என் மலர்

  நீங்கள் தேடியது "Body Weight"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வழக்கமாக பருகும் பாலுக்கு மாற்றாக ஓட்ஸை பாலாக தயாரித்து பருகலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் காலை உணவுடன் ஓட்ஸ் பால் பருகி வரலாம்.
  வழக்கமாக பருகும் பாலுக்கு மாற்றாக ஓட்ஸை பாலாக தயாரித்து பருகலாம். ஒரு கப் ஓட்ஸ் பாலில் 35 சதவீதம் கால்சியம், 25 சதவீதம் வைட்டமின் டி சத்து நிறைந்திருக்கிறது. பசும் பாலை விட இதில் கொழுப்பும் குறைவாகவே இருக்கிறது.

  கலோரியும் குறைவான அளவில்தான் உள்ளது. பசும் பாலை விட இதில் கால்சியமும் அதிகம் கலந்திருக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் காலை உணவுடன் ஓட்ஸ் பால் பருகி வரலாம். மற்ற பாலை விட இதில் நார்ச்சத்தும் அதிகம் நிறைந்திருக்கிறது. பசியை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.

  ஓட்ஸ் பால் தயாரிப்பதும் எளிமையானது. ஒரு கப் ஓட்ஸை அகன்ற பாத்திரத்தில் கொட்டி அதனுடன் தண்ணீர் ஊற்றி 30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பின்பு தண்ணீரை வடிகட்டி விட்டு மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.

  பின்னர் அதனுடன் மூன்று கப் தண்ணீர், கல் உப்பு சேர்த்து கலக்க வேண்டும். ஓட்ஸ், தண்ணீரை அதிகம் உறிஞ்சும் தன்மை கொண்டது. அதனால் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். இறுதியில் துணியில் வடிகட்டி பருகலாம். இந்த ஓட்ஸ் பாலை 5 நாட்கள் வரை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். ஓட்ஸ் பாலுடன் தேன் கலந்தும் பருகலாம்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கீழே கூறியவைகளை கடைபிடித்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதோடு சிறந்த ஆரோக்கியத்துடன் இருக்கும். இருப்பினும் மருத்துவ காரணங்கள் ஏதேனும் இருக்கின்றதா என மருத்துவ ஆலோசனையும் பெற வேண்டும்.
  ‘ஏன் என்றே தெரியவில்லை. நான் எடை கூடிக்கொண்டே செல்கிறேன்’ என்று சிலர் சொல்வதுண்டு. சிலர் ஏதேனும் விபத்து காரணமாக சில காலம் நடமாட முடியாமல் படுக்கையில் இருக்கும் பொழுது எடை கூடுவது இயற்கைதான். இவர்களைக்கூட எடை கூடாத சத்துணவு எடுத்துக் கொள்ளுமாறு மருத்துவம் அறிவுறுத்தும். சிலர் அதிக மன உளைச்சல் காரணமாக முறையற்ற உணவினை உட்கொண்டு எடை கூடுவர். இதனையும் முறையான கவனம் செலுத்தி மன நலம் மூலமாக உடல் நலம் பெற வேண்டும்.

  சில மருந்துகள் மற்றும் மருத்துவ காரணங்களாலும் எடை கூடலாம். காரணம் எதுவாயினும் அதிக எடை என்பது கீழ்கண்ட நோய்களின் அடித்தளம் ஆகிவிடும்.

  • இதய நோய்கள்    • சர்க்கரை நோய் பிரிவு 2
  • மூட்டு பிரச்சினை    • எலும்பு பிரச்சினை
  • உயர் ரத்த அழுத்தம்    • சில வகை புற்று நோய்கள்
  • மன உளைச்சல்    • பக்க வாதம்

  • அதிக கொழுப்பு ஆகியவை அனைத்துமே பாதிப்பு ஏற்படுத்தும் வாய்ப்பு உண்டு என்பதால்தான் உடல் கூடுதல் எடைக்கு செல்லாமல் இருக்க மிக அதிக கவனம் கொடுக்க வேண்டி உள்ளது.

  • சரியாக தைராய்டு சுரப்பி வேலை செய்யாது தைராய்டு குறைபாடு இருப்பின் திடீரென அதிக எடை கூடலாம்.

  • மிக அதிகமான கலோரிகளை உட்கொள்வது, அதாவது மிக அதிகமாக சாப்பிடுவது எடை கூடுதலை ஏற்படுத்தும்.

  • பலர் தாகம் எடுக்கும் பொழுது அதனை பசி என நினைத்து உணவு உட்கொள்வர். ஆக உடலுக்கு தேவையான  அளவு நீர் கிடைக்காத பொழுது உடல் நீரினை தக்க வைத்துக் கொள்ள கடும் முயற்சி செய்யும். இதனால் நீர் தேங்கி உப்பிசம் ஏற்படும். எனவே முறையாக அளவாக நீர் குடிக்கும் வழக்கத்தினை பின்பற்றுங்கள்.

  • நான் சரியாக உண்கிறேன். தேவையான அளவு தூங்குகிறேன். நன்கு உடற்பயிற்சி செய்கிறேன். இருப்பினும் அதிக எடை கூடுகின்றது என்பவர்களும் உண்டு. இவர்களுக்கு அதிக மன அழுத்தம், மன உளைச்சல் இருக்கலாம். இந்த பாதிப்பு உடையவர்களுக்கு கார்டிஸால் ஹார்மோன் அதிகம் சுரந்து அதன் மூலம் இன்சுலின் அளவு கூடி ரத்தத்தில் சர்க்கரை அளவினைக் குறைக்கலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் பொழுது பிஸ்கட், ஐஸ்கிரீம் என உண்ணத் தொடங்குவார்கள். இதனால் கண்டிப்பாய் எடை கூடும். இத்தகையோருக்கு மூச்சுப் பயிற்சி செய்வது, கிரீன் டீ எடுத்துக் கொள்வது போன்றவை பேருதவியாய் இருக்கும்.  • சிலருக்கு எதிலும் அதிக உப்பு தேவையாய் இருக்கும். சிலர் சிப்ஸ், ஊறுகாய் போன்ற அதிக உப்பு உள்ள உணவுகளை விடாது உண்பர். அதிக உப்பு, அதிக நீர் தேக்கத்தினை உடலில் உண்டாக்கும். இதன் விளைவு உடல் எடை கூடி இருக்கும். அதிக உப்பினை குறைத்தால் போதும். உப்பே இல்லாமல் இருப்பதும் பெரும் தவறு. ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். இங்கு குறிப்பிடப்படுவது சிப்ஸ், ஊறுகாய், அப்பளம் மற்றும் சாதத்தில் உப்பு போட்டு சமைப்பது இவற்றினைத் தவிருங்கள் என்பதுதான்.

  • கருத்தடை மாத்திரைகளை தொடர்ந்து சில காலம் பயன்படுத்துவது எடை கூடுதலை ஏற்படுத்தும். இந்த மாத்திரைகள் ஹார்மோன் சம்பந்தப்பட்டவை என்பதால் அதிக பசியினைத் தூண்டும். நீரினை உடலில் தேக்கும். இதனால் உடல் எடை கூடும். குறைந்த ஹார்மோன் கொண்ட கருத்தடை மாத்திரைக்கும் மருத்துவத்தில் உள்ளன. கருத்தடை மாத்திரைகளை பெண்கள் மருத்துவ ஆலோசனை பெற்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.

  * அதிக புரதம் கூடாது என்றாலும் அநேகர் தேவையான அளவு புரதமே எடுத்துக்கொள்வதில்லை என ஆய்வுகள் கூறுகின்றன. புரதம் உடலுக்கு இன்றியமையாத ஒரு சத்து. புரதம் இன்மை உடலின் செயல்திறனை குறைத்து விடும். உடல் உப்பியதுபோல் இருக்கும்.

  * மனச்சோர்வு, கவலை இவை ஒருவரை செயல் இன்றி முடக்கிவிடும். இவர்கள் இவர்களை அறியாமலே அதிக உணவு உட்கொள்வர். இதனால் எடை கூடுதல் வெகு எளிதில் ஏற்படும். மனநலனை யோகா, மூச்சுப்பயிற்சி, நடைபயிற்சி  இவற்றின் மூலம் சரி செய்துகொள்ள வேண்டும்.

  * ஆரோக்கியமான உணவினை உண்ணாமல் கொழுப்பு உணவு, ஆரோக்கியமற்ற கலோரி சத்து மிகுந்த உணவு போன்றவை எடையினை கூட்டிக்கொண்டே போகும். இவைகளை தவிர்த்து விகிதாசார ஆரோக்கிய உணவினை உண்பது உங்கள் எடையினைக் குறைக்கும்.

  * மிக அதிக உடற்பயிற்சி செய்யாதீர்கள். அதுவும் உங்களை மிக அதிகமாக சாப்பிடத் தூண்டும். எதிலும் நிதான அளவுகோலே சிறந்தது.

  * தேவையான அளவு அதாவது 8 மணிநேர ஆழ்ந்த தூக்கம் உடலை எடை கூடாமல் இருக்கச்செய்யும்.

  மேற்கூறியவைகளை கடைபிடித்தால் உடல் எடை கூடாது இருப்பதோடு சிறந்த ஆரோக்கியத்துடன் இருக்கும். இருப்பினும் மருத்துவ காரணங்கள் ஏதேனும் இருக்கின்றதா என மருத்துவ ஆலோசனையும் பெற வேண்டும்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கிரீன் டீ உண்மையாகவே உடலுக்கு நல்லதா? எடையைக் குறைக்கிறதா? கிரீன் டீயில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
  கிரீன் டீயில் ஃப்ளேவோனாய்டு (Flavonoid), கேட்டச்சின் (Catechin) முதலான பாலிபீனால்கள் (Polyphenol) அதிகம் உள்ளன. இவை சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களாகச் செயல்பட்டு, உடலில் உள்ள செல்கள் சிதையாமல் பாதுகாக்கின்றன. இளமையிலேயே வயதான தோற்றம் வராமலிருக்க, தினமும் ஒரு கப் கிரீன் டீ அருந்தலாம்.அரசியல்

  கிரீன் டீயில் சிறிதளவு காஃபின் (Caffeine) இருக்கிறது. இது மூளையில் உள்ள நியூரோ டிரான்ஸ்மீட்டர்களைத் தூண்டி, நரம்பு இயக்கங்களைப் புத்துணர்ச்சி அடையச் செய்கிறது.இதனால் சுறுசுறுப்பான உணர்வு கிடைக்கும். மூளை நன்றாக இயங்கும்.

  கிரீன் டீ தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு, மறதி நோயான அல்சைமர், மூளையில் டோபோமைன் சரியாகச் சுரக்காததால் வரும் பார்கின்சன் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்பு 25 சதவிகிதம் குறைகிறது.

  பற்களில் ஸ்ட்ரெப்டோகோக்கஸ் மியூட்டன்ஸ்  (Streptococcos mutans) என்ற பாக்டீரியா வளர்ந்தால், பற்கள் பாதிக்கப்பட்டு, சொத்தையாக மாறும் அபாயம் உண்டு. கிரீன் டீ குடித்தால், அதில் இருக்கும் கேட்டசின், இந்த வகை பாக்டீரியாக்களை அழித்து, பற்களைக் காக்கும்.அரசியல்

  கிரீன் டீ இன்சுலின் செயல்பாட்டை சிறிதளவு அதிகரிக்கும். எனவே, சர்க்கரை சேர்க்காமல் கிரீன் டீ குடிப்பது, சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. கிரீன் டீயைத் தொடர்ந்து குடிப்பவர்களுக்கு, டைப்-2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு குறைகிறது. சர்க்கரை சேர்க்காமல் கிரீன் டீ அருந்தினால், உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகள் கரையும். எனவே, உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது.

  இதயத்துக்குச் செல்லும் வால்வுகளில் கொழுப்புக் கட்டிகள் சேர்வதைத் தடுக்கும் வல்லமை பெற்றது கிரீன் டீ. இதய நோய்கள் அண்டாமல் இருப்பதற்கும், பக்கவாதம் வராமல் இருக்கவும் கிரீன் டீ அருந்தலாம். கிரீன் டீயில் அமினோ அமிலங்கள் உள்ளன. இது உடல் மற்றும் மனச்சோர்வைப் போக்கக்கூடியது. எனவே, மன அழுத்தம் உள்ள சமயங்களில் கிரீன் டீ அருந்தலாம்.

  கிரீன் டீ  ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது என்பதால், உடலில் தேவையற்ற கட்டிகளை வளரவிடாது. பெருங்குடல், மார்பகம் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகளை கிரீன் டீ குறைக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சில நேரங்களில், உடல் எடையைக் குறைக்க நாம் என்ன தான் டயட்டில் இருந்து, தினமும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வந்தாலும், எடையைக் குறைக்க முடியாமல் இருப்போம்.
  சில நேரங்களில், உடல் எடையைக் குறைக்க நாம் என்ன தான் டயட்டில் இருந்து, தினமும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வந்தாலும், எடையைக் குறைக்க முடியாமல் இருப்போம். அது ஏன் என்று தெரியுமா? எவ்வளவு டயட்டில் இருந்தாலும், நாம் நம் உணவில் நம்மை அறியாமல் சில உணவுப் பொருட்களை சேர்த்து வருவோம். சரி இப்போது உடல் எடை குறையவிடாமல் தடுக்கும் அந்த உணவுப் பொருட்களை பார்க்கலாம்.

  * சமையல் எண்ணெயில் ஒமேகா-6 ஃபேட்டி அமிலம் அதிக அளவிலும், ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் குறைவான அளவிலும் உள்ளது. ஃபேட்டி அமிலங்களில் இப்படி ஏற்றத்தாழ்வு இருப்பதால், அதன் காரணமாக உடலினுள் அழற்சி ஏற்பட ஆரம்பிக்கும். எனவே சரிசம அளவில் அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்கள் நிறைந்த விர்ஜின் ஆலிவ் ஆயிலையோ அல்லது சமையல் எண்ணெயையோ தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துங்கள்.

  * எண்ணெயில் பொரித்த உணவுகள், பேக்கிங் செய்யப்பட்ட உணவுகள், பாக்கெட் உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளில் தான் அதிகம் இருக்கும். இந்த கொழுப்புக்கள் கெட்ட கொழுப்புக்கள். இவை உடலினுள் சென்றால் நல்ல கொழுப்புக்களின் அளவு குறைந்து, உடலினுள் அழற்சி ஏற்பட்டு, எடை அதிகரிப்பு, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

  * பால் பொருட்களை எடையைக் குறைக்கும் போது எடுத்து வந்தால், அதுவே உங்களுக்கு தடையை ஏற்படுத்தும்.  * பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் மாட்டிறைச்சிகளில் Neu5Gc என்னும் பொருள் உள்ளது. இந்த உணவுகள் இதய நோய், புற்றுநோய் போன்றவற்றையும் ஏற்படுத்தும். குறிப்பாக இந்த வகை உணவுகள் உடல் பருமனை உண்டாக்கும்.

  * உணவில் சிறிது சர்க்கரையை சேர்த்தாலும் அதனால் நீரிழிவு, பற் சொத்தை மற்றும் உடல் பருமன் போன்றவை ஏற்படும். என்ன தான் நீங்கள் டயட்டில் இருந்து சர்க்கரை சேர்க்காமல் இருந்து, கடைகளில் விற்கப்படும் டயட் சோடாக்கள், ஜூஸ், மில்க் ஷேக் போன்றவற்றைக் குடித்து வந்தாலும், அதில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையினால் உடல் எடையை அதிகரிக்கும்.

  * சுத்திகரிக்கப்பட்ட (மைதா) மாவுகளில் எந்த ஒரு சத்துக்களும் இருக்காது. எனவே பிரட், நூடுல்ஸ், சாதம், பாஸ்தா, பிஸ்கட் போன்றவற்றை டயட்டில் இருக்கும் போது தவிர்த்திடுங்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எடையை குறைப்பதற்கு டயட், உடற்பயிற்சி என போன்ற வழிகள் இருக்கையில், நம் அன்றாட உணவு பழக்கங்களின் மூலம் உடல் எடையை அதிகரிக்கலாம்.
  உடல் எடையை குறைப்பதற்காக முயற்சி செய்பவர்கள் மத்தியில் உடல் எடையை அதிகரிக்க முயற்சி செய்பவர்களும் இருக்கிறார்கள். எடையை குறைப்பதற்கு டயட், உடற்பயிற்சி என போன்ற வழிகள் இருக்கையில், நம் அன்றாட உணவு பழக்கங்களின் மூலம் உடல் எடையை அதிகரிக்கலாம்.

  * உடற்பருமனாக இரு‌ப்பவ‌ர்களு‌ம், மெ‌லி‌ந்த தேக‌ம் கொ‌ண்டவ‌ர்களு‌‌க்கு‌ம் வாழை‌ப்பழ‌ம் பய‌ன்தரு‌ம். அதாவது உட‌ற்பருமனாக இரு‌ப்பவ‌ர்க‌ள் வாழைப்பழத்தை தினமும் உணவில் சேர்த்து வ‌ந்தா‌ல் அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவு ஒரு ‌நிலையான தன்மைக்கு வருவதால் உடற்பருமன் குறைவதாக மரு‌த்துவ ஆ‌ய்வுக‌ள் தெரிவிக்கின்றன. வாழைப்பழத்தில் அதிகளவில் கலோரிகள் உள்ளது, எனவே உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு சிறந்த பழமாக இருக்கும்.

  * ஒரு அத்திப்பழத்தில் 111 கலோரிகள் உள்ளது, தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். இதை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உடல் எடையும் அதிகரிக்கும்.

  * எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் அதிகளவில் அவகோடா பழத்தை சாப்பிட வேண்டும். இவற்றில் 322 கலோரிகள் உள்ளது. மேலும் இதில் நல்ல கொழுப்புகள் அதிகம் இருப்பதால் இதயத்திற்கு ஆரோக்கியம் தரும்.

  * வால்நட்ஸ், பாதாம் மற்றும் ஹாசில் நட்ஸ் உள்ளிட்ட பருப்புகளில் கொழுப்புகள் மற்றும் கலோரிகள் அதிகம் உள்ளது. இவற்றில் அடங்கியுள்ள அதிக அளவு புரதம் உடலுக்கு உரத்தை அளிக்கிறது. தினமும் சிறிதளவு உலர் பழங்களை எடுத்துக் கொள்வது உடல் எடையை அதிகரிக்க நிச்சயம் உதவும்.

  * மாம்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்சத்து மற்றும் கலோரிகள் நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உணவை அளவுக்கு மீறி உட்கொள்ளும் போது அவை கொழுப்பாக மாறி உடலில் தங்கி விடுகின்றது. இந்தக் கொழுப்பு சேமிப்புதான் உடல் எடையை அதிகரித்து உடலை பருமனாக்கி விடுகிறது.
  நாம் உயிர் வாழ்வதற்குத் தேவையான சக்தியை உணவின் மூலம் பெறுகிறோம். நமது உடலின் இயக்கம், உழைப்புக்குத் தகுந்த அளவு உணவை உண்ணும்போது அது உடலுக்கு முழுமையான சக்தியாகிறது. ஆனால் உணவை அளவுக்கு மீறி உட்கொள்ளும் போது அவை கொழுப்பாக மாறி உடலில் தங்கி விடுகின்றது. இந்தக் கொழுப்பு சேமிப்புதான் உடல் எடையை அதிகரித்து உடலை பருமனாக்கி விடுகிறது.  

  அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவு வகைகளை உண்பதினாலும், ஒரு நாளில் பல வேளை உண்பதினாலும், உணவு உண்டவுடன் படுத்துத் தூங்குவதாலும், உடலுக்கு எந்தவிதமான உழைப்பும் இல்லாமல் போவதினாலும் உடல் பருமனாகி விடுகிறது. உணவை அதிகமாக உட்கொள்வதால் மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளினாலும் உடல் எடை அதிகரித்து விடுகின்றது.

  * பருமனாய் இருப்பவர்கள் சிறிது தூரம் நடப்பதற்குள் மூச்சு வாங்கத் தொடங்கும். கால்கள் தளர்ச்சியடைந்து வலியும் வேதனையும் ஏற்படும்.

  * அடிக்கடி அஜீரணக் கோளாறுகள் உண்டாகும்.

  * எந்த வேலையையும் சுறுசுறுப்புடன் செய்ய உடல் ஒத்துழைக்காது.

  * முழங்கால் மூட்டுகளில் வலியும், வீக்கமும் தோன்றும்.  ரத்த நாளங்களை சுருங்கச் செய்யும்.

  * இருதய நோய்களை உண்டாக்கும்.

  * ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும்.

  * சம்போக சக்தி குறைந்து விடும்.

  * பெண்களில் மலட்டுத் தன்மையை உண்டு பண்ணும்.  * உடலில் நீரிழிவு நோய் தோன்றுவதற்கு முக்கிய காரணங்களுள் உடற்பருமனும் ஒன்று.

  * அமெரிக்காவில் நீரிழிவு நோயைப்பற்றி நடந்த ஆய்வில் இரண்டாயிரம் பேர் நீரிழிவு நோயாளிகள் என்றால் அவர்களில் 1700 பேர் அதிக உடற்பருமன் உள்ளவர்களாக இருப்பது கண்டறியப்பட்டது.

  * உடல் பருமன் காரணமாக முதுகெலும்பு பாதிக்கப்பட்டு முதுகில் நிரந்தரமான வலியை உண்டு பண்ணி விடுகிறது.

  * அதிக உடற்பருமனாய் இருப்பவர்களுக்கு நோய் தடுப்பாற்றல் குறைந்து விடுகிறது.  இதனால் அவர்களுக்கு உண்டாகும் நோய்கள் எளிதில் குணமாவதில்லை.

  * நமது உடலில் அதிகரிக்கும் ஒவ்வொரு பவுண்டு அளவு கொழுப்பு சத்து சுமார் இரண்டிலிருந்து மூன்று மைல் அளவு ரத்த நாளத்தைப் பெறுகிறது. இந்த அதிகளவு தூரத்திற்கு ரத்தத்தை இருதயம் அனுப்பவேண்டி இருப்பதால் இருதயம் பலகீனம் அடைந்து, இருதய நோய்கள் தோன்றக் காரணமாகிறது.

  * குடல் இறக்க நோய்க்கும், பித்த நீர்ப்பையில் கற்கள் தோன்றுவதற்கும் பல காரணங்கள் இருந்தாலும், உடல் பருமன்தான் முக்கிய காரணம் என்று கண்டறிந்துள்ளனர்.

  * இடுப்புப் பகுதியில் உண்டாகும் வலி மற்றும் கோளாறுகளுக்கு அதிக உடல் எடைதான் முக்கிய காரணமாகும்.

  * பருமனானவர்களின் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் என்ற கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கும்.  இது இருதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாய்களின் உட்புறம் படிவதால் ரத்தக் குழாய்களின் அளவு குறுகி விடுகிறது.  இதனால் ரத்த ஓட்டம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.  மாரடைப்பு ஏற்பட காரணமாகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாலில் வைட்டமின்களும், கால்சியமும் உள்ளடங்கி இருக்கின்றன. அதிகபடியான கலோரிகளை எரித்து உடல் எடையை சீராக பராமரிப்பதற்கு பால் உதவுகிறது.
  பாலில் வைட்டமின்களும், கால்சியமும் உள்ளடங்கி இருக்கின்றன. அதிகபடியான கலோரிகளை எரித்து உடல் எடையை சீராக பராமரிப்பதற்கு பால் உதவுகிறது. பசுவின் பால், எருமை பால் ஆகிய இரண்டு விதமான பால் வகைகள்தான் அதிகமாக புழக்கத்தில் இருக்கின்றன. இந்த இரண்டு வகையான பால்களிலும் சில வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

  முக்கியமாக கொழுப்பு மற்றும் புரத சத்தில் வேறுபாடு காணப்படுகிறது. எருமை பாலை விட பசும் பாலில் கொழுப்பு குறைவாக இருக்கிறது. மேலும் எருமைபாலை விட பசும் பால் இலகுவான தன்மை கொண்டது. பச்சிளம் குழந்தைகளுக்கு பசுவின் பால் உகந்ததாக இருக்கிறது. பன்னீர், குல்பி, தயிர், நெய் ஆகியவை தயாரிப்பில் எருமை பால் முக்கிய பங்கு வகிக்கிறது.

  பாலின் தன்மை அடர்த்தியாக இருப்பதும் அதற்கு காரணமாக இருக்கிறது. பசுவின் பாலை விட எருமை பாலில் ஆக்சிடேசன் செயல்பாடு அதிகமாக இருக்கிறது. அதனால் பசுவின் பாலைவிட அதனை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த முடியும். பொதுவாக எந்த பாலாக இருந்தாலும் அது அதன் கன்றுகளுக்கானது. மனிதர்களுக்கானது அல்ல. இன்னொருபுறம் இயற்கையாகவே பால் பலருக்கு சரியாக செரிமானம் ஆவதில்லை. அதனால் நேரடியாக பாலை பருகுகிறவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

  ×