என் மலர்

  நீங்கள் தேடியது "B. Valarmathi"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜெயலலிதா வழியில் தொடர்ந்து சட்ட போராட்டங்களை நடத்தி காவிரி பிரச்சினையில் அரசு வெற்றி கண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கூறியுள்ளார்.
  சென்னை:

  காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விளக்க பொதுக்கூட்டம் ஆயிரம்விளக்கு பகுதி அ.தி.மு.க. சார்பில் நடந்தது. பகுதி செயலாளர் நுங்கை மாறன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அரசு பாடநூல் கழக தலைவருமான பா.வளர்மதி பேசியதாவது:-

  காவிரி பிரச்சினையில் பல சட்ட போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டவர் ஜெயலலிதா. டெல்டா மாவட்ட விவசாயிகள் ஒன்று சேர்ந்து ‘பொன்னியின் செல்வி’ என்ற பட்டத்தையும் வழங்கினார்கள். இது வரலாறு.

  அன்று அம்மா தொடங்கிய சட்டப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெற்றி கண்டுள்ளார்.

  காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம் தமிழக விவசாயிகளின் நீண்டநாள் பிரச்சினைக்கு அ.தி.மு.க. வெற்றி கண்டுள்ளது.

  இப்போதும் கர்நாடக அரசு மத்திய அரசையும், சுப்ரீம் கோர்ட்டையும் மதிக்கவில்லை. சட்டப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருவதால் இறுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெல்வார். தமிழகத்துக்கு உரிமைப்பட்ட காவிரி நீர் வரும். தஞ்சை வளநாடு செழிக்கும்.

  இவ்வாறு அவர் பேசினார்.
  ×