search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "burglary"

    • வீட்டிற்கு திரும்பிய போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • 40சவரன் நகை,கால் கிலோ வெள்ளி பொருட்கள் பத்தாயிரம் பணம் ஆகியவை திருட்டுப் போனது தெரியவந்தது.

    திண்டிவனம் சாய் லட்சுமி நகரை சேர்ந்தவர் சசிவிக்குமார். இவர் கருவம்பாக்கம் அரசுப் பள்ளியில்ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லதா. விழுக்கத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று சசிவிக்குமார்தனது மனைவி மற்றும் மகள், மகன் ஆகியோர் காலை பள்ளிக்கு சென்று விட்டனர்.நேற்று மாலை 5 மணி அளவில் வீட்டிற்கு திரும்பிய போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கே படுக்கை அறையில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தது, மேலும், அங்கிருந்த இரண்டு பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 40சவரன் நகை,கால் கிலோ வெள்ளி பொருட்கள் பத்தாயிரம் பணம் ஆகியவை திருட்டுப் போனது தெரியவந்தது. இது குறித்து ஆசிரியர் சசிவிகுமார்.ரோசனை போலீசில் புகார் செய்தார். தகவல் அறிந்த திண்டிவனம் ஏ.எஸ்.பி. அபிஷேக் குப்தா தலைமையிலான போலீசார்அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து தடயவியல் நிபுண ஏடிஎஸ்பி சோமசுந்தரம்,சப் இன்ஸ்பெக்டர்கள் தக்ஷிணாமூர்த்தி,கல்பனா காவலர் சரவணன் கொண்ட குழு வரவழைத்து கொள்ளை நடந்த இடத்தில் கிடைத்த தடயங்களைச் சேகரித்தனர்.

    கொள்ளை நடந்த வீட்டில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு இருந்தது. அதனை கொள்ளையர்கள் துண்டித்து உள்ளனர். விழுப்புரத்தில் இருந்து மோப்பநாய் ராக்கி வர வைக்கப்பட்டுஅங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் திருவள்ளுவர் நகர் வரை சென்று நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இது தவிர அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்கள் மூலம் போலீசார் கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்கி வருகிறார்கள்

    • அரசு ஆஸ்பத்திரி ஊழியர் வீட்டில் கொள்ளை நடந்துள்ளது.
    • முன் கதவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து, பீரோவில் இருந்த 20 பவுன் பவுன்மற்றும் 83 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    மதுரை

    மதுரை தோப்பூர், கண்மணி தெருவை சேர்ந்தவர் கோமதிநாயகம் (வயது55). இவர் மேலஉரப்பனூரில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரியில், சுகாதார ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்.

    இந்த நிலையில் கோமதிநாயகம் சம்பவத்தன்று மதியம் வீட்டை பூட்டிவிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டைக்கு புறப்பட்டு சென்றார்.

    அப்போது யாரோ மர்ம நபர்கள் முன் கதவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து, பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகை மற்றும் 83 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    இந்த நிலையில் கோமதிநாயகம் நேற்று இரவு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நகை, பணம் திருடப்பட்டு இருந்தது. இது தொடர்பாக கோமதிநாயகம் ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • இந்த நிலையில் சம்பவத்தன்று ஆறுமுகம் வீட்டை பூட்டிவிட்டு பெங்களூரில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்று விட்டார்.
    • இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆறு முகம் (வயது 63). அந்த பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரது மகன்கள் வெளியூரில் உள்ளதால் அடி க்கடி வீட்டை பூட்டி விட்டு ஆறுமுகம் வெளியூருக்கு சென்று வருவது வழக்கம்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று ஆறுமுகம் வீட்டை பூட்டிவிட்டு பெங்களூரில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதையடுத்து ஆறுமு கத்தின் உறவினர் அந்த வழியாக வந்தார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவரது உறவினர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.

    கொள்ளையர்கள் கதவை உடைத்து திருட முயற்சி செய்தது தெரிய வந்தது. ஆனால் அங்கு பணம் மற்றும் நகைகள் இல்லாததால் கொள்ளையர்கள் திரும்பி சென்றனர்.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சென்னையில் ரெயில்வேயில் வேலை பார்த்து வரும் ஊழியர் கண்ணன் கொடை விழாவுக்காக நெல்லை வந்துள்ளார்.
    • வீட்டில் நகை பணம் இல்லாததால் கொள்ளையர்கள் குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.

    நெல்லை:

    நெல்லை பேட்டை அருகே உள்ள கோடீஸ்வரன் நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 55).

    ரெயில்வே ஊழியர்

    இவர் சென்னை பெரம்பூர் ரெயில் நிலையத்தில் கிளர்க்காக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி கோமளவள்ளி. இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர்கள் அங்கேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் பாளையில் உள்ள கோவில் திருவிழாவிற்காக கண்ணன் குடும்பத்துடன் நெல்லை வந்தார். பின்னர் கொடை விழா முடிந்ததும் இன்று அதிகாலை கோடீஸ்வரன்நகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார்.

    அப்போது அவரது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போய்விட்டது.

    மேலும் பீரோவில் இருந்த பொருட்களும் சிதறி கிடந்தன. இதுதொடர்பாக அவர் பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்னலெட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அதில் நகை பணம் இல்லாததால் கொள்ளையர்கள் குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. திருட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • வீட்டின் கதவை உடைத்து 9 பவுன் நகை-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
    • இதனை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ராயல் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 37). சம்பவத்தன்று இவரது மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து விஜயகுமார் வீட்டை பூட்டிவிட்டு மனைவியை சிகிச்சைக்காக மதுரைக்கு அழைத்துச் சென்றார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 9 பவுன், 4 கிராம் நகை, ரூ,1000 ரொக்கம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர். இதுகுறித்து விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு நகை, பணத்தை கொள்ளை யடிப்பது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • மயிலம் அருகே வீடு புகுந்து மர்ம நபர்கள் பணத்தைத் திருடிச் சென்றனர்.
    • பீரோவை உடைத்து பீரோவில்இருந்த 5 ஆயிரம் ரொக்க பணத்தை திருடி சென்றனர்.

    விழுப்புரம்:

    மயிலம் அருகே செக்கம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கோபால் மனைவி பாலா (வயது 60) . கணவர் இல்லை வீட்டில் தனியாக வாஸ்து வருகிறார் இவர் நேற்று முன்தினம் விழுப்புரம் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அறிந்த மர்ம நபர்கள் இவரு வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே நுழைந்து பீரோவில் உடைத்து விரைவில் இருந்த 5 ஆயிரம் ரொக்க பணத்தை திருடி சென்றனர். இது குறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பழங்காநத்தம் பகுதியில் 3 வீடுகளில் புகுந்து பணம் திருடப்பட்டது.
    • இது குறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை பழங்காநத்தம், மாடக்குளம் மெயின் ரோடு, மருதுபாண்டியர் நகர், 3-து தெருவை சேர்ந்தவர் ராஜ பிரபு (31).

    அதிகாலை இவருடைய வீட்டில் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த ரூ. 5 ஆயிரத்தை திருடிக்கொண்டு தப்பினார். இதுகுறித்து ராஜ பிரபு எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (34). இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர் ரூ.8,700-ஐ திருடிச்சென்று விட்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்குப்பதிவுசெய்து மேற்கண்ட 2 வீடுகளிலும் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    பழங்காநத்தம் வடக்கு தெருவை சேர்ந்த சேகர் மனைவி ராமலட்சுமி (39). இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர் ரூ.40 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • சதீஷ்குமார் பல்லடம் போலீசில் புகார் அளித்தார்.
    • பல்லடம் அருகே மதனபுரி டவுனில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    பல்லடம்,

    திருநெல்வேலியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்( வயது 32) . இவர் தற்போது பல்லடம் அருகேயுள்ள சாமளாபுரம் தனியார் பனியன் நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 7 ந்தேதி இரவு நண்பரைப் பார்க்க பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டை சென்று விட்டு அங்குள்ள நால்ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை வழிமறித்த 2 வாலிபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.3,500 பணத்தை பிடிங்கிக் கொண்டு சென்றுவிட்டனர்.

    இதையடுத்து சதீஷ்குமார் பல்லடம் போலீசில் புகார் அளித்தார். இந்த நிலையில் கரணம்பேட்டை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக சென்ற 2 வாலிபர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் சதீஷ்குமாரிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் சிவகங்கையை சேர்ந்த மாசானம் மகன் அருண் (வயது 22,) அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் சக்திவேல் ( 21) என்பதும் தெரிய வந்தது. மேலும் இவர்கள் பல்லடம் அருகே மதனபுரி டவுனில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 4.3/4 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வழிப்பறியில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை

    தேனி மாவட்டம், தெற்கு ஜெகநாதபுரம், ஊமைத்துரை தெருவைச் சேர்ந்தவர் சுதர்சன் (வயது 32). இவர் நேற்று காலை ஆத்திகுளத்துக்கு வந்தார். அவரிடம் 6 பேர் கும்பல் கத்திமுனையில் ரூ. ஆயிரத்தை பறித்து சென்றது.

    இதுகுறித்த புகாரின் அடிப்படையில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட ஜேம்ஸ்ராஜா, வெற்றிவேல்முருகன், பாக்யராஜ் என்ற ராஜா, மணிகண்டன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய சின்னமுத்து, சின்னத்தம்பி ஆகியோரை தேடி வருகின்றனர்.

    தேனி மாவட்டம், அனுமந்தன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் நிவாஸ் (26). இவர் நேற்று சின்ன சொக்கிகுளம், பழைய அக்ரஹாரம் தெரு அருகே நடந்து சென்றார். அங்கு வந்த 3 பேர் கும்பல், கத்தியை காட்டி மிரட்டி ரூ. 2 ஆயிரத்பதை பறித்துச்சென்றது.

    இதுகுறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பீ.பீ.குளம், நபிகள் நாயகம் தெரு, ஹக்கீம் மகன் அல்-முபின் (22), நரிமேடு தாமஸ் தெரு அய்யனார் மகன் விக்னேஸ்வரன் (22), விஜய் (26) ஆகிய 3 பேரை கைது செய்தனர். 

    ×