search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "borewell"

    • ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் போர்வெல் அமைக்க ப்பட்டு உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தாங்குடி ஊராட்சி மேலத்தெரு மற்றும் கீழத்தெரு பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இங்கு வசிக்கும் மக்களின் பயன்பாட்டிற்காக கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு மூலம் போர்வெல் அமைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் அங்கிருந்து குடிநீர் மேலத்தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றப்பட்டு ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் போ ர்வெல் அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு போதிய மின் வசதி இல்லாத காரணத்தால் போர்வெல் பயன்படுத்தப்படாமல் அப்படியே உள்ளது.

    இதனால் ஊராட்சி பகுதிகளில் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

    இருப்பினும் கோடை காலங்களில் தண்ணீர் கிடைக்க எதுவாக மாவட்ட ஊராட்சி சார்பாக ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் போர்வெல் அமைக்க ப்பட்டு உள்ளது.

    இந்த இடத்தில் போதிய மின் வசதி இல்லாததால் மின் இணைப்பு வழங்கப்படாமல் போர்வெல் இயங்காமல் உள்ளது.

    இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு மேல தெருவில் இருந்து மின் வசதி ஏற்படுத்திக் கொடுத்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மீட்புப் பணிக்கு நான்கு மண் அள்ளும் இயந்திரங்கள், நான்கு டிராக்டர்கள் வரவழைக்கப்பட்டது.
    • சிசிடிவி கேமரா மூலம் சிறுமியின் நிலை கண்காணிக்கப்பட்டது.

    ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் உள்ள அப்பானேரி அருகே உள்ள ஜஸ்ஸா பாடா என்ற கிராமத்தை சேர்ந்த சிறுமி அங்கிதா வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்.

    அப்போது, சிறுமி 200 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். இதுகுறித்து தகவல் தெரியவந்ததை அடுத்து போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    அப்போது அவர்கள் ஆய்வு செய்ததில் சிறுமி 60 முதல் 70 அடி ஆழத்தில் சிக்கியுள்ளது தெரியவந்தது. பின்னர், மீட்புப் பணிக்கு நான்கு மண் அள்ளும் இயந்திரங்கள், நான்கு டிராக்டர்கள் வரவழைக்கப்பட்டது. இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் காவல்துறையின் குழுக்கள் தலைமையில் மீட்புப் பணி நடைபெற்றது.

    ஆழ்துளை கிணற்றை சுற்றியுள்ள பகுதியை மண் அள்ளும் இயந்திரம் மூலம் தோண்டப்பட்டு பின் தொடர்ந்து சிசிடிவி கேமரா மூலம் சிறுமியின் நிலை கண்காணிக்கப்பட்டது. சிறுமிக்கு குழாய்கள் மூலம் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது.

    இந்நிலையில், 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார். பின்னர் சிறுமியை உடனடியாக பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தௌசா மாவட்ட ஆட்சியர் கும்மர் உல் ஜமான் சவுத்ரி தெரிவித்தார்.

    • சில சாய தொழிற்சாலைகள் மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி சாய கழிவு நீரை கிணறுகள், ஓடைகளில் வெளியேற்றுகின்றன.
    • உடலில் மஞ்சள் நிற தண்ணீரை கொண்டு குளித்தால் சொறி, கொப்பளம், அரிப்பு உள்ளிட்ட தோல் சரும பிரச்சனைகள் வருகிறது.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அருள்புரம்,சின்னக்கரை, கரைப்புதூர், கணபதிபாளையம் பகுதியில் ஏராளமான பனியன் நிறுவனங்கள், சாய தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சில மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி சாய கழிவு நீரை கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், நீர் நிலை ஓடைகளில் வெளியேற்றுகின்றன.

    அதனால் நிலத்தடி நீர் பாதிப்படைகிறது. பருவ மழை காலங்களில் இது போன்ற விதி மீறல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில்,பச்சாங்காட்டுபாளையத்தில் ஒரு விவசாய தோட்டத்து குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு ஆழ்துளை கிணற்றில் மஞ்சள் நிறத்தில் தண்ணீர் வெளியேறி வருகிறது. இது குறித்து பாலாமணி என்பவர் கூறுகையில் ,மஞ்சள் நிறத்தில் வரும் தண்ணீரை எந்த உபயோகத்திற்கும் பயன்படுத்த முடியவில்லை. உடலில் இந்த தண்ணீரை கொண்டு குளித்தால் சொறி, கொப்பளம், அரிப்பு உள்ளிட்ட தோல் சரும பிரச்சனைகள் வருகிறது. விவசாயத்திற்கு விட்டால் பயிர் சாகுபடி பாதிப்படைகிறது. மகசூல் கிடைப்பதில்லை. தென்னை மரம் நாளுக்கு நாள் காய்ந்து வருகிறது. கால் நடைகள் இந்த தண்ணீரை குடிப்பதில்லை. வலுக்கட்டாயமாக குடிக்க வைத்தால் அந்த கால்நடைகள் நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றன. எங்களது அன்றாட சொந்த உபயோகத்திற்கு லாரி தண்ணீரை விலைக்கு வாங்கி தான் பயன்படுத்துகிறோம். குடிப்பதற்கு ஊராட்சி நிர்வாகம் வழங்கும் குடிநீரை பிடித்து வைத்து பயன்படுத்தி வருகிறோம்.

    இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களையும், கால்நடைகளையும் பாதுகாக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்த நிலையில் பல்லடத்தில் உள்ள திருப்பூர் தெற்கு மாசுக்கட்டுபாட்டு உதவி செயற்பொறியாளர் வனஜா தலைமையில் அதிகாரிகள் அந்த பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

    • சத்தீஸ்கரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 11 வயது சிறுவனை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • மீட்புப் பணியில் தீயணைப்பு, போலீசார், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் ஜாங்கிரி - ஷம்பா மாவட்டம் பிஹ்ரிட் கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ராகுல் ஷாஹு. இச்சிறுவன் நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு பின்புறம் பயன்பாடற்ற நிலையில் இருந்த 80 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான்.

    இதுகுறித்து தீயணைப்பு, போலீசார், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஆழ்துளை கிணற்றுக்கு பக்கவாட்டில் பள்ளம் தோண்டும் பணி நடந்தது. ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலம் ஆக்சிஜனை அனுப்பி மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர்.

    இந்நிலையில், தொடர்ந்து 3வது நாளாகச் சிறுவனை மீட்கும் பணியில் 500க்கும் மேற்பட்ட மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது வரை சிறுவனுக்கு சுயநினைவு உள்ளது. ஆழ்துளை கிணற்றில் சேரும் நீரை அள்ளித் தருகிறான் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், குஜராத்தில் இருந்து மீட்பு ரோபோ வந்துள்ளது. மதியத்துக்கு மேல் சிறுவன் மீட்கப்படலாம் என மீட்புக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

    • ராணுவம், போலீசார், மாவட்ட நிர்வாக ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
    • ராணுவம், காவல்துறை மற்றும் பிற அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்த பிறகு 40 நிமிடங்களில் மீட்புப் பணி நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

    குஜராத் மாநிலம் சுரேந்திர நகர் மாவட்டம் துடாபூர் கிராமத்தில் உள்ள ஒரு பண்ணையில் சிவம் (2) என்கிற சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். சிறுவனின் பெற்றோர் அப்போது கூலி வேலை செய்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது நேற்று இரவு 8 மணியளவில் சிறுவன் அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்து 20- 25 அடி ஆழத்தில் சிக்கினான். இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து உள்ளூர் பேரிடர் மேலாண்மை பிரிவு மற்றும் அகமதாப்பாத்தில் இருந்து கிட்டத்தட்ட 100 கி.மீ தொலைவில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழுவிற்கு எச்சரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து ராணுவம், போலீசார், மாவட்ட நிர்வாக ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றி, இரவு 10.45 மணியளவில் குழந்தையை ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியே எடுத்தனர்.

    பின்னர் சிறுவன் திரங்காத்ரா நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டான். குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    ராணுவம், காவல்துறை மற்றும் பிற அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்த பிறகு 40 நிமிடங்களில் மீட்புப் பணி நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

    வாலாஜா அருகே போர்வெல் அமைக்க கோரி பொதுமக்கள் சித்தாத்தூர் அருகே சோளிங்கர் சாலையில் மறியல் செய்தனர்.
    வாலாஜா:

    வாலாஜா அருகே உள்ள சின்ன தகரகுப்பம், பெருங்கால்மேடு, ஆகிய கிராமங்களுக்கு சித்தாத்தூரில் உள்ள பொதுப்பணிதுறைக்கு சொந்தமான ஏரியில் போர் வெல் அமைக்கப்பட்டு குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.

    கடந்த 3 மாதமாக போர்வெல் வறண்டு விட்டதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    இதனால் கிராமக்கள் போராட்டம் மறியல் செய்து சித்தாத்தூர் ஏரியில் நேற்று புதிய போர்வெல் அமைக்க ஏற்பாடு செய்தனர். இதற்கு சித்தாத்தூர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவலறிந்த தாசில்தார் பூமா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அனுமதியில்லாமல் போர்வெல் அமைக்க கூடாது என கூறி தடுத்து நிறுத்தினர்.

    இன்று காலை பொதுப்பணித்துறை அனுமதியுடன் போர்வெல் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆனால் இன்றும் போர்வெல் அமைக்க தொடங்கவில்லை இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சித்தாத்தூர் அருகே சோளிங்கர் சாலையில் மறியல் செய்தனர்.

    இது பற்றி தகவலறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சமாதானம் செய்தனர். மறியலால் சோளிங்கர் ரோட்டில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    அரியானா மாநிலத்தின் 60 அடி ஆழ்துளை குழாய்க்குள் விழுந்த ஒன்றரை வயது குழந்தையை 36 மணிநேர போராட்டத்துக்கு பின்னர் மீட்பு படையினர் காப்பாற்றியுள்ளனர். #18monthboy #60feetdeepborewell #Haryanaborewell #boyrescued
    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள பல்சமன்ட் கிராமத்தில் மூடாமல் விடப்பட்ட 60 அடி ஆழமுள்ள ஆழ்துளை குழாய்க்குள் நேற்று முன்தினம் (புதன்கிழமை) மாலை அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை தவறி விழுந்தது.

    தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆழ்துளை குழாய்க்கு அருகாமையில் புதிதாக குழிவெட்டி அந்த குழந்தையை காப்பாற்றுவதற்காக இருநாட்களாக முயன்று வந்தனர்.

    சுமார் 36 மணிநேர போராட்டத்தின் பலனாக அந்த குழந்தை இன்று மாலை உயிருடன் வெளியே எடுக்கப்பட்டது. தயாராக காத்திருந்த ஆம்புலன்ஸ் மூலம் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்தக் குழந்தை அபாயகட்டத்தை கடந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். #18monthboy #60feetdeepborewell #Haryanaborewell #boyrescued 
    மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் 200 அடி ஆழம் கொண்ட ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் தீவிர முயற்சிக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டான். #BoyTrappedBorewell #BoyRescued
    புனே:

    மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் தோரண்டல் கிராமத்தில் நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் ரவி, அங்கு மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துவிட்டான். சிறுவனைக் காணாமல் தேடிய பெற்றோர், அவன் விளையாடிய இடத்தில் தேடியபோது, அவன் ஆழ்குழாய் கிணற்றில் விழுந்திருப்பதை அறிந்தனர். இதையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 12 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியிருந்ததால் கயிறு மூலம் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், சிறுவனின் உடலில் பலத்த காயங்கள் ஏற்படும் வாய்ப்பு இருந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. எனவே, தேசிய பேரிடர் மீட்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.



    அவர்கள் வருவதற்குள், உள்ளூர் மக்கள் சேர்ந்து அந்த ஆழ்குழாய் கிணற்றின் பக்கவாட்டில் பள்ளம் தோண்டத் தொடங்கினர். பேரிடர் மீட்புக்குழுவினர் வந்து, பக்கவாட்டில் தோண்டப்பட்ட பள்ளத்தை மேலும் ஆழப்படுத்தி,  சிறுவன் சிக்கியிருந்த இடத்திற்கு அருகில் துளையிட்டு பத்திரமாக மீட்டனர். சுமார் 16 மணி நேரத்திற்குப் பிறகு சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டதால் பெற்றோர் நிம்மதி அடைந்தனர். #BoyTrappedBorewell #BoyRescued
    பீகாரில் 110 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்புக்குழுவினர் இன்று பத்திரமாக உயிருடன் மீட்டனர். #ChildFellBorewell #Bihar
    பாட்னா:

    பொதுமக்கள் பயன்படுத்தப்படாமல் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூடாமல் அப்படியே விட்டு விடுவதால் அதில் குழந்தைகள் தவறி விழுந்து உயிரிழக்க நேரிடுகிறது. இதுகுறித்து தொடர்ந்து அறிவுறுத்தியும் சிலர் அதனை அஜாக்கிரதையாக விட்டுவிடுகின்றனர்.

    இதேபோல், பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 3 வயது பெண் குழந்தை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, திறந்து கிடந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டது.

    தகவலறிந்த கோட்வாலி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து  மீட்பு பணியில் ஈடுபட்டனர். 110 அடி ஆழம் கொண்ட அந்த ஆழ்துளை கிணற்றில் பக்கவாட்டில் பொக்லைன் எந்திரம் மூலம் பெரிய பள்ளம் தோண்டி குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. 

    இந்நிலையில், தொடர்ந்து 26 மணி நேரமாக நடைபெற்ற மீட்பு பணிகளால் இன்று மாலை அந்த பெண் குழந்தை உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டது என போலீசார் தெரிவித்தனர். #ChildFellBorewell #Bihar
    போர்வேல் பராமரிப்பவர்கள் குடிநீர் விநியோகிக்காததால் இது குறித்து பெண்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
    கொண்டலாம்பட்டி

    சேலம் குகை ஆண்டிப்பட்டி வசந்தம் நகர் பகுதியில் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியில் 133 வீடுகள் உள்ளன. கடந்த 25 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லாததால் அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். இது குறித்து சில தினங்களுக்கு முன்பு கலெக்டர் ரோகிணியிடம் மனு அளித்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கரிடம் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் போர்வேல் மூலம் எங்கள் குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது தண்ணீர் விநியோகிக்கப்படாததால் நாங்கள் இது குறித்து போர்வேல் பராமரிப்பவர்களிடம் கேட்டோம். அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    இது குறித்து உரிய விசாரணை நடத்தி போலீஸ் கமிஷனர் சங்கர் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு உத்தரவிட்டார்.
    ×