search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boyfriend"

    வெளிநாட்டுக்கு கூட்டி செல்வதாக பெண் என்ஜினீயரை அழைத்துச் சென்று கொலை செய்து, உடலை சூட்கேசில் வைத்து பஸ்சில் கொண்டு சென்று கால்வாயில் வீசிய காதலரை போலீசார் கைது செய்தனர். #Suitcase #Hyderabed #EngineerKilled
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்தவர் சுனில். இவரும், 25 வயதான ஒரு பெண் என்ஜினீயரும் கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தனர். இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள் ஆவர்.

    இவர்களின் காதல் விவகாரம், அப்பெண்ணின் பெற்றோருக்கும் தெரியும். அந்த பெண், திருமணம் செய்துகொள்ளுமாறு அடிக்கடி வற்புறுத்தி வந்தார். இதனால் சுனில் கோபம் அடைந்தார்.

    இதற்கிடையே, கடந்த 4-ந் தேதி, வளைகுடாவில் உள்ள மஸ்கட்டில் ஒரு வேலைக்கு நேர்முக தேர்வுக்கு கூட்டிச் செல்வதாக பெண் என்ஜினீயரின் பெற்றோரை நம்ப வைத்து அந்த பெண்ணை சுனில் அழைத்துச் சென்றார். 7-ந் தேதி திரும்பி வந்துவிடுவதாக தனது பெற்றோரிடம் அந்த பெண் கூறியிருந்தார்.

    ஆனால், சொன்னபடி 7-ந் தேதி திரும்பி வரவில்லை. இதையடுத்து, சந்தேகம் அடைந்த பெற்றோர் இதுபற்றி போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார், பெண் என்ஜினீயரின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை கண்டறிந்து விசாரணை நடத்தினர். சுனிலையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், பெண் என்ஜினீயரை கொலை செய்துவிட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    அவர் அளித்த தகவல்படி, நேற்று முன்தினம் ஐதராபாத் அருகே ஒரு கால்வாயில் பெண் என்ஜினீயரின் உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. சுனிலிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இருவரும் 4-ந் தேதி ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து ஒரு லாட்ஜ்க்கு சென்றுள்ளனர்.

    அங்கு மறுநாள், பெண் என்ஜினீயரை சுனில் கொலை செய்தார். உடலை ஒரு சூட்கேசுக்குள் அடைத்து, ஒரு டவுன் பஸ்சிலும், ஒரு டாக்சியிலும் சூட்கேசுடன் பயணம் செய்தார். பின்னர், புறநகரில் உள்ள ஒரு கால்வாயில், உடல் அடைக்கப்பட்ட சூட்கேசை போட்டு விட்டு சென்றுவிட்டார்.

    திருமணத்துக்கு வற்புறுத்தியதால், காதலியை கொலை செய்ததாக சுனில் போலீசில் தெரிவித்தார்.  #Suitcase #Hyderabed #EngineerKilled 
    திண்டுக்கல் அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

    சத்திரப்பட்டி:

    திண்டுக்கல் அருகே உள்ள வீரலப்பட்டி காலனியைச் சேர்ந்த பழனிச்சாமி, அவரது மகள் தீபிகா (வயது23). இவர் எம்.காம்.சி.ஏ. படித்துள்ளார். பழனி அருகே உள்ள தனியார் பள்ளியில் கணினி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    தொப்பம்பட்டி அருகே தேவத்தூர் கப்பலப்பட்டியை சேர்ந்த கோபி (23). இவர்கள் 2 பேரும் அம்பிளிக்கையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்தனர். அப்போது இவர்களிடையே காதல் ஏற்பட்டது.

    இந்த விசயம் பெற்றோருக்கு தெரியவந்தது. இவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருதரப்பு பெற்றோரும் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த காதலர்கள் வீட்டைவிட்டு வெளியேறினர். பின்னர் வடகாடு மலைப்பகுதியில் எல்லைக்கருப்பணசாமி கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.

    எனினும் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு 2 பேரும் சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் மணியன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தீபிகா மேஜர் என்பதால் கணவருடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்ததால் போலீசார் இருவரையும் அனுப்பி வைத்தனர்.

    பிரேசிலை சேர்ந்த பிரபல சூப்பர் மாடல் அழகி மற்றும் திரைப்பட நடிகை அட்ரியானா லீமா தனது காதலர் மெட்டின் ஹாராவை பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. #AdrianaLima #MetinHara
    பிரேசிலியா:

    பிரேசிலை சேர்ந்த பிரபல மாடல் அழகி மற்றும் திரைப்பட நடிகை அட்ரியானா லீமா (வயது 37). உலகின் சிறந்த மாடல் அழகிக்கான போட்டியில் 2-வது இடத்தை பிடித்து சூப்பர் மாடல் என்கிற அந்தஸ்தை பெற்றவர்.

    இவருக்கும் துருக்கியை சேர்ந்த எழுத்தாளரான மெட்டின் ஹாரா என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 1½ ஆண்டுகளாக திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் அட்ரியானா லீமா தனது காதலர் மெட்டின் ஹாராவை பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை இருவரும் உறுதி செய்து இருக்கிறார்கள். அதே சமயம் அவர்கள் காதல் முறிந்ததற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. #AdrianaLima #MetinHara
    வில்லியனூரில் வீட்டை விட்டு வெளியே சென்ற பட்டதாரி பெண் காதலனை திருமணம் செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் பெரியபேட் பால்வாடி தெருவை சேர்ந்தவர் முனுசாமி. ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தினக்கூலி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள் விஷ்ணுபிரியா (வயது24). இவர் பி.காம். படித்து முடித்து தற்போது சி.ஏ. படித்து வந்தார். இந்த நிலையில் சம் பவத்தன்று வீட்டை விட்டு வெளியேறிய விஷ்ணுபிரியா அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் எங்கும் விஷ்ணுபிரியா இல்லை.

    இதையடுத்து முனுசாமி தனது மகள் மாயமானது குறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் வினாயகம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் விஷ்ணுபிரியா தனது உறவினர் மகனான புவியரசன் (27) என்பவரை காதலித்து வந்ததும் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரின் பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் இளம்பெண் கொடுத்த புகாரின்பேரில், மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி முன்னிலையில் காதலனுடன் இளம்பெண்ணுக்கு திருமணம் நடந்தது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை ராதாபுரத்தை சேர்ந்தவர் குலாப்ஜான். இவரது மகன் முகமது (வயது 25). இவரும், அதே பகுதியை சேர்ந்த முகமதுவின் மகள் சாயின் (20) என்பவரும் காதலித்து வந்தனர். இதையடுத்து அவர்களது பெற்றோர்கள் கடந்த 2015-ம் ஆண்டு காதலர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் செய்து வைத்தனர். இதையடுத்து முகமது குவைத்திற்கு வேலைக்கு சென்றார்.

    2 ஆண்டுகள் அங்கு வேலை செய்துவிட்டு கடந்த 2017-ம் ஆண்டு திருவண்ணாமலைக்கு திரும்பினார். இதையடுத்து மீண்டும் இவர்கள் இருவரும் பழகி உள்ளனர். அப்போது முகமது ஆசை வார்த்தை கூறி சாயினிடம் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் பல்வேறு காரணங்களை முகமது கூறி சாயினை திருமணம் செய்து கொள்ள மறுத்து உள்ளார். இதையடுத்து சாயின், தன்னை முகமது திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக தண்டராம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமதுவை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

    இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) பெங்களூருவில் முகமதுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக சாயினுக்கு தகவல் கிடைத்தது.

    இதுகுறித்து சாயின், வக்கீல் ராஜசேகர் மூலம் திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் புகார் மனு அளித்தார். இந்த புகார் மனு குறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான மகிழேந்தி மற்றும் சார்பு நீதிபதி ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலையில் இருதரப்பையும் அழைத்து விசாரணை நடத்தப்பட்டது.

    இதையடுத்து இருதரப்பையும் சமரசம் செய்து முகமதுவுக்கும், சாயினிற்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி முன்னிலையில் ஜமாத் முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது. பின்னர் மணமக்களை நீதிபதிகள் வாழ்த்தினர்.

    சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் இதுபோன்று திருமணம் செய்து வைப்பது இதுவே முதல்முறை என்று நீதிமன்ற வட்டாரத்தில் கூறப்பட்டது.
    கடலூர் அருகே திருமணம் செய்ய மறுத்ததால் காதலன் வீட்டு முன்பு அமர்ந்து காதலி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூர்:

    கடலூர் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகள் சிவகலா (வயது 25). கடலூர் அருகே உள்ள கிழக்கு ராமாபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (30). விழுப்புரம் மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். ராஜ்குமாரும் சிவகலாவும் காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் சிவகலாவுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவரது பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினர். இதனால் சிவகலா தனது காதலன் ராஜ்குமாரிடம் தன்னை உடனே திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று வற்புறுத்தினார். ஆனால் அவர் திருமணம் செய்ய முடியாது என்று கூறி மறுத்து விட்டார். தன்னை காதலித்து விட்டு ராஜ்குமார் திருமணம் செய்ய மறுக்கிறாரே என்று எண்ணி சிவகலா மனம் வருந்தினார்.

    இது குறித்து சிவகலா கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில், நானும், ராஜ்குமாரும் கடந்த 2010-ம் ஆண்டு முதல் காதலித்து வந்தோம். அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி வந்தார். இப்போது என்னிடம் பேச கூட மறுக்கிறார் என்று தெரிவித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக விசாரணைக்கு வருமாறு ராஜ்குமாருக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் விசாரணைக்கு வரவில்லை.

    இதையடுத்து சிவகலா நேற்று ராமாபுரத்தில் உள்ள தன் காதலன் ராஜ்குமார் வீட்டுக்கு சென்றார். அங்கு வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து காதலன் வீட்டின் முன்பு அமர்ந்து சிவகலா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவர் இரவு வரை தர்ணா செய்தார். இந்த சம்பவம் ராமாபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திண்டுக்கல்லில் காதலித்து ஏமாற்றிய வாலிபர் வீட்டு முன்பு வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல்-நத்தம் நம்பிக்கோட்டை பகுதியை சேர்ந்த திருப்பதி மகள் ராஜேஸ்வரி (வயது23). இவர் அதே பகுதியை சேர்ந்த சக்திவடிவேல் (25) என்பவரை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளார்.

    இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சென்று வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சக்திவடிவேல் தனது காதலியை பார்ப்பதை தவிர்த்து வந்துள்ளார். அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

    ஆனால் அதற்கு அவர் மறுத்ததோடு இனிமேல் தனக்கு போன் செய்ய வேண்டாம் என மிரட்டி உள்ளார்.

    இதனால் வேதனை யடைந்த ராஜேஸ்வரி இன்று காலை தனது காதலன் வீட்டுக்கு வந்தார். அவரை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்துள்ளனர். இதனால் தான் கொண்டு வந்த வி‌ஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் இது குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து ராஜேஸ்வரியை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காதல் திருமணம் செய்து கொண்ட என்ஜினீயரிங் கல்லூரி மாணவி, வாலிபர் பாதுகாப்பு வழங்க கோரி கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்த பெரியப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சினி. இவர் கடலூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    பெரியப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (28). இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ரஞ்சனிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இரு வரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் ரஞ்சினியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரஞ்சினியும், சதீஷ்குமாரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இந்த விபரம் ரஞ்சனியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் இன்று காலை ரஞ்சினியும், சதீஷ்குமாரும் கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது ரஞ்சனி புகார் மனு ஒன்று கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நானும், சதீஷ்குமாரும் காதல் திருமணம் செய்து கொண்டோம். எங்கள் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    ஆசை வார்த்தை கூறி 10-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அடுத்த அங்கு செட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகள் ராமதிலகம் (வயது 15). இவர்அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் பள்ளிக்கு செல்லும் போதுஅதேபகுதியை சேர்ந்த கொத்தனார் ஜனார்த்தன்(20)என்ற வாலிபர் இவரை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் மாணவி ராமதிலகம் கர்ப்பமானார். தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ள மாணவி ராமதிலகம் நேற்று காதலன் ஜனார்த்தனன் வீட்டுக்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

    அதற்கு அவர் உன்னை திருமணம்செய்து கொள்ள முடியாது என மறுத்துள்ளார். பின்னர் அவரை திட்டி வீட்டை விட்டு விரட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவி ராமதிலகம் பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதனைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் எழிலரசி இதுகுறித்து ஜனார்த்தனன் அவரது பெற்றோர்கள் உறவினர்கள் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகிறார்.

    ×