search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bill Gates"

    • சச்சின் தெண்டுல்கர் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சை சந்தித்தார்.
    • மும்பை சென்ற பில்கேட்ஸ் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாசை சந்தித்தார்.

    மும்பை:

    மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மும்பை சென்ற பில்கேட்ஸ், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாசை சந்தித்தார்.

    இந்நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் மற்றும் அவரது மனைவி அஞ்சலி ஆகியோரை மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் நேற்று சந்தித்துப் பேசினார்.

    இந்த சந்திப்பு குறித்து சச்சின் டுவிட்டர் பதிவில், நாம் அனைவரும் வாழ்நாள் முழுவதும் மாணவர்கள். உலகின் சவால்களைத் தீர்க்க யோசனைகளைப் பகிர்வது ஒரு சக்திவாய்ந்த வழியாகும். உங்கள் நுண்ணறிவுக்கு நன்றி பில்கேட்ஸ் என தெரிவித்துள்ளார்.

    • இளைஞர் ஒருவர் ரொட்டியை (சப்பாத்தி) சமைக்கும் முறையை பிக் கேட்ஸூக்கு கற்றுக் கொடுக்கிறார்.
    • இந்தியாவில் பல தினை உணவுகள் உள்ளன. அவற்றையும் நீங்கள் செய்து பார்க்கலாம்.

    உலக கோட்டீஸ்வரரும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸ் தான் ரொட்டி சமைக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

    அந்த வீடியோவில், செப் ஒருவர் தான் இந்தியா சென்று வந்ததாகவும், அங்கு பிரபலமான ரொட்டியை (சப்பாத்தி) சமைக்கும் முறையை பிக் கேட்ஸூக்கு கற்றுக் கொடுக்கிறார்.

    மாவு பிசைந்து, உருண்டை பிடித்து வட்டமாக தேய்த்து சப்பாத்தி சுடுவதை பின்பற்றி, பில்கேட்ஸ் ரொட்டி சுட்டார். இந்த வீடியோ வைரலானது.

     இந்நிலையில், பில்கேட்ஸின் சமையலுக்கு பிரதமர் மோடி பாராட்டினார். மேலும், "இந்தியாவில் ஆரோக்கியமான உணவுகளின் ஒன்று திணை. இந்தியாவில் பல தினை உணவுகள் உள்ளன. அவற்றையும் நீங்கள் செய்து பார்க்கலாம்" என்று சிரித்த எமோஜியுடன் பிரதமர் கூறினார்.

    • இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரித்துள்ளது என பில் கேட்ஸ் பாராட்டினார்.
    • பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவற்றில் வளர்ச்சிக்கான பிரதமர் மோடியின் முயற்சிகளை பாராட்டியுள்ளார்.

    வாஷிங்டன்:

    நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    டிஜிட்டல் பணம் செலுத்துதல், சுகாதாரம், தடுப்பூசி இயக்கம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவற்றில் வளர்ச்சிக்கான மோடியின் முயற்சிகளை பில் கேட்ஸ் பாராட்டியுள்ளார்.

    இந்தியாவில் பல விஷயங்கள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரித்திருப்பது, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் இதில் முதலீடு செய்வதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என பில் கேட்ஸ் தெரிவித்தார். தடுப்பூசி செலுத்துவதை அதிகரிப்பதில் இந்தியாவின் முயற்சிகளைப் பில் கேட்ஸ் பாராட்டினார்.

    • இந்தியாவில் 90 சதவீதம் பேர் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
    • கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தியிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    வாஷிங்டன்:

    கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி முதல் செலுத்தப்படுகின்றன.

    நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி 200 கோடி டோஸ் என்ற மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது. 18 மாதங்களில் 200 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது புதிய சாதனை என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில், இந்தியாவில் 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை செய்துள்ளதற்கு பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பில்கேட்ஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், வாழ்த்துகள் நரேந்திர மோடி. சிறந்த நிர்வாகத்துக்கான மற்றொரு மைல் 200 கோடி தடுப்பூசிகள். கொரோனாவின் தாக்கத்தைக் குறைப்பதற்காக இந்திய தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மற்றும் இந்திய அரசாங்கத்துடனான எங்கள் தொடர்ச்சியான கூட்டாண்மைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

    • பில் கேட்ஸ் நன்கொடைகள் வழங்குவதில் பெயர் பெற்றவர்.
    • பில் கேட்ஸ் அவர்களின் மனிதாபிமானத்தை இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

    வாஷிங்டன் :

    உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில் கேட்ஸ் நன்கொடைகள் வழங்குவதில் பெயர் பெற்றவர். இதற்காக இவர் 2000 ஆம் ஆண்டு பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் என்ற அறக்கட்டளையை தொடங்கினார். இந்த அறக்கட்டளையில் சுகாதாரம், கல்வி போன்ற பல துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பில் கேட்ஸ் தனது அனைத்து சொத்துக்களையும் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பில் கேட்ஸ் இந்த மாதம் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களை பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்குகிறார். 20 பில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்குவது குறித்து பில் கேட்ஸ் கூறியதாவது:

    எதிர்காலத்தில் எனக்கும் எனது குடும்பத்திற்கும் நான் செலவழிப்பதைத் தவிர எனது அனைத்து சொத்துக்களையும் அறக்கட்டளைக்கு வழங்க திட்டமிட்டுள்ளேன். நான் இந்தப் பணத்தைக் கொடுப்பதை தியாகமாக நினைக்கவில்லை. மிக பெரிய சவால்களைச் சமாளிப்பதில் நான் ஈடுபட்டிருப்பதை நான் பாக்கியமாக உணர்கிறேன்.

    மேலும் எனது வளங்களை சமூகத்திற்குத் திருப்பித் தர வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    பில் கேட்ஸ் அவர்களின் மனிதாபிமானத்தை இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

    • மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
    • இப்படத்தை இயக்குனர் பரசுராம் இயக்கியுள்ளார்

    தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ் பாபு.  மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் நடித்த படம் சர்காரு வாரி பாட்டா. இந்த படத்தை இயக்குனர் பரசுராம் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் சமீபத்தில்  திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மகேஷ் பாபுவின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


    பில்கேட்ஸை சந்தித்த மகேஷ் பாபு

    இந்நிலையில், நடிகர் மகேஷ் பாபுவும் அவரது மனைவி நம்ரதாவும் உலக பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனருமான பில்கேட்ஸை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.

    இந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள மகேஷ் பாபு, " பில்கேட்ஸை சந்திக்கும் மகிழ்ச்சியான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதுவரை உலகம் பார்த்த மிகச் சிறந்த தொலைநோக்கு சிந்தனையாளர்களில் ஒருவர். ஆனாலும் மிக எளிமையான மனிதர். இவர் உண்மையில் ஒரு உத்வேகம்" என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

    உலகின் முன்னனி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன்(65) புற்றுநோய் காரணமாக இன்று உயிரிழந்தார். #PaulAllen #Microsoft #BillGates
    வாஷிங்டன் :

    அமெரிக்காவின்பெரும் தொழிலதிபர், முதலீட்டாளர், அறப்பணியாளர், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் தனது 65வது வயதில் புற்றுநோய் காரணமாக இன்று உயிரிழந்ததாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவின் சியாட்டில் நகரில் பிறந்த பால் ஆலன் 14 வயதில் லேக்சைடு பள்ளியில் படிக்கும்போதுதான் தன்னைப் போலவே கம்ப்யூட்டரில் அடங்கா ஆர்வமும் திறனும் கொண்டிருந்த 12 வயது பில்கேட்ஸை சந்தித்தார். இருவரும் கல்லூரியில் படிப்பை நிறுத்திவிட்டு கம்ப்யூட்டருக்கு மென்பொருள் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினர்.

    இருவரும் இணைந்து 1975-ல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தைத் தொடங்கினர். MS-DOS போலவே Q-DOS என்ற மென்பொருளைக் கண்டறிந்து, ஐபிஎம் நிறுவனத்தின் பி.சி. ஆபரேட்டிங் சிஸ்டத்தில் நிறுவினர். 1981-ல் இது வெளியானதில் இருந்து கணினிச் சந்தையில் அவர்களது வெற்றிக்கொடி பறக்கத் தொடங்கியது.

    மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை தொழில்நுட்ப வல்லுநராக 1983 வரை இருந்தார். இந்நிறுவனத்தின் `ஐடியா மேன்’, `மேன் ஆஃப் ஆக்‌ஷன்’ என்று அழைக்கப்பட்டார். 30 வயது நிறைவடைவதற்குள் நிறுவனம் இவரை கோடீஸ்வரனாக்கிவிட்டது. புற்றுநோய் தாக்கியதால் நிறுவனத்தில் இருந்து விலகி சிகிச்சை பெற்றார். நோயை வெற்றிகண்டு மீண்டும் களமிறங்கி வல்கன் வெஞ்சர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார்.

    ஆனால், மீண்டும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் தீவிர வாழ்க்கையில் இருந்து ஓய்வு எடுத்து வந்தார். தான் சம்பாதித்த பணத்தைச் சமூகத்துக்குத் திருப்பித்தர வேண்டும் என்ற உந்துதலில் உலகம் முழுவதும் பல நற்பணிகளைச் செய்துவந்தார்.

    ஆப்ரிக்க நாடுகளில் எபோலோ நோய் பரவல் தடுப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை இவர் வழங்கியுள்ளார். ‘ஐடியா மேன்’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ள இவர் பல்வேறு விருதுகளைம் பெற்றுள்ளார்.



    இந்நிலையில், தனது 65 வது வயதில் புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததாக மைக்ரோசாப்ட் நிறுவனம் மற்றும் அவரது சகோதரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு மைக்ரோசாப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். பால் ஆலன் இழப்பு மைக்ரோசப்ட் நிறுவனத்தின் மிகப்பெரிய இழப்பு என அவரது இரங்கல் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். #PaulAllen #Microsoft #BillGates
    உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் ஜெப்பெசோஸ் முதலிடம் பிடித்துள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு141.9 பில்லியன் டாலர். #Amazon #JeffBezos
    நியூயார்க்:

    உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டது.

    அதில் அமேசான் நிறுவனத்தின் ஜெப்பெசோஸ் முதலிடம் பிடித்துள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு141.9 பில்லியன் டாலர். ஜெப்பெசோஸ் அமேசான் நிறுவனத்தை 1994-ம் ஆண்டு தொடங்கினார்.

    தற்போது இந்த நிறுவனம் உலகின் மிகப்பெரிய வணிக நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 5 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். உலகின் மிகப்பெரிய மதிப்பு கொண்ட நிறுவனங்கள் பட்டியலில் ஆப்பிளுக்கு அடுத்த படியாக அமேசான் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

    உலக பணக்காரர்கள் குறித்த போர்ப்ஸ் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இந்த தடவை 2-வது இடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 92.9 பில்லியன் டாலர்.


    நீண்ட காலம் உலகின் நம்பர்-1 பணக்காரர் என்ற அந்தஸ்தை பில்கேட்ஸ் பிடித்திருந்தார். தற்போது அவர் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

    இவருக்கு அடுத்தப்படியாக பெர்னாட் அர்னால்ட் 3-வது இடத்தை பிடித்துள்ளார். இவரது (சொத்து மதிப்பு 75.7 பில்லியன் டாலர்) வாரன்பப்பெட்4-வது இடத்தை பிடித்துள்ளார். சொத்து மதிப்பு 91.3 பில்லியன் டாலர்.

    பேஸ்புக் நிறுனர் மார்க் ஷுகர்பெர்க் 5-வது இடம் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 74.6 பில்லியன் டாலர்.

    உலகின் மிகப்பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இந்திய வர்த்தகர் முகேஷ் அம்பானிக்கு 22-வது இடம் கிடைத்துள்ளது. இவர் ரிலையன்ஸ் இண்டர்ட்ரீங் லிமிடெட்டின் தலைவர் மற்றும் மானேஜிங் டைரக்டராக இருக்கிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு 39.6 பில்லியன் டாலர்.

    தற்போது இவர் ஆசியாவின் நம்பர் 1 பணக்காரராக இருக்கிறார். #Amazon #JeffBezos #BillGates
    ×