search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Call"

    • மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் பனியன் ஏற்றுமதி நிறுவ–னம்
    • ஆடைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி

    திருப்பூர், நவ.21-

    திருப்பூரில் பின்னலாடை தொழில் பிரதானமாக நடந்து வருகிறது. நூல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக கடந்த சில மாதங்களாக பனியன் தொழில் மந்தநிலையில் காணப்படுகிறது. இந்தநிலையில் வெளிமாநில அரசு, தங்கள் மாநிலங்களில் பனியன் தொழில் தொடங்க திருப்பூர் பனியன் தொழில் துறையினருக்கு அழைப்பு விடுத்து வருகிறார்கள்.

    அதன்படி மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த அரசு அதிகாரிகள் 4 பேர் கொண்ட குழு–வி–னர் திருப்–பூர் வந்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகளை சந்தித்தனர். ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் திருக்குமரன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், இணை செயலாளர் சின்னசாமி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாக செயலாளர் சக்திவேல் ஆகியோர் பங்கேற்றனர்.

    மத்திய பிரதேச மாநில அரசின் வெளியுறவுத்துறை கூடுதல் செயலாளர் மணிஷ் சிங் தலையில் அதிகாரிகள் வந்தனர். ஏற்கனவே திருப்பூரை சேர்ந்த ஏற்றுமதியாளர் ஒருவர், மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் அமைத்–துள்ளார். இதைத்தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்தில் புதிதாக தொழில் தொடங்க வருபவர்களுக்கு அரசு சார்பில் அளிக்கப்படும் சலுகைகள் குறித்து எடுத்துக்கூறினார்கள்.

    கூடுதல் தொழிலாளர்கள், தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உதவி, மின்கட்டண சலுகை, தொழில் முதலீட்டுக்கடன் சலுகை, ஆடைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய 400 கிலோ மீட்டர் தூரத்தில் துறைமுகவசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள், சலுகைகள் குறித்து விளக்கி கூறினார்கள். தங்கள் மாநிலத்துக்கு வந்து பனியன் ஏற்றுமதி நிறுவனங்–களை தொடங்–கி–னால் சலுகை அளிப்பதாகவும், முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அழைப்பு விடுத்தனர்.

    • வேளாண் வளர்ச்சித்திட்டம் என்ற புதிய திட்டத்தினை இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு, வேளாண்மை – உழவர் நலத்துறை யால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    • உயிரியியல் கட்டுப்பாட்டு காரணிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் ஆகியவை 50சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) ராஜ கோபால், வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளின் உடனடி தேவையை பூர்த்தி செய்யவும், அவர்களின் வருமானத்தை உயர்த்தவும், பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய மாநில வேளாண் வளர்ச்சித்திட்டம் என்ற புதிய திட்டத்தினை இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு, வேளாண்மை – உழவர் நலத்துறை யால் அறிமுகப்ப டுத்தப்பட்டுள்ளது. தென்னை வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தென்னையில் காய்ப்புத்தி றனை அதி கரிக்கவும், எண்ணெய் சத்தை உயர்த்தவும், குரும்பை உதிர்வைத் குறைக்கவும், தென்னை நுண்ணூட்டம், பசுந்தாள் உரப் பயிர் விதை, உயிர் உரங்கள், போராக்ஸ் ஆகியவை 50 சதவீதம் மானியத்திலும், ஒருங்கிணைந்த முறையில் பூச்சி, நோய் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறி, உயிரியியல் கட்டுப்பாட்டு காரணிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் ஆகியவை 50சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. மேலும் தென்னையில் நிலக்கடலை மற்றும் பயறுவகைப் பயிர்கள் ஊடுபயிர்சாகுபடி குறித்த செயல் விளக்கதிடல் அமைக்கவும் மானியம் வழங்கப்பட உள்ளது.

    தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் தென்னை வருமானத்தை உயர்த்தி கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • சேலம் மாவட்டத்தில் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது.
    • இதற்கு விண்ணப்பிக்க உதவிடும் வகையில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை உதவி மையம் செயல்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையம், அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையம், மேட்டூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் கருமந்துறை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க உதவிடும் வகையில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை உதவி மையம் செயல்பட்டு வருகிறது.

    வெல்டர், பெயிண்டர் (பொது), போன்ற பிரிவுகளுக்கு 8-ஆம் வகுப்பிலும், பிட்டர், மெசினிஸ்ட் கிரைண்டர், கம்மியர் கருவிகள், மெசினிஸ்ட், டர்னர், மோட்டார் மெக்கானிக், ஹஊ மெக்கானிக், கோபா, போன்ற பிரிவுகளுக்கு 10-ஆம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    நேரடி சேர்க்கைக்கு வரும்பொழுது கைபேசி எண், இ மெயில் ஐ.டி, ஆதார் எண், மதிப்பெண் சான்றிதழ் (அசல்), மாற்றுச் சான்றிதழ் (அசல்), சாதிச் சான்றிதழ் (அசல்), முன்னுரிமை கோரினால் முன்னிரிமை சான்றிதழ் (அசல்) மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்துவர வேண்டும். சாதிச் சான்றிதழ் இல்லையெனில் பொதுப்பிரிவில் தேர்ந்தெடுக்கப்படு வார்கள். விண்ணப்பக் கட்டணம் மற்றும் இதரக் கட்டணம் ரூ.245 ஆகும். பயிற்சிக் கட்டணம் இல்லை.

    அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி பெறும் மாணவர்க ளுக்கு இலவசமாக சைக்கிள், சீருடை, பாட நூல், வரைபடக் கருவி, காலணி, பஸ்பாஸ், மாதாந்திர உதவித்தொகை ரூ.750 மற்றும் சலுகைகள் வழங்கப்படும். மேலும், பயிற்சி முடித்த பின் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலை பெற்றுத் தரப்படும். தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி வழங்கப்படும்.

    முதலில் வருபவர்களுக்கு முன்னிரிமை என்பதால் உடனடியாக பயிற்சியில் சேருமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சேலத்தில் குறுகிய கால தொழிற்பயிற்சிக்கான சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. நேரடி சேர்க்கை வருகிற 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்த தகவலை சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.

    • சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 26ந் தேதி பூச்சாட்டுதலுடன் ஆடித்திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.
    • தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜை செய்யப்படுகிறது.

    சேலம்:

    சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 26ந் தேதி பூச்சாட்டுதலுடன் ஆடித்திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜை செய்யப்படுகிறது.

    இதனால் சேலம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.


     



    விடுமுறை நாளான நேற்று கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் தங்களது வீடுகளில் இருந்து சமைத்து கொண்டு வந்த ராகி கூழ், கம்மங்கூழ், மோர், சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், லெமன் சாதம், புளி சாதம் உள்ளிட்டவைகளை பொதுமக்களுக்கு அன்னதானமாக வழங்கினர்.

    ஆடித் திருவிழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) மற்றும் 11, 12ந் தேதி ஆகிய 3 நாட்களில் பக்தர்கள் பொங்கல் வைத்தல், மாவிளக்கு நேர்த்திக்கடன் செலுத்தலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதனால் கோவிலுக்கு விடிய, விடிய அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொங்கல் வைக்கும் இடமான கோவில் பின்புறம் பக்தர்களின் வசதிக்காக தண்ணீர், அடுப்பு போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வருகிற 16ந் தேதி காலை 10.30 மணிக்கு பால்குட விழாவும், தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார ஆராதனையும் நடக்கிறது. 

    • முன்னுரிமை அடிப்படையில் திட்டங்களை விவசாயிகள் இதுவரை பெற்று வந்தனர்.
    • தோட்டக்கலைத்துறையில் திட்டங்களுக்கு மானியம் பெற விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு க்கொள்ளப்படுகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டார தோட்டக்க லைத்துறை உதவி இயக்குநர் கோதைநாயகி வெளியிட்டுள்ளசெய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ள தாவது:-

    தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்துறையின் கீழ் பல்வேறு திட்டங்களில் பயன் பெறுவதற்கு, உழவன் செயலியில் பதிவு செய்து முன்னுரிமை அடிப்படையில் திட்டங்களை விவசாயிகள் இதுவரை பெற்று வந்தனர்.

    சொட்டு நீர் பாசன திட்டத்திற்கு மட்டுமே இணைய தளத்தில் பதிவு செய்து பயன்பெறும் வகையில் வசதிகள் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், நடப்பு ஆண்டு 2022-2023 -ல் அனைத்து விவசாயிகளும் இணையதளத்தில் https://tnhorticulture.tn.gov.in என்ற முகவரியை பயன்படுத்தி பதிவு செய்தால் மட்டுமே மானியம் பெற இயலுமென தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.

    எனவே, பெத்தநா யக்கன்பாளையம் வட்டாரத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் மேற்கண்ட இணையதள முகவரியை பயன்படுத்தி தோட்டக்கலைத்துறையில் திட்டங்களுக்கு மானியம் பெற விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு க்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • கபிலர்மலை வட்டாரத்தில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற கிராம ஊராட்சிகளில் மாற்றும் தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
    • இத்திட்டம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தி னசிறுநல்லிகோவில், சுள்ளிபாளையம், குப்பிரிக்காபாளையம், வடகரையாத்தூர் மற்றும் ஆனங்கூர் ஆகிய கிராம ஊராட்சிகளில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இத்திட்டத்தில் 15 ஏக்கர் நிலப்பரப்பு வரை ஒரு தொகுப்பாகவும் 15 முதல் 35 ஏக்கர் நிலப்பரப்பு வரை 2-வது தொகுப்பாகவும் ஏற்படுத்தப்படும். திட்டத்திற்கு தகுதியாக தேர்வு செய்யப்படும் தரிசு நிலங்கள் கிராம ஊராட்சிக்குள் இருக்க வேண்டும்.

    தரிசு நில தொகுப்பின் பரப்பு தொடர்ச்சியாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு தொகுப்பிற்கு 8 விவசாய பயனாளிகள் இருக்க வேண்டும். பயனாளிகள் அக்கிராம ஊராட்சிகளிலோ அல்லது அருகில் உள்ள கிராமங்களிலோ வசிப்பவராக இருக்க வேண்டும். இத்திட்டம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம் என்று கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராதாமணி தெரிவித்துள்ளார்.

    • பிள்ளைகளத்தூர் கிராமத்தில் “சிறு குறு விவசாயி சான்று பதிவு செய்யும் முகாம்” பிள்ளைகளத்தூர் கிராம சேவை மையத்தில் நடைபெறுகிறது.
    • மேலும் விபரங்களுக்கு பரமத்தி உதவி வேளாண்மை அலுவலர் ரகுபதியை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்.செ.கோவிந்தசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பரமத்தி வட்டார வேளாண்மை - உழவர் நலத்துறையின் கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்ட கிராமமான பிள்ளைகளத்தூர் கிராமத்தில் "சிறு குறு விவசாயி சான்று பதிவு செய்யும் முகாம்" பிள்ளைகளத்தூர் கிராம சேவை மையத்தில் நடைபெறுகிறது.

    சிறு குறு விவசாயிகள் அனைவரும் தவறாமல் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேலும் சிறு குறு விவசாயி சான்று பதிவு செய்ய தேவையான ஆவணங்கள் - 1.ஆதார் அட்டை நகல், 2. குடும்ப அட்டை நகல், 3. புகைப்படம் 4. கணணி சிட்டா (பதிவு செய்ய வரும் அலுவலர்களிடம் சர்வே எண்ணை கூறினால் எடுத்துக் கொடுப்பார்கள்) உடன் எடுத்து வந்து சிறு குறு விவசாயி சான்று பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. ேலும் விபரங்களுக்கு பரமத்தி உதவி வேளாண்மை அலுவலர் ரகுபதியை தொடர்பு கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது.
    • ஒருவர் ஒரு பிரிவு போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (திருப்பூர் விளையாட்டுத்துறை) சார்பில் நடைபெற உள்ள மாவட்ட கேரம் போட்டியில் ஆர்வமுள்ள மாணவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நடப்பாண்டுக்கான கேரம் போட்டி வரும், 29-ந் தேதி சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது. மாவட்டத்தைச்சேர்ந்த 5-ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். முதல்பரிசு ஆயிரம் ரூபாய், 2வது மற்றும் 3வது பரிசு முறையே 500 மற்றும், 250 ரூபாய்.ஒற்றையர், இரட்டையர் என பிரிவுகளாக போட்டி நடக்கும். ஒருவர் ஒரு பிரிவு போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும்.மாணவர்கள் தங்களின் முழுவிபரங்களை sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பவர் மட்டுமே போட்டிக்கு அனுமதிக்கப்படுவர்.போட்டியாளர்கள் தங்கள் வங்கிக்கணக்கு எண், பாஸ்புக், பள்ளியில் பயில்வதற்கான படிப்பு சான்றிதழ் தலைமை ஆசிரியர்களிடம் பெற்று போட்டிக்கு வரவேண்டும். போட்டி நடக்கும் நாளன்று காலை, 8:30 மணிக்கு அரங்கில் இருத்தல் வேண்டும். தகவல்களுக்கு 7401703515 என்ற எண்ணில் அழைக்கலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×