search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "beer bottle"

    • வாலிபர் மீது பீர் பாட்டில் தாக்குதல் நடந்தது.
    • அவர்கள் ஜெய்ஹிந்த்புரம், நேதாஜி தெரு, வெங்கடேசன் (44), திலகர் தெரு ரவிக்குமார் (54), திடீர் நகர் ஆனந்த் (38), நேரு தெரு ரமேஷ் (44) என்பது தெரிய வந்தது.

    மதுரை

    மதுரை மீனாம்பிகை நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). இவர் நேற்று இரவு ராமையா தெருவில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைக்கு சென்று மது அருந்தினார். அப்போது அவருக்கும், அங்கு இருந்த 4 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த 4 பேர் கொண்ட கும்பல், மணிகண்டனை பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை பிடித்து விசாரித்தனர்.

    இதில் அவர்கள் ஜெய்ஹிந்த்புரம், நேதாஜி தெரு, வெங்கடேசன் (44), திலகர் தெரு ரவிக்குமார் (54), திடீர் நகர் ஆனந்த் (38), நேரு தெரு ரமேஷ் (44) என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து டாஸ்மாக் மதுபான கடையில் மணிகண்டனை பீர் பாட்டிலால் தாக்கியதாக, மேற்கண்ட 4 பேரையும் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் கைது செய்தனர்.

    மது குடிக்க வந்த தொழிலாளியை தாக்கிய டாஸ்மாக் காசாளர் முத்து கருப்பையாவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை:

    கோவை வெள்ளலூர் குடிைச மாற்றுவாரிய குடியிருப்பை சேர்ந்தவர் முத்து (வயது 25). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மாமாவுடன் வெரைட்டிஹால் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார். அப்போது முத்து போதை தலைக்கேறிய நிலையில் அருகே உள்ள நாற்காலி மீது சரிந்தார்.

    இதனை பார்த்த டாஸ்மாக் பாரில் காசாளராக வேலை பார்க்கும் தஞ்சாவூரை சேர்ந்த முத்து கருப்பையா (21) என்பவர் முத்துவிடம் வந்து தகராறு செய்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முத்து கருப்பையா அங்கு இருந்த பீர் பாட்டிலை எடுத்து முத்துவின் தலையில் தாக்கினார்.

    இதில் படுகாயம் அடைந்த அவரரை அங்கு இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மது குடிக்க வந்த தொழிலாளியை தாக்கிய டாஸ்மாக் காசாளர் முத்து கருப்பையாவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ெஜயிலில் அடைத்தனர். 

    ×