search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "caught"

    • மதுரையில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மதுரை பெரியார் பஸ் நிலையம், ஆட்டோ ஸ்டாண்ட் அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் வந்தது.

    மதுரை

    மதுரை தென்பரங்குன்றம், தேவர் சிலை அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக திருப்பரங்குன்றம் போலீசுக்கு தகவல் வந்தது. இதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அப்போது அங்கு பதுங்கி இருந்த ஒருவர் பிடிபட்டார். அப்போது அவரிடம் 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர் தென்பரங்குன்றம் சேகர் மகன் நாகராஜ் (வயது 22) என்பது தெரிய வந்தது. அவரை திருப்பரங்குன்றம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை பெரியார் பஸ் நிலையம், ஆட்டோ ஸ்டாண்ட் அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதன் அடிப்படையில் திடீர் நகர் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அப்போது பெரியார் பஸ் நிலையத்தில் பதுங்கி இருந்த ஒருவர் பிடிபட்டார். அவரிடம் 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர் சிவகங்கை மாவட்டம், திருபுவனத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 40) என்று தெரிய வந்தது. அவரை திடீர் நகர் போலீசார் கைது செய்தனர்.

    • வெள்ளைக்கால்பட்டி கிராமத்தில் குப்பை கொட்டிய லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
    • அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வெள்ளைக்கல்பட்டி கிராமம் சேலம் மாநகராட்சி எல்லையை ஒட்டியுள்ளது.

    இந்த கிராமத்தின் எல்லையில் அரபி கல்லூரி, தனியார் பள்ளி கல்லூரிகள், தகவல் தொழில்நுட்ப பூங்கா, துணை மின் நிலையம் ஆகியவை உள்ளது.

    மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் உள்ளன.இந்த நிலையில், பள்ளி, கல்லூரி, தகவல் தொழில்நுட்ப பூங்கா ஆகிவற்றிற்கு செல்லும் சாலையின் ஓரத்தில் துர்நாற்றம் வீசும் குப்பைகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது.

    இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் வெள்ளைக்கல்பட்டி ஊராட்சி தலைவரிடம் புகார் அளித்தனர். குப்பைகளை இங்கே கொட்டக்கூடாது,

    குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். கிராம ஊராட்சி சார்பாக குப்பை கொட்டாத நிலையில், வேறு யார் குப்பை கொட்டுகிறார்கள் யார் என்பதை கண்டுபிடிக்க ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் சேலம் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பை–களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. அந்த லாரி குப்பையை பள்ளியின் முன்பாக உள்ள ஒரு மறைவிடத்தில் கொட்டிவிட்டு சென்றது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் லாரியை உடனடியாக சிறை பிடித்தனர். குப்பை கொட்டிய இடத்தில் சென்று பார்க்கும்போது, உணவு விடுதி கழிவுகள், கண்ணாடி கழிவுகள், மருத்துவ கழிவுகள், என அனைத்து வகை கழிவுகளும் கொட்டப்பட்டிருந்தது. இதையடுத்து கருப்பூர் போலீசாருக்கும் சேலம் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்–பட்டது. மேலும், சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், துணை தலைவர் ராஜா மற்றும் நிர்வாகிகள் விரைந்து வந்தனர்.

    ஒப்பந்த வாகனங்களில் கொண்டு வந்து குப்பை கொட்டுவதை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும், மாநகராட்சி அதிகாரிகள் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    • சி.சி.டி.வி. கேமிரா காட்சி அடிப்படையில் டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
    • அவர்களிடம் இருந்து 10.5 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (60). கடந்த 6-ந் தேதி வெளியே சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இவர் கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

    இதேப்போல் தாலுகா, வீரப்பன்சத்திரம் பகுதிகளிலும் அடுத்தடுத்து நகை பறிப்பு சம்பவம் நடந்தது. இதையடுத்து அந்த பகுதியில் பொருத்த ப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சி அடிப்படையில் டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 14-ந் தேதி திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஹரிஹரன் (23), கோபிநாத் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 7.25 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அதுசமயம் இவர்களுடன் சேர்ந்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த திருப்பூரை சேர்ந்த ஜனகராஜ் மற்றும் பிரபாகரனை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று வாகன சோதனையில் இருவரும் சிக்கினர். இதில் ஜனகராஜ் மட்டும் ஈரோட்டில் 8 இடங்களில் செல்போன், நகை பறிப்பில் ஈடுபட்டு உள்ளார். 9-வது முறையாக ஜனகராஜ் நகை பறிப்பில் ஈடுபட முயன்றபோது போலீசாரிடம் சிக்கியு ள்ளார்.

    இவர்களிடம் இருந்து 10.5 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    கூடலூர் அருகே தேயிலை தோட்டத்தில் 15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
    கூடலூர்:

    கூடலூர் பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த வனப்பகுதி மற்றும் தேயிலை தோட்டங்கள் இருக்கிறது. வனப்பகுதியில் காட்டுயானை, புலி, மான், காட்டெருமை, சிறுத்தைப்புலி, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. மேலும் மலைப்பாம்பு, ராஜ நாகம், கட்டு விரியன் என பல வகை பாம்புகளும் வசித்து வருகின்றன.

    வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் மற்றும் பாம்புகள் அடிக்கடி தேயிலை தோட்டங்கள், குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    கூடலூர் தாலுகா கீழ்நாடுகாணியில் ஒரு தனியார் தேயிலை தோட்டம் உள்ளது. இங்கு வழக்கம்போல் நேற்று தோட்ட தொழிலாளர்கள் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தேயிலை செடிகளுக்கு அடியில் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து வந்தது. இதை கண்ட தொழிலாளர்கள் பயத்தில் அலறியடித்தவாறு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். மேலும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் தேவாலா வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர்.

    தொடர்ந்து கீழ்நாடுகாணியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் அந்த பாம்பை பத்திரமாக விட்டனர்.

    சூளகிரி அருகே உத்தனபள்ளி பகுதியில் வீட்டிற்குள் திடீரென புகுந்த பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.
    வேப்பனஹள்ளி:

     கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா சூளகிரி உத்தனபள்ளி பகுதியை சேர்ந்தவர் சாந்தமோகன் (வயது 40), ஆசிரியர். இவரது மனைவி வைதேகி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்கள் காலை வழக்கம்போல் வீட்டில் குழந்தைகளுடன் இருந்தனர்.

    சுமார் காலை 9 மணி அளவில் இவர்களது வீட்டிற்குள் 6 அடி நீளம் கொண்ட நாகபாம்பு ஒன்று திடீரென புகுந்தது. இதை கண்டு அலறியடித்து அவர்கள் வீட்டைவிட்டு வெளியில் வந்தனர். பாம்பை பிடிக்க மக்கள் முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. பின்பு சமூக ஆர்வலர்களால் ஓசூரில் உள்ள பாம்பு பிடி மன்னன் வெங்கடேஷ் (30) வரவழைக்கப்பட்டார். அவர் சில நிமிடத்துக்குள் பாம்பை வீட்டிற்கு வெளியில் வரவைத்து லாவகமாக பிடித்து பாட்டிலில் அடைத்தார்.

    பின்னர் வெங்கடேஷ் கூறியதாவது:-

    பாம்புகளை தொந்தரவு செய்ய வேண்டாம் பாம்பு பிடிக்க சிலர் குறைந்த அளவான தொகை பணம் தருவது உண்டு. அந்த பணத்தை ஓசூர் பகுதியில் உள்ள அனாதை இல்லத்தில் உள்ளவர்களுக்கு சாப்பாட்டிற்கு மற்றும் அரிசி, மளிகை பொருட்கள் ஆகியவை வாங்கி கொடுத்து விடுவேன் என்றார். மேலும்,  பாம்புகளை பார்த்தால் அதை  தொந்தரவு செய்ய வேண்டாம். எங்களை அழைத்தால்போதும். அதை பிடித்து காட்டில் விட்டு விடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×