search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP candidate"

    தேர்தல் பிரசாரத்தில் ஐயப்ப சாமி பெயரை பயன்படுத்தி வாக்கு சேகரித்த நடிகர் சுரேஷ்கோபிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #LokSabhaElections2019 #ThrissurConstituency #SureshGopi
    திருச்சூர்:

    மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சுரேஷ்கோபி. இவர் பா.ஜ.க. சார்பில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். அந்த கட்சியின் சார்பில் தற்போது திருச்சூர் பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக அவர் களம் இறங்கி உள்ளார்.



    இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தின் போது ஐயப்ப சாமியின் பெயரை பயன்படுத்தி வாக்கு சேகரித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுதொடர்பாக திருச்சூர் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான, அனுபமாவிடம் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து 48 மணி நேரத்தில் பதில் அளிக்குமாறு சுரேஷ்கோபிக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பினார்.

    இந்த நடவடிக்கை குறித்து மாநில தேர்தல் அதிகாரி தீகா ராம் மீனா கூறும்போது, “தேர்தல் பிரசாரத்தின் போது ஐயப்ப சாமியின் பெயரையோ அல்லது வேறு எந்த கடவுளின் பெயரையோ பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. ஆனால் நடிகர் சுரேஷ்கோபி ஐயப்ப சாமி குறித்து பேசியதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதனால் அவருக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியது சரியான நடவடிக்கைதான்” என்றார். #LokSabhaElections2019 #ThrissurConstituency #SureshGopi

    அருணாசல பிரதேச சட்டசபை தேர்தலில் 2 பா.ஜனதா வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு ஆகின்றனர். #Arunachal #BJPCandidate
    புதுடெல்லி:

    அருணாசல பிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி பெமா காண்டு தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. அந்த சட்டசபையின் ஆயுள் ஜூன் 1-ந் தேதி முடிகிறது. எனவே பாராளுமன்ற தேர்தலுடன் 60 இடங்களை கொண்ட அருணாசல பிரதேச சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.

    இதேபோன்று ஆயுள்காலம் முடிகிற சிக்கிம், ஒடிசா, ஆந்திரா மாநில சட்டசபைகளுக்கும், பாராளுமன்ற தேர்தலுடன் தேர்தல் நடத்தப்படுகிறது.

    60 இடங்களை கொண்ட அருணாசல பிரதேச சட்டசபை தேர்தலில், ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 11-ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 18-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி முடிந்தது. நேற்று வேட்பு மனு பரிசீலனை முடிந்தது. வேட்பு மனுக்களை திரும்பப்பெற நாளை (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும்.

    இந்த நிலையில், அங்கு சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் 2 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள். அவர்கள், ஆலோ கிழக்கு தொகுதியில் போட்டியிடும் சர் கெண்டோ ஜினியும், யாசூலி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் எர் தபா தெதிரும் ஆவார்கள்.

    அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களுக்கு எதிராக யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

    வேட்பு மனு தாக்கல் முடிவு அடைந்து விட்டபடியால் அவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.

    இதையொட்டி பாரதீய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் ராம்மாதவ் டுவிட்டரில் மகிழ்ச்சியுடன் 2 பதிவுகள் வெளியிட்டார்.

    ஒரு பதிவில், “அருணாசல பிரதேசத்தில் இருந்து பாரதீய ஜனதா கட்சியின் வெற்றி அணிவகுப்பு தொடங்கி விட்டது. ஆலோ கிழக்கு தொகுதியில் சர் கெண்டோ ஜினி போட்டியின்றி வெற்றி பெற்றிருக்கிறார்” என குறிப்பிட்டுள்ளார்.

    மற்றொரு பதிவில், “அருணாசலபிரதேசத்தில் இருந்து மற்றொரு வெற்றியும் வந்திருக்கிறது. யாசூலி சட்டசபை தொகுதியில் எர் தபா தெதிர் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.

    2009 சட்டசபை தேர்தலில், முதல்-மந்திரி தோர்ஜீ காண்டுவும் (காங்கிரஸ்), 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் போட்டியின்றி தேர்வு பெற்றது நினைவுகூரத்தக்கது.
    பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #TamilisaiSoundararajan #BJP

    ஆலந்தூர்:

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவா முதல்வரும் முன்னாள் ராணுவ மந்திரியுமான மனோகர் பாரிக்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். அவரின் மறைவு நாட்டிற்கு பெரிய இழப்பு. அவரது மறைவு காரணமாக பா.ஜனதா பாராளுமன்ற குழு கூட்டம் நாளைக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது.

    நாளைய தினம் நடைபெறும் பா.ஜனதா பாராளுமன்ற குழு கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும். அதன்பின்பு வேட்பாளர்கள் பட்டியல் நாளைய தினமே வெளியிடப்படும்.

    காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி தோல்வி கூட்டணி. எங்கள் பிரச்சாரம் மக்களை நேரில் சந்திக்கும் பிரசாரமாக இருக்கும்.

    சவுகிதார் என்றால் மக்களின் காவலன் என்று அர்த்தம் . மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எடுத்துக்காட்டுக்காக இந்த பெயர் இடம்பெற்றுள்ளது. எனவே பிரதமர் மோடி மக்களின் காவலன், மக்களுக்கு சேவை செய்பவர்.

    தூத்துக்குடியில் போட்டியிடுவீர்களா? என்று கேட்கிறீர்கள்.கட்சி எங்கு நிற்க சொல்கிறதோ அங்கு நிற்பேன். கட்சியின் விருப்பம் தான் என் விருப்பம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan #BJP

    தனக்கு வாக்களிக்காவிட்டால் தூக்குபோட்டு தற்கொலை செய்வேன் என்று கூறி பா.ஜனதா வேட்பாளர் வாக்கு சேகரித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #RajasthanElection #BJP
    ஜெய்ப்பூர்:

    200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு ஒரே கட்டமாக டிசம்பர் 7-ந்தேதி தேர்தல் நடக்கிறது. அங்கு பா.ஜனதா ஆட்சியை தக்க வைக்கவும், காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றவும் கடுமையாக போராடி வருகிறது.



    பா.ஜனதா மந்திரியான ஸ்ரீசந்த் கிருபலானிக்கு மீண்டும் டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் நிம்பஹாரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

    தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசும்போது மக்கள் எனக்கு வாக்களிக்காவிட்டால் தூக்கில் தொங்குவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். சித்தோ கட் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் திருப்பலானி பேசும் போது நீங்கள் எனக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற செய்யவேண்டும். அப்படி எனக்கு வாக்களிக்காவிட்டால் தூக்குபோட்டு தற்கொலை செய்வேன். என்று பேசினார்.

    அவரது இந்த பிரசார யுக்தி வாக்காளர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதே போல தெலுங்கானாவில் வேட்பாளர் ஒருவர் வித்தியாசமாக வாக்கு சேகரித்தார். சுகுலா ஹனுமந்த் என்பவர் கொருட்லா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

    அவர் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்கும்போது ஒரு ஜோடி செருப்பையும் கொடுக்கிறார்.

    எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் பொது இடத்தில் வைத்து இந்த செருப்பால் அடிக்குமாறு கூறி வாக்கு சேகரிக்கிறார். #RajasthanElection #BJP
    மத்திய பிரதேசத்தில் ஓட்டு கேட்டு காலில் விழுந்த பாஜக எம்எல்ஏவுக்கு செருப்பு மாலை அணிவித்து அவமானப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #MadhyaPradeshElections #BJPMLA #ShoeGarland
    இந்தூர்:

    மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் 28-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய பிரதேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாக முதல்-மந்திரி சவுகான் தலைமையில் பா.ஜனதா ஆட்சியில் இருந்து வருகிறது. அங்கு மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் பா.ஜனதா செயல்பட்டு வருகிறது. இதற்காக கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் பாஜக எம்எல்ஏவும் நகடா தொகுதியின் பாஜக வேட்பாளருமான திலிப் ஷெகாவத், கடந்த 19-ம் தேதி வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது பெரியவர்களின் காலைத் தொட்டு வணங்கி வாக்கு கேட்டபடி சென்றார். இப்படி ஒருவரின் காலைத் தொட்டு வணங்கி எழுந்தபோது, அந்த நபர் திடீரென வேட்பாளரின் கழுத்தில் செருப்பு மாலை அணிவித்தார்.

    இதனால் கடும் அவமானமும் ஆத்திரமும் அடைந்த வேட்பாளர் திலிப் ஷெகாவத், செருப்பு மாலையை உடனடியாக கழற்றி வீசியதுடன், அந்த நபரை அடித்தார். பின்னர் அருகில் இருந்தவர்களும் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    கடந்த 19-ம் தேதி நடந்த இந்த சம்பவத்தை யாரோ செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். அது வைரலாக பரவி வருகிறது. #MadhyaPradeshElections #BJPMLA #ShoeGarland



    மத்திய பிரதேசத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ராஜ்பூர் சட்டமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளர் மரணம் அடைந்தார். #MadhyaPradeshElections #BJPCandidateDies
    ராஜ்பூர்:

    230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப்பிரதேச மாநில சட்டசபைக்கு வருகிற நவம்பர் 28-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. 15 ஆண்டுகளாக முதல்-மந்திரி சவுகான் தலைமையில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜக, மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக தீவிரமாக ஆய்வு செய்து, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



    இந்நிலையில், ராஜ்பூர் சட்டமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளர் தேவி சிங் படேல் இன்று மரணம் அடைந்தார். தூங்கிக்கொண்டிருந்தபோது அன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிர் பிரிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    ராஜ்பூர் தொகுதியில் 4 முறை வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தேவி சிங். அவரது மறைவு பாஜக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாஜக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். வேட்பாளர் மரணம் அடைந்ததால் ராஜ்பூர் தொகுதியில் தேர்தல் நிறுத்திவைக்கப்படும்.  #MadhyaPradeshElections #BJPCandidateDies
    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் சண்டிகார் தொகுதியில் பாஜக வேட்பாளராக பிரபல கிரிக்கெட் வீரர் கபில்தேவ் போட்டியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. #KapilDev #AmitShah #BJP
    அமிர்தசரஸ்:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) தேர்தல் நடைபெற இருப்பதால், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க. இப்போதே தயாராகி வருகிறது. முதல் கட்டமாக 543 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை பா.ஜ.க. நியமனம் செய்து வருகிறது.
    அடுத்தக் கட்டமாக முக்கிய தொகுதிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்து இப்போதே அவர்களை களம் இறக்கவும் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் முக்கிய தொகுதிகளை ஆய்வு செய்து பட்டியல் தயாரித்துள்ளார்.

    அந்த தொகுதிகளில் எந்தெந்த பிரபலங்களை நிறுத்தினால் மிக எளிதாக வெற்றி பெறலாம் என்றும் வியூகம் வகுத்துள்ளார். அந்த அடிப்படையில் அவர் பிரபலங்களை சந்தித்து பேச்சு வார்த்தையிலும் ஈடுபட்டுள்ளார்.



    சமீபத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் கபில்தேவை அமித்ஷா சந்தித்து பேசினார். பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து நாடெங்கும் முக்கிய நகரங்களுக்கு சென்று பிரசாரம் செய்வதற்காக கபில்தேவின் ஒத்துழைப்பை அமித்ஷா கேட்டதாக அப்போது தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில் கபில்தேவை பா.ஜ.க. வேட்பாளராக களம் இறக்கவே அவரை அமித்ஷா சந்தித்து பேசியதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து சண்டிகார் பாராளுமன்ற தொகுதியில் கபில்தேவ் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. தற்போது சண்டிகார் தொகுதி எம்.பி. ஆக நடிகை கிர்ரான் கெர் இருந்து வருகிறார். அவர் அந்த தொகுதியை விட்டுக் கொடுக்க மறுத்தால், கபில்தேவை மேல்-சபை எம்.பி.யாக தேர்வு செய்ய பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். #KapilDev #AmitShah #BJP
    ×