search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Booster dose"

    • இந்தியாவில் 87 சதவீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர்.
    • பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான இடைவெளி 6 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றை எதிர்கொள்ள கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்படுகின்றன. கடந்த ஆண்டு ஜனவரி 16ந்தேதி தொடங்கிய தடுப்பூசி திட்டம் பல்வேறு கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

    இதேபோல் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன் எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. ஏப்ரல் 10ம்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுகிறது. இரண்டாவது டோஸ் செலுத்திய பிறகு பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான இடைவெளி 9 மாதங்களில் இருந்து 6 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வரும் 15ம் தேதி முதல் 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் இலவசம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசு தடுப்பூசி மையங்களில் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ளலாம். நாட்டின் 75வது சுதந்திர தின நிறைவு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு, ஜூலை 15ம் தேதியில் இருந்து 75 நாட்களுக்கு பூஸ்டர் டோஸ் இலவசம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இதுபற்றி மத்திரி அனுராக் தாகூர் கூறுகையில், "நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. இந்த கொண்டாட்டத்திபோது, ஜூலை 15ம் தேதி முதல் அடுத்த 75 நாட்கள் வரை, 18 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு பூஸ்டர் டோஸ் இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

    அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி இந்திய மக்கள் தொகையில் 96 சதவீதம் பேர் முதல் தவணையும், 87 சதவீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். 18 வயது முதல் 59 வயதுக்குட்பட்ட 77 கோடி மக்களில் 1 சதவீதத்திற்கும் குறைவான நபர்களே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் மொத்தம் 16 கோடி பேர் பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதி வாய்ந்தவர்கள். இவர்களில் 26 சதவீதம் பேர் பூஸ்டர் டோஸ் செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 60 வயதுக்கு மேற்பட்டோர், சுகாதார மற்றும் முன்கள பணியாளர்கள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
    • பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கான கால இடைவெளி 9 மாதத்தில் இருந்து 6 மாதமாக குறைத்தது மத்திய சுகாதாரத் துறை.

    புதுடெல்லி:

    இந்தியாவில் தற்போது 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முன் எச்சரிக்கை டோஸ் தடுப்பூசி என்ற பெயரில் போடப்படுகிறது.

    இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    கொரோனா தடுப்பூசி 2வது டோஸ் செலுத்திய பிறகு 9 மாதங்கள் அல்லது 39 வாரங்களுக்கு பிறகு பூஸ்டர் ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

    அறிவியல் ஆதாரங்கள் மற்றும் உலக நாடுகளின் அடிப்படையில் இதனை 6 மாதங்கள் அல்லது 26 வாரங்களாகக் குறைக்க வேண்டும் என துணைக்குழு அளித்த பரிந்துரையை நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்பக் குழு ஏற்றுக்கொண்டுள்ளது.

    எனவே, 2வது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 18 முதல் 59 வயதுடைய அனைத்துப் பயனாளிகளும் தனியார் தடுப்பூசி மையங்களில் 6 மாதங்களுக்கு பிறகு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

    60 வயதுக்கு மேற்பட்டவர்கள், சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இதற்கான மாற்றங்கள் கோ வின் இணைய தளத்தில் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குளிர் காலத்தில் கொரோனா தொற்று பரவலை குறைக்க 50 வயதுக்கு மேற்பட்டோர் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
    வாஷிங்டன்:

    உலகளவில் கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக வல்லரசு நாடான அமெரிக்கா உள்ளது.

    இங்கு நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாக உள்ள மூத்த குடிமக்களுக்கு கொரோனாவுக்கு எதிராக 3-வது டோசாக ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இதன் தரவுகள், கொரோனாவை தடுப்பதில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி நல்ல பலன் அளிக்கிறது என காட்டி உள்ளன.

    இதையடுத்து 18 வயதான அனைவருக்கும் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடலாம் என்ற பரிந்துரையை சி.டி.சி. என்னும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குனர் ரோச்செல்லி வாலன்ஸ்கி செய்தார்.

    அதைத் தொடர்ந்து, அங்கு 18 வயதான அனைவருக்கும் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போட அந்த நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எப்.டி.ஏ. அங்கீகாரம் அளித்துள்ளது.

    இதையடுத்து நேற்று முன்தினம் அங்கு தேசிய அளவில் 18 வயதான அனைவருக்கும் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. குளிர் காலத்தில் கொரோனா தொற்று பரவலை குறைக்க 50 வயதுக்கு மேற்பட்டோர் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    பூஸ்டர் டோஸ்

    இதுவரை ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசியை எந்த வயதினர் போடுவது என்பதில் அமெரிக்காவில் ஒரு குழப்பம் நிலவியது.

    இப்போது பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவின்படி, 18 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் 2-வது டோஸ் தடுப்பூசி போட்டு 6 மாதங்கள் ஆகி இருந்தால், பைசர் அல்லது மாடர்னா என இரு தடுப்பூசிகளில் எதுவாகிலும் ஒன்றை பூஸ்டர் டோசாக செலுத்திக்கொள்ளலாம்.

    இதுபற்றி சி.டி.சி. என்னும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் ஆலோசகர் டாக்டர் மேத்யூ டேலி கூறுகையில், “இது ஒரு வலுவான பரிந்துரை ஆகும். எங்களால் முடிந்த அளவு பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய விரும்புகிறேன்” என குறிப்பிட்டார்.

    1 கோடிக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடுவதற்கு தகுதி வாய்ந்தவர்கள் என தகவல்கள் கூறுகின்றன.

    ×