search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Booth committee"

    • தி.மு.க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
    • அமைச்சர் காந்தி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி தலைமையில் ராணிப்பேட்டை சிப்காட் பாரதி நகரில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

    மாவட்ட துணை செயலாளர்கள் சிவானந்தம், துரைமஸ்தான், அமுதா, மாவட்ட பொருளாளர் சாரதி, ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா கொண்டுவது குறித்தும், நாடாளுமன்ற தேர்தல்யொட்டி பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், கழக ஆக்க பணிகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-

    டி.பி.ஐ வளாகத்தில் பேராசிரியர் பெருந்தகையின் திருவுருவச்சிலை 19-ந் தேதிதிறக்கப்படவுள்ளது.

    கற்றல், கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம் மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியினை வெளிபடுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசியர் பெயரில் விருது வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் ராணிப்பேட்டை மாவட்ட செயற்குழு கூட்டம் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகிற 19-ந் தேதி பேராசிரியரின் நூற்றாண்டு நிறைவு நாளில் திருவுருவப்படம் வைத்து மலரஞ்சலி செலுத்தி வட்டக்கிளை, ஊர்கிளை பேரூர்கிளை, ஒன்றியம், நகரம் எங்கும் கொண்டாடிடவும், தலைமைக் கழகம் அறிவிக்கும் பேராசிரியர் நூற்றாண்டு பொதுகூட்டம் நடத்திடவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

    ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் பூத் கமிட்டி அமைக்கவேண்டுமென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

    கூட்டத்தில் மாவட்ட திமுக நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், பேரூர் செயலாளர்கள் உள்ளாட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நெல்லையில் நடந்தது.
    • நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார்.

    நெல்லை:

    அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நெல்லையில் நடந்தது.

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் சுதாபரமசிவன், முன்னாள் எம்.பி. முத்துக்கருப்பன், எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணை செயலாளர் நாராயணபெருமாள், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், பொருளாளர் சவுந்தர்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட செயலாளர் பெரியபெருமாள், இளைஞர் பாசறை செய–லாளர் முத்துப்பாண்டி, ஹரிகரசிவசங்கர், மகளிர் அணி ஜான்சிராணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இளைஞர் பாசறை மாநில செயலாளர் பரமசிவம், பூத்கமிட்டி அமைப்பது குறித்து சிறப்புரை ஆற்றினார்.

    கூட்டத்தில் பகுதி செய லாளர்கள் வக்கீல் ஜெனி, திருத்து சின்னத்துரை, காந்தி வெங்கடாசலம், மோகன், சண்முககுமார், சக்திகுமார், சிந்துமுருகன், ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், நெல்லை பகுதி ஜெயலலிதா பேரவை செயலாளர் சீனிமுகம்மது சேட், கவுன்சிலர் சந்திரசேகர், பகுதி துணை செயலாளர் மாரீசன், வக்கீல் அன்பு, வட்ட செயலாளர் பாறையடி மணி, தச்சை மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பூத் கமிட்டி முகவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கப்பட்டது.
    • தி.மு.க. ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடத்தில் நாடாளுமன்றத் தேர்தலைமுன்னிட்டு, தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்குபல்லடம் மேற்கு ஒன்றிய அவை தலைவர் சு.சாமிநாதன் தலைமை தாங்கினார்.பல்லடம் மேற்கு ஒன்றிய செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் நடராஜன், மாவட்ட பொருளாளர் சாமிநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன் நம்பி ஆகியோர் கலந்துகொண்டு பூத் கமிட்டி முகவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினர்.

    இதில் ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, ஒன்றிய துணை செயலாளர்கள் ஆட்டோ குமார், செந்தில்குமார், கலைவாணி சசிகுமார், ஒன்றிய பொருளாளர் அம்மாபாளையம் குமார், மாவட்ட பிரதிநிதிகள் முத்துகுமாரசாமி, துரைமுருகன், அன்பரசன், தொண்டரணி அமைப்பாளர் பானுமதி,மற்றும் தி.மு.க. ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதே போல, பல்லடம் நகர தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நகர செயலாளர் ராஜேந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் நடராஜன், மாவட்ட பொருளாளர் சாமிநாதன் ,பொதுக்குழு உறுப்பினர் ரபிதீன் ஆகியோர் கலந்துகொண்டு பூத் கமிட்டி முகவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினார்கள். இந்த கூட்டத்தில்,மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் செ.ராஜசேகரன்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஷ்,நகர தி.மு.க. நிர்வாகிகள் நடராஜன்,வசந்தாமணி,வேலுச்சாமி,குட்டி பழனிச்சாமி,கதிர்வேல்,கவுஸ் பாஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
    • பூத் கமிட்டியில் ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே இடம் பெற வேண்டும்.

    திருப்பூர் :

    அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் திருப்பூரில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அவைத்தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார்.

    திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    திருப்பூர் மாநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதி, நகர, ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி, வார்டு, கிளைகளில் பூத் கமிட்டி அமைக்க வேண்டும். பூத் கமிட்டியில் ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே இடம் பெற வேண்டும். இளைஞர்களை பூத் கமிட்டியில் உறுப்பினர்களாக சேருங்கள். பூத் கமிட்டி உறுப்பினர்கள் அந்த வீதியில் குடியிருப்பவராகவும், அவருக்கு அந்த வீதியில் உள்ள அனைவரும் நன்கு தெரிந்திருப்பது அவசியம். எதிர்காலத்தில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் தான் கட்சியை வழிநடத்துபவர்களாக இருப்பார்கள். பூத் கமிட்டி அமைக்கும் பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து 3 மாத காலத்தில் முடிக்க வேண்டும். பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையை நானே வந்து வழங்குவேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் விஜயகுமார் எம்.எல்.ஏ., அம்மா பேரவை மாநில துணை செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன், மாநகர் மாவட்ட இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், முன்னாள் எம்.எல்.ஏ. என்.எஸ்.என்.நடராஜ், கவுன்சிலர்கள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், வக்கீல் அணி செயலாளர் முருகேசன், பகுதி செயலாளர்கள் கருணாகரன், ஹரிகரசுதன், திலகர் நகர் சுப்பு, கே.பி.ஜி.மகேஷ்ராம், அம்மா பேரவை இணை செயலாளர் ஆண்டவர் பழனிசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    ×