என் மலர்
நீங்கள் தேடியது "bedroom layout"
- உறக்கத்தை எளிமையாக பெறுவது சாத்தியமாக இருக்கும்.
- கட்டில்கள் மரத்தால் செய்யப்பட்டதாக இருக்கவேண்டும்.
வீடுகளில் உள்ள மற்ற அறைகளுக்கு இல்லாத முக்கியமான பங்கு படுக்கையறைக்கு இருக்கிறது. காரணம் பகல் முழுவதும் நம்மால் செலவழிக்கப்பட்ட உடலின் சக்தியை, உறக்கத்தின் மூலம் உடல் திரும்பவும் பெற்றுக்கொள்கிறது என்பது யாவருக்கும் தெரியும். படுக்கையறை அமைக்கப்படும்போது அமைதியான சூழலை மனதில் கொண்டு செயல்படவேண்டும் என்று கட்டுமான வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். அவர்களது ஆலோசனைகளையும், அமைதி தரக்கூடிய வண்ணங்களை பயன்படுத்துவது பற்றிய முக்கியமான தகவல்களையும் இங்கே பார்ப்போம்.
சிறியவர் முதல் பெரியவர் வரை ரிலாக்சாக இருக்கும் இடமாக படுக்கையறை இருப்பதால் அதன் அமைப்பு, அறையில் உள்ள பொருட்கள், பூசப்பட்ட வண்ணங்கள் மற்றும் படுக்கைகள் ஆகிய அனைத்திலும் தகுந்த கவனம் செலுத்தினால், அருமையான உறக்கத்தை எளிமையாக பெறுவது சாத்தியமாக இருக்கும் என்று கட்டிட பொறியாளர்கள் சொல்கிறார்கள்.
மின்சாதனங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நுட்பமான பொருட்களை பயன்படுத்த வேண்டியது அவசியமாக இருக்கிறது. அமைதி நிலவ வேண்டிய படுக்கைகளில் ஆடியோ ஸ்பீக்கர்கள் அலறுகின்றன. உறக்கம் தழுவும் கண்களை பெரிய திரை தொலைக்காட்சி பெட்டிகள் துடிப்புடன் இயங்க வைக்கின்றன. அதிகப்படியான வெளிச்சம் மற்றும் சத்தம் ஆகியவை உறக்கத்தை தரும் அமைதியான மனநிலைக்கு எதிராக உள்ளன. முடிந்த வரையில், எலக்ட்ரானிக் பொருட்களின் பயன்பாடுகளை படுக்கையறையில் தவிர்க்கலாம்.

தலையணைகள் மற்றும் மெத்தைகள் இலவம் பஞ்சால் செய்யப்பட்டிருப்பது உடலின் ரத்த ஓட்டம் மற்றும் சரியான இயக்கத்துக்கு துணை புரிவதாக கண்டறியப்பட்டுள்ளது. கட்டில்கள் முடிந்த வரையில் மரத்தால் செய்யப்பட்டதாக இருக்கவேண்டும். விரிப்புகள், உறைகள் ஆகியவற்றையும் அறையின் வண்ணங்களோடு பொருந்தும்படி தேர்ந்தெடுப்பது அவசியமானது. அதன்வாயிலாக கண்களும், மனமும் உறுத்தல் இல்லாத சமநிலைக்கு செல்ல ஏதுவாக இருக்கும். அந்த நிலை உறக்கத்துக்கு அவசியம்.

மன அமைதியில் வண்ணங்களின் பங்கு இருப்பது பற்றி அறிவியல் ரீதியான ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு அவற்றை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதில் பல்வேறு முறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. மன அமைதியை உண்டாக்கும் வண்ணங்களில் நீல வண்ணத்துக்கு நிகராக எதுவும் இல்லை என்பது பலருடைய அனுபவமாக உள்ளது. ஆண்களின் படுக்கையறைக்கு சரியாக இருக்கும் என்று அறியப்பட்ட ஒரு சில நிறங்களில் முதன்மையாக இருப்பது ஸ்கை புளு எனப்படும் இளநீல வண்ணம் ஆகும்.

அறைகளில் இருக்கும் எல்லாவித பொருட்களோடும் பொருந்தக்கூடிய நிறங்களில் இது முதலிடத்தில் உள்ளது. மன அமைதி, மன நிறைவு ஆகியவைகளை இளம் பச்சை நிறம் தூண்டுவதாக இருக்கிறது. வயது முதிர்ந்தவர்கள் மற்றும் இளைய வயதினர் படுக்கையறைகளில் இந்த வண்ணத்தை அதிகமாக பயன்படுத்தலாம். பர்னிச்சர்களும் இளம் பச்சை நிறத்தில் இருக்கும் பட்சத்தில் அறை முழுவதும் குளிர்ச்சியான தோற்றத்துடன் இருக்கும். மனதின் அழுத்தத்தை குறைப்பதில் கத்திரிப்பூ மற்றும் அதன் சாயல் கொண்ட நிறங்கள் குறிப்பிட்ட பங்கு வகிக்கின்றன. முக்கியமாக தரை விரிப்புகளில் இதன் சாயல் கொண்ட நிறம் இருப்பது சிறப்பாக இருக்கும்.
முக்கியமாக இரவில் ஒளிரும் மின்சார விளங்குகள் கத்திரிப்பூ கலந்த நீல வண்ணத்தில் இருக்கலாம். பெண்களுக்கான படுக்கையறைகளுக்கு உகந்ததாக இவ்வண்ணம் அடையாளம் காணப்பட்டுள்ளது.






