ் சாம்பியன் போட்டிக்கான முதல் சுற்று ரியாத்தில் நடத்துவதன் மூலம் இதேபோன்று அடுத்தடுத்த போட்டிகளை நடத்துவதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது. எலெக்ட்ரிக் கார் பந்தயம் போன்று பிற விளையாட்டு போட்டிகளும் சவுதி அரேபியாவில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமடைந்துள்ளன.

    எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஜாகுவார், ரெனால்ட், ஆடி, சிட்ரோயன், பி.எம்.டபிள்யூ., மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனங்களின் பேட்டரி ரேஸ் கார்களும் இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ளன. இது பந்தய ஆர்வலர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    13-வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் எகிப்து அணி வெற்றி பெற்று 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. #WorldJuniorSquash #Championship #Egypt
    சென்னை:

    13-வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடந்தது. 28 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் அணிகளுக்கான ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் எகிப்து, இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    முதல் ஆட்டத்தில் எகிப்தின் மார்வன் டாரெக் 12-10, 11-6, 11-7 என்ற நேர் செட் கணக்கில் இங்கிலாந்தின் மார்க் வாலை தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் எகிப்தின் ஓமர் எல் டோர்கி 13-11, 11-4, 11-4 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின் சாம் டோட்டை வீழ்த்தினார். இதையடுத்து 2-0 என்ற கணக்கில் எகிப்து அணி வெற்றி பெற்று 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    இதற்கிடையே, இந்த போட்டிக்காக சென்னைக்கு வந்திருந்த தென்ஆப்பிரிக்க ஸ்குவாஷ் அணியின் மேலாளரும், பயிற்சியாளருமான கிரஹாம் பிரையர் (வயது 67) நேற்று மரணம் அடைந்தார். விமான நிலையத்திற்கு செல்வதற்காக அணி வீரர்களுடன் பஸ்சில் ஏறுவதற்கு புறப்பட்ட போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, நிலைகுலைந்து கீழே சாய்ந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். #WorldJuniorSquash #Championship #Egypt 
    13-வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 3-0 என்ற கணக்கில் சவுதிஅரேபியாவை தோற்கடித்தது. #India #WorldJuniorSquash
    சென்னை:

    13-வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் தனிநபர் போட்டி நிறைவடைந்த நிலையில் அணிகளுக்கான பந்தயம் நேற்று தொடங்கியது. ஆண்கள் பிரிவில் 24 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. ‘இ’ பிரிவில் அங்கம் வகித்த இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 3-0 என்ற கணக்கில் சவுதிஅரேபியாவை தோற்கடித்தது.

    இந்திய அணியில் ராகுல் பாய்தா, உத்கார்ஷ் பஹெதி, வீர் சோட்ரானி ஆகியோர் வெற்றியை தேடித்தந்தனர். தொடர்ந்து இந்திய அணி 2-1 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தையும் பதம் பார்த்து கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தது. இதே போல் பலம் வாய்ந்த அணியான எகிப்து அணி சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவை தலா 3-0 என்ற கணக்கில் பந்தாடி அடுத்த சுற்றை எட்டியது. #India #WorldJuniorSquash
    13-வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் எகிப்து வீரர் மோஸ்தபா அசல், வீராங்கனை ரோவன் ரெடா அராபி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்கள். #WorldJuniorSquash #Championship #MostafaAsal #RowanReda
    சென்னை:

    13-வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் எகிப்து வீரர் மோஸ்தபா அசல் 11-7, 13-11, 11-4 என்ற நேர்செட்டில் நடப்பு சாம்பியன் மார்வன் டாரெக்கை (எகிப்து) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

    பெண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ரோவன் ரெடா அராபி (எகிப்து) 11-4, 11-9, 10-12, 11-9 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனை ஹனியா எல் ஹம்மாமியை தோற்கடித்து மீண்டும் சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். உலக ஜூனியர் அணிகள் சாம்பியன்ஸ் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் இந்தியா உள்பட 24 நாடுகள் கலந்து கொள்கின்றன.  #WorldJuniorSquash #Championship #MostafaAsal #RowanReda
    உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் மார்வன், ரோவன் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர். #WorldJuniorSquash #Rowan #Marwan
    சென்னை:

    13-வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் போட்டித் தரநிலையில் முதலிடம் வகிக்கும் நடப்பு சாம்பியன் மார்வன் டாரெக் (எகிப்து) 11-9, 6-11, 11-8, 2-11, 11-8 என்ற செட் கணக்கில் போராடி சக நாட்டவர் ஓமர் எல் டோர்கியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் எகிப்தின் மோஸ்தபா அசல் 11-3, 11-7, 11-7 என்ற நேர் செட் கணக்கில் மோஸ்தபா எல் செர்டியை விரட்டினார். இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் மார்வன் டாரெக்- மோஸ்தபா அசல் மோத உள்ளனர்.



    பெண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் ரோவன் எலராபி (எகிப்து) 11-5, 13-11, 11-6 என்ற நேர் செட் கணக்கில் 40 நிமிடங்களில் சக நாட்டவர் ஜனா ஷிகாவை வெளியேற்றி இறுதிசுற்றை எட்டினார். மற்றொரு அரைஇறுதியில் எகிப்தின் ஹனியா எல் ஹம்மாமி 11-6, 8-11, 11-4, 11-4 என்ற செட் கணக்கில் சக நாட்டவர் லுசி டர்மலை தோற்கடித்தார். 
    உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீரர் ராகுல் பாய்தா, சுவிட்சர்லாந்து வீரர் நில்ஸ் ரோச்சை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    சென்னை:

    இந்திய ஸ்குவாஷ் பெடரேஷன் மற்றும் தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கம் சார்பில், உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னை நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் நேற்று தொடங்கியது.

    இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ராகுல் பாய்தா 11-5, 12-10, 11-8 என்ற செட் கணக்கில் சுவிட்சர்லாந்து வீரர் நில்ஸ் ரோச்சை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் யாஷ் பத்டே 10-12, 11-7, 11-7, 11-6 என்ற செட் கணக்கில் ஜெர்மனி வீரர் அப்டெல் ரஹ்மாவை தோற்கடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்ற ஆட்டங்களில் இந்திய வீரர்கள் அட்வைத் அடிக், உட்கர்ஷ் ஆகியோர் தோல்வி கண்டு வெளியேறினார்கள். 
    இந்திய ஸ்குவாஷ் பெடரேஷன் மற்றும் தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கம் சார்பில், உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.
    சென்னை:

    இந்திய ஸ்குவாஷ் பெடரேஷன் மற்றும் தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கம் சார்பில், உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டி நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமி மற்றும் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் இன்று (புதன்கிழமை) முதல் 29-ந் தேதி வரை நடக்கிறது. முதல் 6 நாட்கள் தனிநபர் சாம்பியன்ஷிப் போட்டியும், இதனை தொடர்ந்து அணிகள் சாம்பியன்ஷிப் போட்டியும் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா, எகிப்து, ஆஸ்திரேலியா, மலேசியா, சவுதிஅரேபியா, சிங்கப்பூர், ஸ்காட்லாந்து உள்பட 28 நாடுகளை சேர்ந்த 170 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

    உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியை நடத்த தமிழக அரசு ரூ.50 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது. இதற்கான காசோலையை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்க தலைவர் என்.ராமச்சந்திரனிடம் வழங்கினார்.

    ×