search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Axar patel"

    • உலகக்கோப்பை போட்டியில் அக்‌ஷர் படேலால் தாக்கத்தை ஏற்படுத்த இயலும்.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் அக்‌ஷர் படேல் 8 விக்கெட் கைப்பற்றி (3 ஆட்டம்) தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் முன்னாள் கேப்டனான அஜய் ஜடேஜா கூறியதாவது:-

    ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக ஆஸ்திரேலியா தொடரில் ஆடவில்லை. அவரது இடத்தில் அக்‌ஷர் படேலுக்கு வாய்ப்பு கிடைத்தது. அவரும் அதை மிகவும் சரியாக பயன்படுத்தி கொண்டார்.

    ஜடேஜாவின் ஆல் ரவுண்டர் வரிசைக்கு மாற்றாக அக்‌ஷர் படேல் இருக்கிறார். அவரை போன்று அக்‌ஷர் படேல் பேட்டிங் செய்கிறார். பந்து வீசுகிறார். பீல்டிங் மட்டும் இன்னும் பொருத்தமாக அமையவில்லை. உலகக்கோப்பை போட்டியில் அக்‌ஷர் படேலால் தாக்கத்தை ஏற்படுத்த இயலும். அணிக்கு மீண்டும் திரும்பும் போது ரவீந்திர ஜடேஜா நல்ல நிலையில் இருப்பார்.

    அஜய் ஜடேஜா

    அஜய் ஜடேஜா

    இவ்வாறு அஜய் ஜடேஜா கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் அக்‌ஷர் படேல் 8 விக்கெட் கைப்பற்றி (3 ஆட்டம்) தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆசிய கோப்பையில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா காயம் காரணமாக விலகினார்.
    • அவருக்கு பதிலாக அக்சர் படேல் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

    துபாய்:

    இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்பட 6 நாடுகள் கலந்துகொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் மோதுகின்றன.

    இந்திய அணி தான் ஆடிய 2 போட்டிகளில் வென்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    இந்நிலையில், இந்திய அணியின் ஆல் ரவுண்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கோப்பையில் இருந்து விலகியுள்ளார்.

    ஜடேஜாவுக்கு பதிலாக அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார் என பி.சி.சி.ஐ. அறிக்கை வெளியிட்டுள்ளது.

    • 10 வது ஓவருக்கு பின்னர் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் நன்றாக பந்து வீசவில்லை.
    • பேட்டிங் செய்யும் போது, 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம்.

    கட்டாக்:

    இந்தியாவிற்கு எதிரான 2வது 20 ஓவர் போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அந்த அணி முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் சரியாக செயல்படவில்லை என்று கேப்டன் ரிஷப் பண்ட் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    நேற்றைய போட்டியில் 4 ஓவர்கள் வீசிய சாஹல் 49 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் மட்டும் கைப்பற்றினார். மற்றொரு சூழற்பந்து வீச்சாளர் அக்சர் ஒரே ஒரு ஓவர் வீசி 19 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஹர்திக் பாண்ட்யா வீசிய 3 ஓவர்களில் 31 ரன்கள் அடிக்கப்பட்டன.

    இது குறித்து போட்டி நிறைவுக்கு பிறகு பேசிய கேப்டன் ரிஷப் பண்ட், பந்து வீச்சாளர்கள் மிகவும் நன்றாகத் தொடங்கினர், ஆனால் 10 ஓவர்களுக்குப் பிறகு, நன்றாகப் பந்து வீசவில்லை, அங்குதான் ஆட்டம் மாறியது என்றார்.

    சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம் என்றும், இனி வரும் போட்டிகளில் இது போன்ற விசயங்களை சரி செய்வோம் என்றும் அவர் கூறினார்.

    பேட்டிங் செய்யும் போது 10 முதல் 15 ரன்கள் வரை நாங்கள் குறைவாக அடித்து விட்டதாகவே நான் கருதுகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த இளம் விக்கெட் கீப்பரான நிக்கோலஸ் பூரனை 4.2 கோடி ரூபாய் கொடுத்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வாங்கியுள்ளது. #IPL2019 #IPLAuction2019
    ஐபிஎல் வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான அக்சார் பட்டேலை  ஏலம் எடுக்க கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் ஆர்வம் காட்டின. இதனால் இவரது மதிப்பு கோடியை தாண்டிச் சென்றது.

    இறுதியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 5 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவை சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2.20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் விக்கெட் கீப்பரான நிக்கோலஸ் பூரனை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது. இறுதியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 4.20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

    இந்திய டெஸ்ட் அணி விக்கெட் கீப்பரான விருத்திமான் சகாவை சன்ரைசர்ஸ் ஐதராபாத் 1.20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
    இந்திய அணியில் இடம்பிடித்துள்ள அக்சார் பட்டேல், ஷர்துல் தாகூருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் ஜடேஜா, சித்தார்த் கவுல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். #AsiaCup2018
    இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் பங்கேற்று விளையாடும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இந்தியா நேற்று பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சூப்பர் 4 பிரிவில் வங்காள தேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை இந்தியா எதிர்கொள்கிறது. இதில் சிறப்பாக செயல்பட்டால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

    இந்திய அணியில் ஷர்துல் தாகூர், அக்சார் பட்டேல் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். தற்போது ஷர்துல் தாகூருக்கு இடுப்பு பகுதியிலும், அக்சார் பட்டேலுக்கு கை பெருவிரலிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இதனால் இருவருக்கும் பதிலாக சித்தார்த் கவுல் மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரும் உடனடியாக துபாய் சென்று அணியில் இணைய இருக்கிறார்கள்.

    ஏற்கனவே ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக தீபக் சாஹர் அணியில் சேர்க்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×