search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bhavani"

    • பவானி ஆற்றில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி பவானிசாகர் போலீசில் புகார் கொடுத்தார்.
    • இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    பவானிசாகர் அண்ணா நகர் மீனவர் காலனி பகுதியில் உள்ள பவானி ஆறு வட்டபாறை பகுதியில் முடுக்கன் துறை கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி மற்றும் கிராம உதவியாளர் சுப்பிரமணி ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது பவானி ஆற்றில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி பவானிசாகர் போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி முதியவர் பிணத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற எந்த விபரமும் தெரியவில்லை.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பவானிசாகர் அணையில் இருந்து 905 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பவானிசாகர்:

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 82.43 அடியாக இருந்தது.

    அணைக்கு வினாடிக்கு 261 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    அணையில் இருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி கால்வாயில் 800 கனஅடியும், குடிநீருக்காக 100 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கனஅடியும் என மொத்தம் 905 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • நேற்று இரவு நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு இன்று காலை நீர்வரத்து அதிகரித்து வந்தது.
    • பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக 905 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வந்தது. நீர்வரத்தை காட்டிலும் தொடர்ந்து பாசனத்துக்காக அதிக அளவில் பவானி சாகர் அணையின் நீர் வெளி யேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு இன்று காலை நீர்வரத்து அதிகரித்து வந்தது.இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.53 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 905 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 800 கன அடி, கீழ்பவானி வாய்க்கா லுக்கு 5 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக 905 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    பவானி அருகே பணத்தகராறில் தந்தையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மகனை போலீசார் கைது செய்தனர்.
    பவானி:

    பவானி அருகே உள்ள மயிலம்பாடி, போத்தநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் ராம்நாயக்கர் (வயது 50). இவரது மகன் பிரசன்னா (22).

    இவர் தனது தந்தையிடம் ரூ. 2 லட்சம் பணம் கேட்டார். ‘‘அவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போவேன்’’ என்று கூறிய தந்தை ராம்நாயக்கர் பணம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பிரசன்னா தனது தந்தையிடம் வாக்குவாதம் செய்தார். தந்தையை திட்டிய அவர் கொலை மிரட்டலும் விடுத்தாராம்.

    எனவே ராம் நாயக்கர் வீட்டைவிட்டு வெளியே சென்றார். இந்த நேரத்தில் வீட்டில் இருந்த தனது தாயை பிரசன்னா தாக்கினார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராம் நாயக்கர் வீட்டுக்குள் சென்று பிரசன்னாவை தடுத்தார். அப்போது ராம் நாயக்கரை பிரசன்னா தாக்கி கீழே தள்ளி விட்டார்.

    இந்த கைகலப்பு சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதை பார்த்த பிரசன்னா அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

    இது குறித்து பவானி போலீஸ் நிலையத்தில் ராம் நாயக்கர் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரஸ்வதி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த பிரசன்னாவை கைது செய்தார். #Tamilnews
    அம்மா பாணியில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி புரட்சிதலைவி ஜெயலலிதாவின் வாரிசாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார்.
    ஈரோடு:

    பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

    விழாவில் சுற்று சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    மறைந்த அம்மாவின் ஆசியுடன் இந்த ஆட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக நடத்தி வருகிறார். மக்களின் அனைத்து அடிப்படை வசதிகளையும் செயல்படுத்தி வருகிறார்.

    இன்று மக்களை முதல்வர் நேரில் சந்தித்து குறைகளை கேட்டு நிவர்த்தி செய்து வருகிறார். அம்மா பாணியில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி புரட்சிதலைவி ஜெயலலிதாவின் வாரிசாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார்.

    ஜெயலலிதா ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாக இருந்தது. 7 ஆண்டாக மின்துறை அமைச்சர் தங்கமணி தமிழ்நாட்டை மின்வெட்டு இல்லாத மாநிலமாக்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    இப்படி சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக அரசை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தினமும் விமர்சித்து வருகிறார். அவர் செயல் தலைவர் அல்ல செயல் இழந்த தலைவராக உள்ளார். அவர் என்னதான் ஆட்சியை விமர்சனம் செய்தாலும் மக்கள் அதை நம்பமாட்டார்கள். அவர் மீது மக்கள் வெறுப்புடன்தான் உள்ளனர்.

    காவிரி ஆணையத்தை புதுப்பிக்க தவறியவர் கலைஞர். ஆனால் 48 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து சட்ட போராட்டம் நடத்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நீதிமன்றம் மூலம் உத்தரவு வாங்கியவர் ஜெயலலிதா.

    தினகரன் புதிய கட்சி தொடங்கி இருப்பது வேடிக்கை. அவருக்கு மக்கள் செல்வாக்கு இல்லை. குறிப்பாக கொங்கு நாட்டு மக்களுக்கு தினகரன் யார் என்று தெரியாது.

    இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார்.
    ×