search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "burglary"

    • வீட்டிற்கு சென்று விட்டு வந்து பார்க்கும் போது வீடு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அண்ணாமலை நகர் பகுதி சேர்ந்தவர் பெருமாள் மனைவி செல்வி (வயது 54). இவர் கூலி வேலை செய்து வருகிறார் . சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டிவிட்டு சாவியை வாசலின் மீது வைத்துவிட்டு தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டு வந்து பார்க்கும் போது வீடு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. இதையடுத்து செல்வி கொடுத்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் கள்ளுக்கடை மூலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பஸ்ஸில் இருந்து இறங்கிய ஒரு நபர் போலீசை கண்டதும் வேகமாக அங்கிருந்து ஓட முயன்றுள்ளார். அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் கட்டபொம்மன் நகரை சேர்ந்த அமீர் அப்பாஸ் (45) என்பதும் அவரை திருவெண்ணைநல்லூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் சிறுமதுரை சார்ந்த செல்வி வீட்டில் நகை திருடியது தெரியவந்தது .மேலும் அமீர் ஆப்பாஸிடம் சோதனை செய்து 2 பவுன் நகையை பறிமுதல் செய்த திருவெண்ணைநல்லூர் போலீசார் அமீர் அப்பாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • வெள்ளிப் பட்டறையில் வேலை செய்து வருகிறார்.
    • இரவு வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    சேலம்:

    சேலம் கந்தம்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 42). வெள்ளித் தொழிலாளி.

    இவர் சேலம் சிவதாபுரத்தில் உள்ள ஒரு வெள்ளிப் பட்டறையில் வேலை செய்து வருகிறார். நேற்று வழக்கம் போல் வேலைக்கு செல்லும்போது வீட்டை பூட்டிவிட்டு சென்றார். இரவு வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்து ரூ.3 லட்சம் மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து மூர்த்தி சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • நகை-பணம் பறிமுதல்
    • ஜெயிலில் அடைப்பு

    சோளிங்கர்:

    சோளிங்கரை அடுத்த நீலகண்டராயன் பேட்டை ரைஸ் மில் பகுதியை சேர்ந்தவர் கல்பனா (வயது45).

    இவர் கடந்த மாதம் 21-ந்தேதி வீட்டை பூட்டிக் கொண்டு வெளியே சென்று இருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் இவரது வீட்டுக்குள் புகுந்து பீரோவை உடைத்து ரூ.1 1/2 லட்சம் பணம் மற்றும் 1 1/2 பவுன் நகை, கொலுசை திருடி சென்றார்.

    இது குறித்து சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர். விசாரணையில் கல்பனா பக்கத்து வீட்டை சேர்ந்த அஜித் குமார் என்பவர் திருடி சென்றது தெரிய வந்தது. பின்னர் தலைமறைவான அஜித்குமாரை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் நீலகண்டராயபுரம் மலைப்பகுதியில் அஜித் குமார் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

    அதைத்தொடர்ந்து போலீசார் மலைப்பகுதிக்கு சென்ற போது அங்கிருந்து அஜித்குமார் தப்பி ஓடி உள்ளார். அவரை ஜேம்பு குளம் கூட்ரோடு அருகே போலீசார் மடக்கி பிடித்து அவரிடம் இருந்து ரூ.75 ஆயிரம் ரொக்கம், நகை மற்றும் கொலுசு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • இவர் நெய்வேலி சாலையில் மோட்டார் சைக்கிள் ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார்.
    • கடைக்கு வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைந்து இருப்பதைக் கண்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூர் மாருதி நகர் பழ முதிர்ச்சோலை தெருவில் வசிக்கும் சதீஷ் (வயது 45). இவர் நெய்வேலி சாலையில் மோட்டார் சைக்கிள் ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார்கடந்த 11-ந்தேதி இரவு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். மறுநாள் காலை 7 மணி அளவில் கடைக்கு வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைந்து இருப்பதைக் கண்டார். கடையின் உள்ளே சென்று பார்த்த போது பித்தளை குத்து விளக்கு 2, காமாட்சி அம்மன் விளக்கு 2, தாம்பூலத் தட்டு 2 போன்றவைகளை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றது தெரியவந்ததுஇது குறித்து உடனடியாக வடலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராக் களை ஆய்வு செய்தனர். அதில் ஒரு வாலிபர் உள்ளிட்ட 2 சிறுவர்கள் இச்சம்பவத்தில் ஈடு பட்டது போலீசாருக்கு தெரியவந்ததுதொடர்ந்து வடலூர் சர்வோதயா நகர் காளி கோயில் தெரு நடரானஜ் மகன் பார்த்திபன் (வயது 18), மாருதி நகர் சுப்பிரமணி மகன் சந்தோஷ் (17), புதுநகர் சக்திவேல் மகன் சுரேந்தர் (எ)சூர்யா (15) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் 18 வயதிற்கும் குறைவாக இருந்த 2 சிறுவர்களை அரசு காப்பகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    • கடன் கேட்பதுபோல் சென்று கைவரிசை
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்,

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த நீலகண்டராயப்பேட்டை கால னியை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மனைவி கல்பனா (வயது 45). இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் வாலிபர் கடந்த ஜனவரி மாதம் 21-ந்தேதி கல்பனா வீட்டுக்கு சென்று ரூ.1,000 கடன் கேட்டதாக கூறப்படுகிறது.

    அப்போது கல்பனா பணம் இல்லை என்று கூறிவிட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து மறுபடியும் கல்பனாவின் வீட்டுக்கு வாலிபர் சென்றார். கல்பனாவுக்கு சிறிது கண்பார்வை தெரியாததால், வீட்டின் பின்பக்கமாக சென்று பீரோவில் வைத்திருந்த ரூ.1.50 லட்சம் மற்றும் 1 பவுன் நகை ஆகியவற்றை திருடி சென்றதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து வாலிபரின் உறவினர்களிடம் கல்பனா கூறியிருக்கிறார். அதற்கு அவர்கள் வாலிபர் வெளியூர் சென்று விட்டதாகவும், வந்தவுடன் நகை, பணத்தை வாங்கி தருவதாகவும் கூறி உள்ளனர்.

    ஆனால் அந்த வாலிபர் வராததால் நேற்று கல்பனா சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன், ரவி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விஜயகுமார் விற்பனை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு சென்றார்.
    • 15 மாட்டுத்தீவன மூட்டைகள் மற்றும் சிமெண்ட் கடையில் இருந்து 6500 ரொக்க பணத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் திருச்சிற்றம்பலம் அருகே நாவல்குளம் மெயின் ரோட்டில் ஏராளமான கடைகள் உள்ளது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 39) என்பவர் கால்நடைகளுக்கான மாட்டு தீவன கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அடுத்து உதயா சிமெண்ட் கடை உள்ளது. சம்பவத்தன்று இரவு விஜயகுமார் விற்பனை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு சென்றார். பின்னர் காலையில் சென்று பார்த்தபோது தீவன கடை மற்றும் சிமெண்ட் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தீவன கடை உரிமையாளர் விஜயகுமார் கடை உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த 16,000 மதிப்பிலான 15 மாட்டுத்தீவன மூட்டைகள் மற்றும் சிமெண்ட் கடையில் இருந்து 6500 ரொக்க பணத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து விஜயகுமார் ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருட்டு நடந்த கடைகளை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் கடைகளில் கைவரிசை காட்டிய நபர்களை தேடி வருகின்றனர்.

    • ராஜபாளையத்தில் விவசாயி வீட்டில் திருட்டு நடந்துள்ளது.
    • இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் பெத்தையாபிள்ளை தெருவை சேர்ந்தவர் ரகுநாதன் (வயது 51). விவசாயியான இவருக்கு ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி காந்தி நகர் பகுதியில் சொந்தமாக ஒரு வீடு உள்ளது.

    தினமும் காலையில் அந்த வீட்டுக்கு சென்று திரும்புவது வழக்கம். சம்பவத்தன்று இவர் தங்கை பிரிய தர்ஷினி, வேலைக்கார பெண்ணுடன் அங்கு சென்று சுத்தப்படுத்திவிட்டு வீட்டு கதவை பூட்டி திரும்பி விட்டனர்.

    நேற்று காலை வழக்கம் போல் அந்த வீட்டுக்கு சென்று பார்த்தபோது வெளிப்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த ரகுநாதன் உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தது. பூஜை அறையில் இருந்த வெள்ளி செம்பு, காமாட்சி விளக்கு உள்ளிட்ட வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம் ஆகும்.

    இது குறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் ரகுநாதன் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெண் ஊழியரிடம்நைசாகபேசிபெண் ஊழியரின்செல்போனை அபேஸ்செய்துகொண்டுஅங்குஇருந்துவெளியே சென்றான்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ராமசாமி தெருவில் சூப்பர்மார்க்கெட் உள்ளது .இங்கு வந்த டிப்டாப் சாமி ஒருவன்,தான் முதியோர்காப்பகம் நடத்துவதாக கூறி ஒரு பிட் நோட்டீசுடன் கடைக்குள் புகுந்தான். .அங்கிருந்த பெண் ஊழியரிடம்நைசாகபேசிபெண் ஊழியரின்செல்போனை அபேஸ்செய்துகொண்டுஅங்குஇருந்துவெளியே சென்றான்.

    பின்னர் அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் உள்ளமற்றொருகடையிலும் கைவரிசை காட்டி விலை உயர்ந்த செல்போனை அபேஸ் செய்துள்ளான்.

    இது குறித்து பண்ருட்டி போலீசர் விசாரித்து வருகிறார்கள். 

    • ராமநாதபுரத்தில் ஆசிரியர் வீட்டில் 9 பவுன் நகை-வெள்ளி பொருட்கள் திருட்டு நடந்துள்ளது.
    • இதுகுறித்து அவர் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கோட்டை மேட்டு தெருவை சேர்ந்தவர் சொர்ண கணபதி (வயது 36). இவர் ராமநாதபுரம் சபாநடேச ஐயர் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    கடந்த 18-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு மாமியார் மற்றும் மனைவி குடும்பத்துடன் திருநெல்வேலியில் உள்ள தனது வீட்டிற்கு சென்று விட்டார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த நகை, பொருட்களை திருடிச் சென்றனர். நேற்று வீடு திரும்பிய சொர்ண கணபதி கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உள்ளே சென்று பீரோவை பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் 9 பவுன் மற்றும் வெள்ளியிலான சாமி பொருட்கள், சாமி விளக்குகள், 2 பஞ்சாத்திர ருத்திரயாணி, ஒரு சந்தனபேழை, ஒரு குங்கும சிமில் ஆகியவை திருடு போயிருந்தது.

    இதுகுறித்து அவர் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சிவகங்கை அருகே பர்னிச்சர் கடை உரிமையாளர் வீட்டில் திருட்டு நடந்துள்ளது.
    • தொடர் கொள்ளை சம்பவங்களால் சிங்கம்புணரி பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அண்ணாநகரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் அதே பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் பாலமுருகன் திருப்பதி சென்று விட்டார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 9 அரை பவுன் நகை, ரூ. 90 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர். கொள்ளை சம்பவம் தொடர்பாக சிங்கம்புணரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மீனாட்சி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    கடந்த சில மாதங்களாக சிங்கம்புணரி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் சமூக விரோதச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. நகை, பணம் பறிப்பு, வழிப்பறி, பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்தல் போன்றவை சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    கடந்த 2 வாரத்திற்குள் சிங்கம்புணரி பகுதியில் 3 கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது. ஆனால் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. சிங்கம்புணரியில் போலீசார் ரோந்து செல்வது வெகுவாக குறைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. சிங்கம்புணரி காவல்நிலையத்தில் போலீசாரின் எண்ணிக்கையும் குறைவு என்று கூறப்படுகிறது. இதனால் ஊருக்குள் வரும் வாகனங்கள் தணிக்கை செய்யப்படுவதில்லை.

    மாவட்ட எல்லையான சிங்கம்புணரியில் எந்த இடத்திலும் செக்போஸ்ட் இல்லை. கண்காணிப்பு காமிராக்களும் குறைவாகவே உள்ளது. காவல்துறையின் அஜாக்கிரதையால் நிகழும் தொடர் திருட்டு சம்பவங்களால் பெரும் அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

    • திருமங்கலத்தில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் ஜவகர் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் மறவபட்டி அரசு நடுநிலைபள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கலைச்செல்வி பி.எஸ்.என்.எல்.அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். அவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.

    காலாண்டு விடு முறைக்காக குடும்பத்துடன் சொந்த ஊரான செங்கப்படை சென்று விட்ட அவர்கள், நேற்று மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10பவுன் தங்க நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை மிட்டு கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்தில் வெங்கடேசன் புகார் கொடுத்தார். அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருமங்கலம் பகுதியில் அடிக்கடி நடக்கும் கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆதலால் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • சந்திரசேகரன் பாரதியார் சாலையில், பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
    • கல்லாவில் வைத்திருந்த ரூ.1000 மதிப்பிலான சில்லறை காசுகள் திருட்டு போய் இருந்தது.

    புதுச்சேரி:

    காரைக்கால் தலத்தெரு பிள்ளையார் கோவில் மேட்டில் வசித்து வருபவர் சந்திரசேகரன். இவர், பாரதியார் சாலையில், பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். வழக்கம் போல் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றவர். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து கடை உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாவில் வைத்திருந்த ரூ.1000 மதிப்பிலான சில்லறை காசுகள் திருட்டு போய் இருந்தது. இது குறித்து, சந்திரசேகரன், காரைக்கால் நகர போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், கல்லாவில் காசுகளை திருடிய மர்ம நபரை தேடிவருகின்றனர்.

    ×