search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Building completion"

    • தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளின்படி படிவம் எண்.5-ஐ பூர்த்தி செய்து கையொப்பமிட வேண்டும்.
    • திருப்பூர் மாநகராட்சி 4 மண்டல அலுவலகங்களில் கட்டிட நிறைவு சான்றுக்கு சிறப்பு முகாம் நடக்கிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியில் கட்டிட நிறைவு சான்றுக்கு விண்ணப்பிக்க 4 மண்டல அலுவலகங்களில் நாளை 29-ந்தேதி (புதன்கிழமை) சிறப்பு முகாம் நடக்கிறது.

    திருப்பூர் மாநகராட்சி 4 மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி மூலம் கட்டிட அனுமதி பெற்று கட்டிடம் கட்டி உள்ளவர்கள் கட்டிட நிறைவு சான்று பெறுவதற்கு தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளின்படி படிவம் எண்.5-ஐ பூர்த்தி செய்து கையொப்பமிட வேண்டும்.

    அந்த படிவத்துடன் திருப்பூர் மாநகராட்சியில் பதிவு பெற்ற பொறியாளர் மற்றும் பதிவு பெற்ற கட்டுமான பொறியாளரிடம் படிவம் 6,7,8 ஆகியவற்றை பூர்த்தி செய்து கையொப்பம் பெற்று வரைபடத்துடன் படிவத்தை அந்தந்த மண்டல அலுவலகத்தில் நேரடியாக வழங்க வசதியாக சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

    இதன்படி நாளை (புதன்கிழமை) காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை வேலம்பாளையம் 1-வது மண்டல அலுவலகத்தில்1,9 முதல் 15-வது வார்டுகள், 21 முதல் 27-வது வார்டுகள் வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நஞ்சப்பா நகரில் உள்ள 2-வது மண்டல அலுவலகத்தில் 2 முதல் 8-வது வார்டுகள் வரையும், 16 முதல் 20-வது வார்டுகள் வரையும், 30,31,32 ஆகிய வார்டுகளை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    நல்லூர் 3-வது மண்டல அலுவலகத்தில் 33 முதல் 35-வது வார்டுகள் வரையும், 44 முதல் 51-வது வார்டுகள் வரையும், 56, 58, 59,60 ஆகிய வார்டுகளை சேர்ந்தவர்களும், ஆண்டிப்பாளையத்தில் உள்ள 4-வது மண்டல அலுவலகத்தில் 28,29,36 முதல் 43-வது வார்டு வரையும், 52 முதல் 55-வது வார்டு வரையும், 57 ஆகிய வார்டுகளை சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

    இளம் பொறியாளர், உதவி பொறியாளர்கள் அனுமதி பெற்ற வரைபடத்தின் படி கட்டுமானம் கட்டப்பட்டுள்ளதா என கள ஆய்வு செய்து கட்டிட நிறைவு சான்று உடனடியாக வழங்குவார்கள்.இந்த தகவலை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

    • கட்டுமான பொறியாளர் ஒப்புதலுடன் மாநகராட்சிக்கு நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்.
    • கட்டிட நிறைவு சான்றிதழ் உடனடியாக வழங்கப்படும்

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்திடம் கட்டிடம் கட்ட அனுமதி பெற்று கட்டிடம் கட்டி முடித்த கட்டிட உரிமையாளர்கள் அதற்கான நிறைவு சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்.

    ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளின் கீழ் உரிய படிவங்கள் பெற்று பூர்த்தி செய்து, கட்டிட பொறியாளர் மற்றும் பதிவு பெற்ற கட்டுமான பொறியாளர் ஒப்புதலுடன் மாநகராட்சிக்கு நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்.அதனடிப்படையில், அனுமதி பெற்ற வரைபடத்தின் படி கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்து கள ஆய்வு செய்து, கட்டிட நிறைவு சான்றிதழ் உடனடியாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    ×