search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Attur temples"

    • இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு யாகசாலை நடந்த பகுதிகளை இன்று காலை பார்வையிட்டார்.
    • ஆத்தூர் அருகே உள்ள சேர்ந்த பூ மங்கலத்தில் புகழ்பெற்ற நவக்கிரக ஆலயங்களில் ஒன்றான கைலாசநாதர் ஆலயத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் பிரசித்தி பெற்ற சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 24 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கோலாகலமாக நடந்தது.

    சோமநாத சுவாமி விமானம், சோமசுந்தரி அம்பாள் விமானம், அனந்த பத்மநாப சுவாமி விமானங்களுக்கு கும்பாபிஷேகம் ஒரே நேரத்தில் நடந்தது. மாலை சுவாமிகள் சப்பர ஊர்வலம் நான்கு ரத வீதி வழியாக நடந்தது.

    இந்நிலையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு யாகசாலை நடந்த பகுதிகளை இன்று காலை பார்வையிட்டார். தொடர்ந்து கோவிலை பார்வையிட்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் கோவில் தெப்பக்குளத்தை சுற்றி மரம் நடவேண்டும், கோவில் பராமரிப்பிற்கான நிதி ஆதாரத்தை பெருக்க வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து அவர் ஆத்தூர் அருகே உள்ள சேர்ந்த பூ மங்கலத்தில் புகழ்பெற்ற நவக்கிரக ஆலயங்களில் ஒன்றான கைலாசநாதர் ஆலயத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    நிகழ்ச்சியின் போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தி.மு.க. மாணவரணி செயலாளர் உமரி சங்கர், ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், ஆத்தூர் பேரூராட்சிமன்றத் தலைவர் கமால்தீன், புன்னைக்காயல் ஊராட்சி மன்ற தலைவர் சோபியா, ஆத்தூர் பேரூர் செயலாளர் முருகானந்தம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர் அன்புமணி, திருச்செந்தூர் சரக ஆய்வாளர் செந்தில்நாயகி, ஆத்தூர் சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி தேவஸ்தான செயல் அலுவலர் ஜெயந்தி, ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், ஆத்தூர் பேரூராட்சிமன்ற செயல் அலுவலர் முருகன், பிரம்மசக்தி உமரி சங்கர், கவுன்சிலர் ராம்குமார், பேரூராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

    ×