search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BharathBandh"

    பெட்ரோல் டீசல் விலை உயர்வு தொடர்பாக கடந்த காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பீடு செய்து பாஜக விளக்கப்படம் ஒன்று வெளியிட்டது. அதில் காட்டப்பட்ட கணக்கு விவரங்களை நெட்டிசன்கள் கலாய்த்து டிரெண்ட் ஆக்கினர். #BharathBandh #PetrolDieselPriceHike #BJP #Congress
    புதுடெல்லி :

    நாள்தோறும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நேற்று நாடு தழுவிய முழு அடைப்பு (பாரத் பந்த்) போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் முற்றிலும் தோல்வியடைந்து விட்டதாக பா.ஜ.கவும், வெற்றி பெற்றுவிட்டதாக காங்கிரசும் கூறியுள்ளன.

    இதற்கிடையே பெட்ரோல் டீசல் விலை உயர்வு தொடர்பாக கடந்த காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பீடு செய்து பாஜக விளக்கப்படமும், அதே விளக்கப்படத்தை மாற்றம் செய்து காங்கிரஸ் வெளியிட்ட விளக்கப்படமும் சமூக வளைதளங்களில் கேலி கிண்டல்களுக்கு உள்ளாகி டிரெண்டானது.

    அதில், 2004-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த சமயம் ரூ.21.74 ஆக இருந்த பெட்ரோல் விலை 2009-ம் ஆண்டு ஆட்சிக்காலம் முடியும் போது 42 சதவிகதம் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.30.86 க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் மீண்டும் ஆட்சிக்கு வந்த காங்கிரசின் இரண்டாவது ஆட்சிக்காலம் முடிவடைந்த 2014-ம் ஆண்டு 83.7 சதவிகதம் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 56.71 க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இதற்கிடையே, 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சி பொறுப்பேற்ற போது ரூ 56.71 இருந்த பெட்ரோல் விலை கடந்த நான்கு ஆண்டுகளில் வெறும் 28 சதவிகதம் மட்டுமே அதிகரித்து 72.83 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இது காங்கிரசின் ஆட்சிக் காலங்களை ஒப்பிடும் போது மிகவும் குறைவு என்பது போல் அந்த விளக்கப்படத்தில் பாஜக நவீன கணக்கு காட்டியது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக விளக்கப்படத்தையே சற்று மாற்றி அமைத்து காங்கிர்ஸ் கட்சி மற்றொறு விளக்கப்படத்தை வெளியிட்டது.



    அதில் கடந்த 2009-ம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 71.9 அமெரிக்க டாலராக இருந்த போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 44 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் 2018-ம் ஆண்டு அதே கச்சா எண்ணெய் விலை மீண்டும் 71.9 டாலராக குறைந்த பின்னரும் பெட்ரோல் விலை குறைக்கப்படாமல் இரண்டு மடங்காக உயர்ந்து ரூ. 80.73 க்கு விற்பனை செய்யப்படுவது ஏன் ? என்பது போல் காங்கிரஸ் வெளியிட்ட விளக்கப்படம் அமைந்தது.



    இவை இரண்டும் நெட்டிசன்கள் கைகளில் சிக்கவே இதை கேலி கிண்டல் செய்து சமூக வளைதளங்களில் பதிவிட தொடங்கினர். இதனால் இந்த இரண்டு விளக்கப்படங்களும் சமூக வளைதளங்களில் டிரெண்ட் ஆக தொடங்கியது. அதில் சில பதிவுகள் :-

    #BharathBandh #PetrolDieselPriceHike #BJP #Congress
    பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசு பொறுப்பில்லை என்று பாஜக கூறுவது இந்த ஆண்டின் மிகப் பெரிய நகைச்சுவை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். #BharathBandh #PChidambaram #PetrolDieselPrice
    புதுடெல்லி :

    வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் முழு அடைப்பு போராட்டம் இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வில் அரசின் பங்கு எதுவும் கிடையாது என பா.ஜனதா கூறியது.

    இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தன்னுடைய கருத்தை டுவிட்டரில் வரிசையாக பதிலிட்டுள்ளார்.

    அதில், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசு பொறுப்பில்லை என்று பாஜக கூறுவது இந்த ஆண்டின் மிகப் பெரிய நகைச்சுவை!. பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு விதித்துள்ள கொடுமையான வரிகள் தான் விலை உயர்வுக்குக் காரணம் என்பதைச் சிறு பிள்ளைகள் கூட அறிவார்கள்.

    பெட்ரோல், டீசல் பொருட்களை ஜிஎஸ்டி வரி முறையின் கீழ் கொண்டு வருவதற்கு ஏன் மத்திய அரசு முரட்டுத்தனமாக மறுக்கிறது? கச்சா எண்ணெய் விலை ரூ.107 ஆக இருந்த போது விலை குறைவு. இப்பொழுது கச்சா எண்ணெய் விலை ரூ. 78 ஆக இருக்கும் போது விலை உயர்வு! ஏன்? ஏன்? என கேள்வியை எழுப்பியுள்ளார். #BharathBandh #PChidambaram #PetrolDieselPrice
    ×