search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Candidature filing"

    • தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவியேற்பு விழா வருகிற 15-ம் தேதி நடைபெற உள்ளது.
    • வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் நாளை கடைசி நாள் ஆகும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசியதாவது

    தஞ்சை மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட காலி பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்திட தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் கால அட்டவணை வரப் பெற்றுள்ளது.

    அதன்படி வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் நாளை கடைசி நாள் ஆகும்.

    வருகிற 9-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவியேற்பு விழா வருகிற 15-ஆம் தேதி நடைபெற உள்ளது.

    ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 2 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடம், 26 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடம், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தஞ்சை மாநகராட்சி வார்டு -8 மற்றும் அய்யம்பேட்டை பேரூராட்சியில் வார்டு -9 என மொத்தம் 30 உள்ளாட்சி பதவி இடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 32 வாக்குச்சாவடி மையங்களும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 5 வாக்குச்சாவடி மையங்களும் என மொத்தம் 37 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்தத் தேர்தலில் 6704 ஆண் வாக்காளர்களும், 6986 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 13690 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

    ×