search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP candidates"

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து கட்சி மேலிடம் பரிசீலித்து நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #LSPolls #BJP
    சென்னை:

    தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் கன்னியாகுமரி, சிவகங்கை ஆகிய 2 தொகுதிகளிலும் காங்கிரசுடன் நேரடியாக மோதுகிறது.

    கூட்டணி கட்சியான அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. தேசிய கட்சியான பா.ஜனதா வேட்பாளர்களை டெல்லி மேலிடம்தான் அறிவிக்கும்.

    எனவே தமிழகத்தில் பா.ஜனதா போட்டியிட உள்ள கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, கோவை, ராமநாதபுரம் ஆகிய 5 தொகுதிகளிலும் போட்டியிட தகுதியான வேட்பாளர்கள் பெயர் பட்டியலை தமிழக நிர்வாகிகள் தயாரித்துள்ளனர்.



    இந்த பட்டியலுடன் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு கட்சி தலைவர் அமித்ஷாவிடம் பட்டியலை ஒப்படைக்கிறார். கட்சி மேலிடம் பரிசீலித்து நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பட்டியலை வெளியிடாவிட்டாலும் பெரும்பாலான தொகுதிகளில் தேர்தல் பணியை தொடங்கிவிட்டார்கள். கன்னியாகுமரியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் எச்.ராஜா ஆகியோருக்கு சீட் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    தூத்துக்குடியில் தமிழிசை, ராமநாதபுரத்தில் நயினார்நாகேந்திரன் அல்லது குப்புராம் நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது. இதுபற்றி தமிழிசையிடம் கேட்டபோது கட்சி அதிகாரப் பூர்வமாக எப்போது யாரை அறிவிக்கிறதோ அதன்பிறகு தான் வேட்பாளர் யார் என்பது உறுதியாக தெரியும் என்றார். #LSPolls #BJP
    ராஜஸ்தானில் பா.ஜனதா முதல் வேட்பாளர் பட்டியலில் 25 எம்.எல்.ஏ.க்களுக்கு டிக்கெட் கொடுக்க வில்லை. #BJP #RajasthanElections

    புதுடெல்லி:

    200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக டிசம்பர் 7-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    இதில் ஆளும் பா.ஜனதா கட்சி முதல் கட்டமாக 131 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது.

    பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரான ஜே.பி. நட்டா இந்த பட்டியலை வெளியிட்டார். முதல்-மந்திரி வசுந்தராராஜே தனது பாரம்பரிய மிக்க ஜால்ரா பதன் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இந்த பட்டியலில் தற்போதைய எம்.எல்.ஏ.க் கள் 25 பேருக்கு மீண்டும் டிக்கெட் கொடுக்க வில்லை. அவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 85 பேருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

    25 புதுமுகங்களுக்கு வேட்பாளர் பட்டியலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல 12 பெண்களுக்கு பா.ஜனதா வாய்ப்பு வழங்கி உள்ளது. #BJP #RajasthanElections

    ×