search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Awarness"

    • அய்யனார்ஊத்து கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் குழந்தை பாதுகாப்பு, நலன் தொடர்பான போட்டிகள் நடைபெற்றது

    கயத்தாறு:

    கயத்தாறு தாலுகாவை சேர்ந்த அய்யனார்ஊத்து கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு, போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆசிரியர் பைசல் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் இளங்கோ தலைமை தாங்கினார். கோவில்பட்டி சாய்லீங்க அறக்கட்டளையின் தலைவர் உமையலிங்கம், பள்ளி மாணவ- மாணவிகளுக்கு குழந்தை பராமரிப்பு மற்றும் குழந்தை திருமணம்,போதை பொருள் ஒழிப்பு, அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்க உரையாற்றினார்.

    தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் நல ஆலோசகர் சுரேத்துவாணி வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் குழந்தை பாதுகாப்பு, நலன் தொடர்பான போட்டிகள் நடைபெற்றது. இதில் 250 மாணவ- மாணவியர் பங்கேற்றனர்.

    அறக்கட்டளையின் சார்பில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுமார் 350 பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    பள்ளியின் உதவி தலைமைஆசிரியர் ராமலட்சுமி நன்றி கூறினார்.

    • தூத்துக்குடி மாவட்ட மனநல திட்டம், ஆக்டிவ் மைண்ட்ஸ் மனநல காப்பகம் சார்பில் உலக மனநல தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • மாணவர்கள் கலந்து கொண்டு, மனநலம் காப்போம், மனநலம் பேணுவோம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்ட மனநல திட்டம், ஆக்டிவ் மைண்ட்ஸ் மனநல காப்பகம் சார்பில் உலக மனநல தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் இருந்து புறப்பட்ட இப்பேரணிக்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கமலவாசன் தலைமை தாங்கினார்.

    உறைவிட மருத்துவ அதிகாரி டாக்டர் பூவேஸ்வரி, நகராட்சி ஆணையர் ராஜாராம், சுகாதார அலுவலர் நாராயணன், ஆக்டிவ் மைண்ட்ஸ் நிறுவனத் தலைவர் தேன்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட மனநல மருத்துவர் நிரஞ்சனா, மனநலம் ஏற்படுவதற்கான காரணங்கள், அதன் அறிகுறிகள் மற்றும் அதனை தவிர்ப்பதற்கு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கிப் பேசினார். பேரணியை நகர்மன்றத் தலைவர் கருணாநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி புதுரோடு, ரயில் நிலையம் வழியாக மீண்டும் மருத்துவமனை வளாகத்திற்கு வந்து நிறைவடைந்தது.

    பேரணியில் எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி மாணவர்- மாணவிகள் கலந்து கொண்டு, மனநலம் காப்போம், மனநலம் பேணுவோம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர். பின்னர் மருத்துவமனையில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

    இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் சண்முகவேல், சுரேஷ், கனகராஜ், கல்லூரி உதவி பேராசிரியர்கள் ஜெயா, வெற்றிச்செல்வி, ஆக்டிவ் மைண்ட்ஸ் மனநல காப்பக மேற்பார்வையாளர்கள் மாடசாமி, ராம்கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
    • பல்லடம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி சித்ரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    பல்லடம் :

    பல்லடம் வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் பல்லடம் போக்குவரத்துக் காவல் துறை சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இந்த வாகன பேரணியை பல்லடம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி சித்ரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    இருசக்கர வாகன பேரணி பல்லடம் நீதிமன்றத்தின் முன்பு துவங்கி கடைவீதி, கோவை- திருச்சி மெயின் ரோடு உள்ளிட்ட முக்கிய ரோடுகளின் வழியாக நடைபெற்றது. இந்த வாகன பேரணியின் போது ரோட்டில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளிடம் நீதிபதி சித்ரா, துண்டு பிரசுரங்களை வழங்கி ஹெல்மெட்டின் முக்கியத்துவம் குறித்து விளக்கி கூறினார்.இதில் நீதிமன்ற ஊழியர்கள்,வழக்கறிஞர்கள்,போக்குவரத்து போலீசார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தாய்ப்பால் தானம் குறித்து அரசு ஆஸ்பத்திரி நிா்வாகம் சாா்பில் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
    • இந்த ஆண்டில் ஆகஸ்டு மாதம் வரை 2,355 போ் தாய்ப்பால் தானம் வழங்கி உள்ளனா்.

    கோவை,

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2015-ம் ஆண்டு தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டது. இங்கு பிரசவித்த பெண்கள் தானமாக அளிக்கும் தாய்ப்பால் பாதுகாக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பச்சிளம் குழந்தைகள் பிரிவில் உள்ள குழந்தைகளுக்கும், ஆதரவற்ற நிலையில் சிகிச்சைக்கு அனுமதி க்கப்படும் பச்சிளம் குழந்தைகளுக்கும் அளிக்கப்படுகிறது.

    தாய்ப்பால் தானம் குறித்து அரசு ஆஸ்பத்திரி நிா்வாகம் சாா்பில் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பயனாக ஆண்டுதோறும் தாய்ப்பால் தானம் அளிப்பவா்களின் எண்ணிக்கையும், பயனடைபவா்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயா்ந்து வருகிறது.

    இந்நிலையில் இந்த ஆண்டில் ஆகஸ்டு மாதம் வரை 2,355 போ் தாய்ப்பால் தானம் வழங்கி உள்ளனா். இதன் மூலம் 5,511 குழந்தைகள் பயனடைந்துள்ளனா். இந்த தாய்ப்பால் வங்கி மூலம் பல குழந்தைகளுக்கு ஊட்டச்ச த்தான, ஆரோக்கியமான தாய்ப்பால் கிடைத்து வருவதாக ஆஸ்பத்திரி நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

    இது குறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் நிா்மலா கூறியதாவது:- கோவை அரசு ஆஸ்பத்திரியில் செயல்பட்டு வரும் தாய்ப்பால் வங்கி மூலம் நாள்தோறும் தாய்ப்பால் தானம் பெறப்பட்டு வருகிறது. இந்த தாய்ப்பால் வங்கியில் பாதுகாப்பான முறையில் தாய்ப்பா ல் பராமரிக்க ப்பட்டு தேவைப்படும் குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது.

    ஆதரவற்ற நிலையி ல் சிகிச்சைக்கு அனுமதி க்கப்படும் பச்சிளம் குழந்தைகள், குறைப் பிரசவத்தில், குறைந்த எடையில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகள், பாலூட்ட முடியாத தாய்மாா்களின் குழந்தைகள் ஆகியோருக்கு தாய்ப்பால் அளிக்கப்படுகிறது.

    மேலும், தனியாா் ஆஸ்பத்திரிகளில் பிரசவமாகி தாய்ப்பால் பற்றாக்குறை காணப்படும் குழந்தைகளுக்கும் இங்கிருந்து தாய்ப்பால் அளிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

    • தேர்தல் ஆணையம் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்க உத்தரவிட்டுள்ளது .
    • பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    தேர்தல் ஆணையம் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்க உத்தரவிட்டுள்ளது . இதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சியில் கொசு மருந்து அடிக்கும் வாகனத்தில் ஒலிபெருக்கி அமைக்கப்பட்டு விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது. மாநகராட்சியினரின் இந்த விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் பெற்றுள்ளது.  

    • கலெக்டர் வினீத், மருத்துவக் கல்லூரி மற்றும்பொதுமக்கள்,பள்ளி, கல்லூரிகளில் பிரச்சார நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.
    • விழிப்புணர்வு பிரச்சாரம் திருப்பூர் மாநகர தலைமை இயக்கம் சார்பில் நடைபெற்றது.

    திருப்பூர் :

    நடிகர் விஜய் உத்தரவின்படி விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்து வழிகாட்டுதலின்படி ரத்ததான விழிப்புணர்வு பிரச்சாரம் திருப்பூர் மாநகர தலைமை இயக்கம் சார்பில் நடைபெற்றது. இதையொட்டி மாவட்ட கலெக்டர் வினீத், மருத்துவக் கல்லூரி மற்றும்பொதுமக்கள்,பள்ளி, கல்லூரிகளில் பிரச்சார நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.

    இதில் மாநகர தலைவர் குத்புதீன், மாநகரச் செயலாளர் சின்னதுரை ,மாநகர துணைத்தலைவர் அலாவுதீன் ,மாநகர ஆலோசகர் பஷீர், மாநகர துணைச்செயலாளர் ரவி ,மாநகர பொருளாளர் ஜெயபிரகாஷ் மற்றும் மாநகர நிர்வாகிகள் கனகராஜ் ,தனபால், அக்பர் மற்றும் பல்லடம் நகர செயலாளர் சதீஷ் கலந்து கொண்டனர் .

    • கோவில்பட்டி நாடார் மேல்நிலை பள்ளியில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மன நல சமூக பணியாளர் பெரியசாமி மாணவ, மாணவிகளுக்கு மன அழுத்தத்தை போக்கும் விதமாக செயல்முறை விளக்கம் அளித்தார்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்ட மன நல திட்டத்தின் படி கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் கமலவாசன், மருத்துவர் பூவேஸ்வரி அவர்களின் ஆலோசனையின் பேரில் கோவில்பட்டி நாடார் மேல்நிலை பள்ளியில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் வரவேற்று பேசினார். ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவன தலைவர் தேன்ராஜா முன்னிலை வகித்தார்.

    மன நல சமூக பணியாளர் பெரியசாமி மாணவ, மாணவிகளுக்கு மன அழுத்தத்தை போக்கும் விதமாக செயல்முறை விளக்கம் அளித்தார். மாவட்ட மன நல திட்ட மருத்துவர் நிரஞ்சனா தேவி அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு தற்கொலை எண்ணம் வராத அளவிற்கு அறிவு பூர்வமான விளக்கங்கள் மற்றும் மன அழுத்தத்தை கையாளும் முறை பற்றி மாணவ, மாணவிகளுடன் கலந்து உரையாடினார்.

    நிகழ்ச்சியின் நிறைவாக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்து கொண்டனர். நிகழ்வில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், மன நல காப்பக மேற்பார்வையாளர்கள் மாடசாமி, ராம் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • திசையன்விளை அருகே உள்ள நவ்வலடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது
    • விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு மஞ்சப் பைகள் வழங்கப்பட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள நவ்வலடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கினார்.

    மாவட்ட தூய்மை பாரத திட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தன், ராதாபுரம் வட்டார கிராமபுற வளர்ச்சி அலுவலர் பிச்சையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நவ்வலடி பஞ்சாயத்து தலைவர் ராதிகா சரவணக்குமார் வரவேற்று பேசினார். மாவட்ட திட்ட இயக்குனர் பழனி மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து வழங்குவதற்கான தலா 2 குப்பை தொட்டிகளை 300பேருக்கு வழங்கினார்.

    விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு மஞ்சப் பைகள் வழங்கப்பட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. விழாவில் பஞ்சாயத்து துணைத்தலைவர் தங்கம், உறுப்பினர்கள் வரத குணபாண்டியன், கவிதா, கிருஷ்ணவதி, ஜெயபால், பாலசரஸ்வதி, ஜெயராஜ், சமுக சேவகர் சரவணகுமார் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழகஅரசின்சமூக பாதுகாப்புத்துறையின் மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகு சார்பில் உடன்குடி வட்டார அளவிலான குழந்தைகள்பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் ஊராட்சி ஓன்றிய அரங்கில் நடந்தது.
    • இலவச தொலைபேசி எண் 1098, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளித்தல், பெண் குழந்தைகளை பெற்றோர்கள் அதிககவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர் செல்வி பிளாரன்ஸ் பேசினார்.

    உடன்குடி:

    தமிழகஅரசின்சமூக பாதுகாப்புத்துறையின் மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகு சார்பில் உடன்குடி வட்டார அளவிலான குழந்தைகள்பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் ஊராட்சி ஓன்றிய அரங்கில் நடந்தது.

    உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் பாலசிங் தலைமை தாங்கினார். குழுந்தைகள் பாதுகாப்பில் தமிழக அரசுஎடுத்து வரும் சீரிய நடவடிக்கைகள், அமல்படுத்தியுள்ள சட்டங்கள்குறித்து பேசி விழிப்புணர்வு எண்கள் கொண்ட பலகையைத் திறந்து வைத்தார்.

    குழந்தைகள் பாதுகாப்பில் சமூக நலத்துறை, மருத்துவம், பள்ளிகள், ஊராட்சி களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், எடைசத்துகுறைபாடு உடையவர்களை கண்டறிதல், இலவச தொலைபேசி எண் 1098, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குமறுவாழ்வுஅளித்தல், பெண் குழந்தைகளை பெற்றோர்கள் அதிககவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர் செல்வி பிளாரன்ஸ் பேசினார்.

    நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார், தொழிலாளர் உதவி ஆய்வாளர் ஜோதிலட்சுமி, குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் மலர்கொடி சுகிர்தா, ஜேம்ஸ், சமூக நலத்துறை அலுவலர்கள் ஞானேஸ்வரி, கிறிஸ்டி விஜயராணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சைல்டு லைன் உறுப்பினர் தங்கமது, கிறிஸ்தியாநகரம் நவஜீவன் விடுதி பொறுப்பாளர் ஜேசுதாசன், சிறுநாடார்குடியிருப்பு ஊராட்சி மன்றத் தலைவி கமலம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வாவாஜி பக்கீர் முகைதீன் வரவேற்றார்.

    • தென்காசி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலமாக ‘நம்ம ஊரு சூப்பரு’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • இத்திட்டத்தினை செயல்படுத்த அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மட்டுமல்லாது பொதுமக்களும் தங்களது பங்களிப்பினை முழுமையாக அளிக்க வேண்டும்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலமாக 'நம்ம ஊரு சூப்பரு' என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கலெக்டர் அறிவுரை

    இத்திட்டத்தினை செயல்படுத்த அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மட்டுமல்லாது பொதுமக்களும் தங்களது பங்களிப்பினை முழுமையாக அளிக்க வேண்டும். இதன் மூலம் நமது மாவட்டத்தை தூய்மையான மாவட்டமாக மாற்றலாம். தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் முன்னோடி மாவட்டமாக நமது மாவட்டம் திகழவேண்டும். மேலும், கடைகளிலுள்ள குப்பைகளை தெரு ஓரங்களில் மற்றும் திறந்தவெளியில் கொட்டாமல், அதற்கென அமைக்கப்பட்ட குப்பைத் தொட்டிகளில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியே பிரித்தெடுத்து போட வேண்டுமெனவும், காந்தி ஜெயந்தி விழாவினை முன்னிட்டு சுற்றுச்சூழலை மேம்படுத்த அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தங்களது முழு பங்களிப்பினை அளிக்க வேண்டும் என தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.

    பேரணி

    இதனைத் தொடர்ந்து வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் நெல்கட்டும்செவல் மற்றும் தலைவன்கோட்டை ஊராட்சிகளில் 'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தின் கீழ் தூய்மைப்படுத்தும் பணிகள் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. யூனியன் சேர்மனும், வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கி நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் தூய்மைப்படுத்தும் பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் நெல்கட்டும்செவல் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியராஜா, துணைத்தலைவர் முத்து ப்பாண்டி, தலைவன்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சர்மிளா, துணைத்தலைவர் குபேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜெயராமன், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பி. ஐ. எஸ் நடத்தும் ஒரு நாள் பயிற்சி முகாம் ஐலேண்ட் அறக்கட்டளைஅரங்கில் நடைபெற்றது.
    • பயிற்சி முகாமை கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தார்.

    அரவேணு:

    இந்திய தர அமைவிடம் கோவை மற்றும் ப்ளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் பி. ஐ. எஸ் நடத்தும் ஒரு நாள் பயிற்சி முகாம் ஐலேண்ட் அறக்கட்டளைஅரங்கில் நடைபெற்றது.

    பயிற்சி முகாமை கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தார். தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார்.

    செயலாளர் ராஜன் வரவேற்றார். நுகர்வோர் நேற்று இன்று நாளை என்ற தலைப்பில் சிட்டிசன் வாய்ஸ் ஜெயராமன் உரை நிகழ்த்தினார். பி. ஐ. எஸ்-ன்பொதுவான பணிகள் குறித்து ராஜிவ் பயிற்சி வழங்கினார்.

    இதில் உணவு பாதுகாப்பு அதிகாரி சிவராஜ், கோத்தகிரி அணைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் லியாகத்அலி, பொருளாளர் மகாராஜா சந்திரன், சுதாகேஸ் ரமேஷ், அமைப்பின் சார்பில் பொருளாளர் மரியம்மா, துணை தலைவர்கள் செல்வராஜ், ஜெயந்தி, இணை செயலாளர்கள் ஜம்புலிங்கம்,கண்மணி, முகமதுஇஸ்மாயில், கிரேஸி, வினோபா போப், விபின் குமார், ஷாஜகான், லெனின் மார்க்ஸ், ஜார்ஜ் பால், மற்றும் திரைசா,லலிதா,விக்டோரியா, ராதிகா,யசோதா, சங்கீதா, மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் . முடிவில் கூடுதல் செயலாளர் முகமது சலீம் நன்றி கூறினார்

    • உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் வருகையை அதிகரிக்கும் வகையில் செங்கோட்டை வட்டாரம் சீவநல்லூர் வயல்வெளி பகுதியில் விவசாயிகளுக்கான உழவர்சந்தை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • தென்காசி உழவர்சந்தை நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில் தென்காசி உழவர்சந்தை உதவி நிர்வாக அலுவலர் கணேசன் முன்னிலையில் இம்முகாம் நடைபெற்றது.

    தென்காசி:

    உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் வருகையை அதிகரிக்கும் வகையில் செங்கோட்டை வட்டாரம் சீவநல்லூர் வயல்வெளி பகுதியில் விவசாயிகளுக்கான உழவர்சந்தை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் வேளாண் வணிகம் கிருஷ்ணகுமார் அறிவுரைப்படி தென்காசி உழவர்சந்தை நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில் தென்காசி உழவர்சந்தை உதவி நிர்வாக அலுவலர் கணேசன் முன்னிலையில் இம்முகாம் நடைபெற்றது.

    செங்கோட்டை வேளாண்மை வணிக உதவி வேளாண்மை அலுவலர் இப்ராஹிம் வரவேற்றார். இந்த முகாமில் உழவர் சந்தையின் பயன்கள் செயல்பாடுகள் பற்றியும், அடையாள அட்டை பெறும் வழிமுறைகள் பற்றியும், விவசாயிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்தல் பற்றியும் உழவர்சந்தை நிர்வாக அலுவலர் விளக்கி கூறினார்.

    மேலும் உழவர்சந்தை விவசாயிகளுக்கு காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் முறை பற்றி விளக்கி கூறப்பட்டது. தென்காசி உழவர்சந்தை உதவி நிர்வாக அலுவலர் கணேசன் நன்றி கூறினார்.


    ×