search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boy death"

    • தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் உருண்டது.
    • விபத்தில் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவன் உயிரிழந்தான்.

    நியூயார்க்:

    கலிபோர்னியாவை சேர்ந்தவர் ஆரவ் முதல்யா, 2 வயதான இவன் அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவன். சம்பவத்தன்று இவன் தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுவதற்காக அமெரிக்காவில் நேவாடா என்ற மாகாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாதலமான பாலைவன பகுதிக்கு சென்றார்.

    தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் உருண்டது. இந்த விபத்தில் சிறுவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே அவன் இறந்தான். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • குமார் தனது மனைவி சரஸ்வதி (30) மற்றும் அவரது குழந்தைகள் யாழினி (11), யமுனா (13), தனுஷ்கா (3) தட்சணா (2) ஆகியோரை அழைத்துக் கொண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 35). இவர் தனது மனைவி சரஸ்வதி (30) மற்றும் அவரது குழந்தைகள் யாழினி (11), யமுனா (13), தனுஷ்கா (3) தட்சணா (2) ஆகியோரை அழைத்துக் கொண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் திருச்சி திண்டுக்கல் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    கரையான்பட்டி பகுதியில் சென்றபோது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 5 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் யாழினிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு யாழினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்தில் சாலையில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த மணப்பாறை கரையான்பட்டி பகுதியைச் சேர்ந்த செகப்பாயி (60) என்ற பெண்மணியும் காயமடைந்தார். இது தொடர்பாக காரை ஓட்டிச் சென்ற மண்ணச்சநல்லூர் பழைய நல்லூர் பிடாரி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள பூனாம்பாளையத்தை அடுத்த மந்திரியார்ஓடை பகுதியை சேர்ந்தவர் முருகேசன், விவசாயி. இவரது மகன் பிரகாஷ் (9). அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று பிரகாசின் பெற்றோர் வெளியூர் புறப்பட்டு சென்றனர். மகனை பக்கத்து வீட்டை சேர்ந்தவரிடம் ஒப்படைத்து சென்றிருந்தனர். இதற்கிடையே அவர் தனது விவசாய நிலையத்தை உழுவதற்காக சென்றார். அவருடன் பிரகாசும் டிராக்டரில் சென்றிருந்தார்.

    உழவுப்பணி நடைபெற்றபோது எதிர்பாராதவிதமாக டிராக்டரில் அமர்ந்திருந்த பிரகாஷ் தவறி விழுந்தார். இதில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பிரகாஷ் உடல் நசுங்கி பலியானார். இந்த விபத்து குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்த சிறுவனை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே உள்ள பொன்னேரி கிராமத்தில் வசித்து வரும் செந்தில் -மீனா. இவர்களின் 13 வயது மகன் பிரேம்குமார். விருத்தாசலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.இவர் அவருடைய வீட்டின் எதிர்ப்புற சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக சென்ற இருசக்கர வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்தார். சிறுவனை அங்கிருந்தவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.

    இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் விருத்தாசலம்-சிதம்பரம் சாலையில் மரக்கட்டைகளை போட்டு திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு
    • எதிர்பாராதவிதமாக மின்வேலியில் சிக்கினார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் குவாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 55) செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். இரவு நேரங்களில் ஆடுகளை நாய்கள் கடித்து விடுவதால் ஆட்டுக் கொட்டகையைச் சுற்றி மின்வேலி அமைப்பது வழக்கம் எனக்கூறப்படுகிறது.

    இந்நிலையில் அவரிடம் வேலை பார்த்து வந்த கீழ குவாகம் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் மகன் அருண்குமார் (17) நேற்று அதிகாலை எதிர்பாராதவிதமாக மின்வேலியில் சிக்கி அதே இடத்தில் உயிரிழந்தார். தகவலறிந்து குவாகம் போலீசார் சென்று அருண்குமார் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அந்தோணி தினகரன் த ன்னுடைய நிறுவனத்தின் உரிமையாளரின் நிகழ்ச்சிக்கு தன்னுடைய மகன் ஜோஸ்வா(14) உடன் சென்றார்.
    • வாய்க்காலில் குளித்த ஜோஸ்வா நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.

    திருச்சி,

    திருச்சி புத்தூர் ஆபீஸ் காலனி அக்ஷயா அப்பார்ட்மெண்ட்டில் வசித்து வருபவர் அந்தோணி தினகரன் (43). இவர் கிரஷர் மணல் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று பணி முடிந்து வீடு திரும்பிய அவர் தன்னுடைய நிறுவனத்தின் உரிமையாளரின் நிகழ்ச்சிக்கு தன்னுடைய மகன் ஜோஸ்வா தினகரன்(14) உடன் சென்றார்.

    நிகழ்ச்சி முடிந்து திரும்பிய போது ஜோஸ்வா , குழுமணி சாத்தனூர் கட்டளை வாய்க்காலில் குளிப்பதாக கூறியதை அடுத்து அந்தோணி தினகரனும் அவரை அங்கே குளிப்பதற்கு விட்டுவிட்டு மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். வாய்க்காலில் குளித்த ஜோஸ்வா நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இது குறித்து அந்தோணி தினகரன் கேகே நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொள்ளாச்சி அருகே மர்ம காய்ச்சலுக்கு 16 வயது சிறுவன் பலியான சம்பவம் தொடர்பாக கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை:

    கோவை மாவட்டம் கஞ்சம்பட்டி அருகே உள்ள கே.நாகூரை சேர்ந்தவர் ஜெசன். இவரது மகன் ஜெரீன் (வயது 16). இவர் புளியம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக இவர் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை அவரது பெற்றோர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஜெரீன் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை அவரது பெற்றோர் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜெரீன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விக்கிரவாண்டி அருகே வாய்க்காலில் தவறி விழுந்த சிறுவன் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி அருகே உள்ள வா.பகண்டை பகுதியை சேர்ந்தவர் செல்வமணி மகன் ஜீவித் (வயது 4). நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன்பு அக்கம் பக்கத்தில் உள்ள சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த ஜீவித் திடீரென மாயமானான். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுபற்றி விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததோடு, மாயமான சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த விக்கிரவாண்டி தாசில்தார் இளவரசன், சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் ஆகியோர் தலைமையிலான மீட்பு குழுவினர் மற்றும் அக்கிராம இளைஞர்கள் வ.பகண்டையில் உள்ள நீர்நிலைகளில் இறங்கி சிறுவனை தேடினர்.

    அப்போது வாதானூரான் வாய்க்காலில் பிணமாக கிடந்த சிறுவனின் உடலை மீட்டனர். ஜீவித் விளையாடியபோது வாய்க்காலுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதனிடையே செல்வமணியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சிறுவனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கருமத்தம்பட்டி அருகே தீபாவளி பண்டிகை அன்று 7 வயது சிறுவன் இருந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கருமத்தம்பட்டி:

    கருமத்தம்பட்டி அடுத்த முதலிபாளையம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 37). இவர் முதலிபாளையம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று இவர் தனது மனைவி ரம்யா (30) மற்றும் மகன்கள் பிரணவ் (7), சாய் (2) ஆகியோரை அழைத்து கொண்டு மொபட்டில் தீபாவளி பண்டிகைக்காக குன்னத்தூர் பகுதியில் உள்ள மனைவி ரம்யாவின் தாயார் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

    அப்போது திருப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவன வாகன டிரைவர் சண்முகம் (54) என்பவர் அவரது நிறுவன காரில் சேலம்- கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் கணியூர் சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. உடனே அவர் சாலையோரத்தில் காரை நிறுத்தி போனில் பேசிக் கொண்டு இருந்துள்ளார்.

    இந்நிலையில் சிவக்குமார் ஓட்டிவந்த மொபட் திடீரென கட்டுப்பாட்டை இழந்து காரின் பின்புறம் மோதியது. இதில் இவரது மகன் பிரணவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிவகுமார் மற்றும் மனைவி ரம்யா, சாய்க்கு சிறு காயங்கள் ஏற்பட்டது.இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக வந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சிறுவன் பிரணவ் பரிதாபமாக உயிர் இழந்தார். இதனையடுத்து காயம் அடைந்த சிவகுமார், ரம்யா, சாய் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்தும் சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர் அருகே மினிவேன் கவிழ்ந்து சிறுவன் பலியானான். பெண்கள் உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர்.

    திருப்பத்தூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஊர்கவுண்டனூரை சேர்ந்தவர் சிவக்குமார் இவரது மகன் செல்லதுரை (வயது 8). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சிவக்குமார் தனது உறவினர்களுடன் 20 பேருடன் ஆண்டியப்பனூர் அருகே உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக நேற்று மினிவேனில் சென்றனர். பின்னர் அங்கிருந்து ஊருக்கு திரும்பினர். வெங்டாபுரம் என்ற இடத்தில் வந்த போது மினிவேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

    இதில் செல்லதுரை சம்பவ இடத்திலேயே இறந்தார். சிவக்குமார், கோவிந்தசாமி, மீனா, உண்ணாமலை, சேட்டு உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர்.

    இது குறித்து தகவலறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு படுகாயமடைந்தவர்களை திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

    விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம் அருகே கார் மீது வேன் மோதி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன் பாளையம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் நடராஜ். விசைத்தறி கூடம் நடத்தி வருகிறார். இவரது மனைவி கன்னியம்மாள். இவர்களது மகன் கவின் (11).இவர்கள் மாருதி காரில் பல்லடத்திற்கு மளிகை பொருட்கள் வாங்க வந்தனர். இவர்களுடன் நடராஜ் தம்பி மனைவி பூங்கொடி, மகன் கவுசிக் ஆகியோரும் வந்தனர்.

    பல்லடத்தில் மளிகை பொருட்கள் வாங்கி விட்டு காரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். கிருஷ்ணாபுரம் பிரிவில் சென்று கொண்டு இருந்த போது பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் நோக்கி வந்த சரக்கு வேனும் காரும் நேருக்கு நேர் மோதி கொண்டது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களுக்கு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் வழியிலே சிறுவன் கவின் பரிதாபமாக இறந்தான். மற்ற 4 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    விபத்து குறித்து காமநாயக்கன் பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கார் மீது மோதிய சரக்கு வேன் ரோடு ஓரம் இருந்த பள்ளத்தில் இறங்கியது. அதனை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

    மெரீனா கடற்கரையில் சிறுவர்கள் விளையாடி மகிழும் ராட்டினத்தில் சிக்கி சிறுவன் ஒருவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    சென்னை மெரீனா கடற்கரையில் தினமும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் வந்து செல்கிறார்கள்.

    அங்குள்ள சிறிய வகை ராட்டினங்களில் சிறுமி- சிறுவர்கள் ஏறி விளையாடி மகிழ்வார்கள்.

    இந்த நிலையில் ராட்டினத்தில் சிக்கி சிறுவன் ஒருவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    நொச்சி குப்பத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவர் மெரினா கடற்கரையில் சுண்டல் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் பிரனவ் (7).

    நேற்று மாலை சிறுவன் பிரனவ் தந்தை-தாயுடன் மெரீனா கடற்கரைக்கு சென்றான். அப்போது அங்கு ராட்டினத்தில் சிறுவர்கள் அமர்ந்து சுற்றுவதை ஆர்வமுடன் பார்த்து கொண்டிருந்தான். அவன் ராட்டினத்தின் மிக அருகில் நிற்பதை பார்த்த தாய் சற்று விலகி நிற்குமாறு கூறினார்.

    இதை கவனித்த ராட்டினத்தின் உரிமையாளர் பிரகாஷ் என்பவர் சிறுவன் பிரனவ்வை அழைத்து சென்று ராட்டினத்தின் நடு பகுதியில் நிற்க வைத்தார். பின்னர் ராட்டினத்தை சுற்றினார்.

    அப்போது எதிர்பாராத விதமாக பிரனவ் சட்டை ராட்டினத்தின் கம்பியில் சிக்கியது. இதில் நிலை தடுமாறி தவறி விழுந்த பிரனவ் தலையில் கம்பி பலமாக மோதியது.

    பலத்த காயம் அடைந்த அவனை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இதுகுறித்து அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராட்டினத்தை இயக்கிய பிரகாசிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிறுவர்கள் விளையாடி மகிழும் ராட்டினத்தில் சிக்கி சிறுவன் ஒருவன் பலியானது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மெரீனா கடற்கரையில் ராட்டினங்கள் உரிய அனுமதியின்றியும், பாதுகாப்பற்ற முறையிலும் இயக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    சுவாமிமலை அருகே சிறுவன் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுவாமிமலை:

    சுவாமிமலையை அடுத்த திம்மக்குடியைச் சேர்ந்தவர் கார்த்தி (வயது42) கொத்தனார். இவரது மனைவி சுபஸ்ரீ (38) இவர்களுக்கு அபிஷேக் என்ற மகன் உள்ளான். இந்நிலையில் கடந்த 11-ம் தேதி சுபஸ்ரீ அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது பற்றி அறிந்த கார்த்தி தலைமறைவாகிவிட்டார். இதற்கிடையே அபிஷேக் நேற்று கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டான் அவனை மீட்டு உறவினர்கள் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். அப்போது அபிஷேக் உடலில் வி‌ஷம் கலந்திருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவனை தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பலன் அளிக்காமல் அவன் இன்று காலை பரிதாபமாக இறந்தான்.

    இதுப்பற்றிய புகாரின் பேரின் சுவாமிமலைப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×