search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Avani Moola Thiruvizha"

    • ஆவணி மூலத்திருவிழாவையொட்டி கோவில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கரூர் சித்தருக்கு சுவாமி நெல்லையப்பர் மானூர் அம்பலத்தில் வைத்து காட்சி கொடுக்கும் வைபவம் வருகிற 5-ந் தேதி நடைபெறுகிறது.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் கோவில் ஆவணி மூலத் திருவிழா இன்று தொடங்கியது.

    இதையொட்டி கோவில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கொடிப்பட்டம் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கொடிப்பட்டதிற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    பின்னர் சுவாமி சன்னதி உட்பிரகாரத் தில் அமைந்துள்ள கொடி மரத்தில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

    பின்னர் கொடி மரத்திற்கு 16 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் மகாதீபாரதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கரூர் சித்தருக்கு சுவாமி நெல்லையப்பர் மானூர் அம்பலத்தில் வைத்து காட்சி கொடுக்கும் வைபவம் வருகிற 5-ந் தேதி நடைபெறுகிறது.

    • நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் மூல நட்சத்திர நாள் அன்று ஆவணி மூலத் திருவிழா நடைபெற்று வருகிறது.
    • 4-ம் திருநாளில் சுவாமி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சுப்பிரமணியர் மயில் வாகனத்திலும் பஞ்ச மூர்த்திகளுடன் நான்கு ரத வீதிகளிலும் வீதி உலா நடைபெற உள்ளது.

    நெல்லை:

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் மூல நட்சத்திர நாள் அன்று ஆவணி மூலத் திருவிழா நடைபெற்று வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 5-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதனை–யாட்டி நாளை காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் சுவாமி நெல்லையப்பர் கோவிலில் கொடியேற்றம் தொடங்குகிறது.

    விழாவானது 11 நாட்கள் நடைபெற உள்ளது. 4-ம் திருநாளான 29-ந்தேதி இரவு 8 மணிக்கு சுவாமி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சுப்பிரமணியர் மயில் வாகனத்திலும் பஞ்ச மூர்த்திகளுடன் நான்கு ரத வீதிகளிலும் வீதி உலா நடைபெற உள்ளது.

    மேலும் வருகிற 3-ந்தேதி கரூர் சித்தர் மானூரில் எழுந்தருள தொடர்ந்து நான்கு ரத வீதிகளிலும் வீதி உலா வருகிறார்.

    பின்பு சங்கரன் கோவில் சாலை வழியாக மானூர் அம்பலவான சுவாமி கோவிலை அடைதல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    ×