என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "chமீ டூ"
சென்னை:
பணி செய்யும் இடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அத்துமீறல் குறித்தும் அடையாளம் காட்டும் வகையில் ‘மீ டூ’ (நானும் தான்) என்ற தலைப்பில் பல்வேறு துறைகளை சேர்ந்த பெண்கள் டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்காக ‘மீ டூ’ என்ற பெயரில் ஒரு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதுவே தற்போது டுவிட்டரில் பிரசாரமாக உருவெடுத்துள்ளது.
பாலியல் அத்துமீறலை அம்பலப்படுத்தும் விதமாக தொடங்கிய இந்த பிரசாரம் தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பெண்களால் கையில் எடுக்கப்பட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா, படப்பிடிப்பின் போது நடிகர் நானா படேகர் தன்னிடம் அத்துமீறியதாக புகார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மத்திய மந்திரி அக்பர் உள்பட பலருக்கு எதிராக மீ டூ பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.
அரசியல், திரை உலகம் என பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்கள் மீதும் பாலியல் புகார்கள் இப்போது வெளிஉலகுக்கு தெரியவருகிறது.
தமிழகத்தில் பிரபல திரைப்பட பாடல் ஆசிரியரான கவிஞர் வைரமுத்து மீது பத்திரியாளர் சந்தியா மேனன் மற்றும் பாடகி சின்மயி ஆகியோர் அடுத்தடுத்து ‘மீ டு’ ஹேஸ்டேக்கில் புகார் தெரிவித்தது தற்போது பரபரப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு டுவிட்டரில் பதில் அளித்த வைரமுத்து அறியப் பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரீகம் நாடு எங்கும் இப்போது நாகரீகமாகி வருகிறது.
சமீப காலமாக நான் தொடர்ச்சியா அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன். அதில் இதுவும் ஒன்று. உண்மைக்கு புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவது இல்லை. உண்மையை காலம் சொல்லும் என்று தெரிவித்தார்.
பாடகி சின்மயி கருத்துக்கு திரைப்பட பிரபலங்களான சமந்தா, சித்தார்த், வரலட்சுமி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் ‘மீ டூ’ பிரசாரத்துக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
மீடு பிரசாரம் இன்னும் பல விவாதங்களை காண வேண்டும். இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் தங்களை தாங்களே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
உண்மையை இந்த உலகுக்கு சொல்ல வேண்டும். பாலியல் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்த முயற்சியை ஆதரிப்போம். முகமூடிக்கு பின் ஒளிந்திருக்கும் முகங்களை பெண்கள் அடையாளம் காட்டட்டும். பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று கூறி உள்ளார். #kanimozhi #metoo
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்