என் மலர்

  நீங்கள் தேடியது "Asuran"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக இருக்கும் ‘அசுரன்’ படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் இசையமைக்க இருக்கிறார். #Asuran #Dhanush
  தனுஷ் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘மாரி 2’. இதில் சாய் பல்லவி தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

  இந்த நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் முதல் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. `அசுரன்' என்று தலைப்பு வைத்துள்ள இந்த புதிய படத்தை வி கிரிகேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருக்கிறார்.

  தற்போது இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்குமுன் தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த கூட்டணி இணைய இருப்பதால், படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு இப்பவே அதிகரிக்க ஆரம்பமாகிவிட்டது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்திற்கு `அசுரன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. #Asuran #Dhanush
  பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் - சாய் பல்லவி நடிப்பில் மாரி 2 படம் நேற்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. 

  இந்த நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் முதல் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. அதன்படி படத்திற்கு `அசுரன்' என்று தலைப்பு வைத்துள்ளனர். வி கிரிகேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


  இதுதவிர ராம்குமார், மாரி செல்வராஜ், துரை செந்தில்குமார் இயக்கத்தில் தலா ஒரு படங்களில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். அத்துடன் வடசென்னை இரண்டாவது பாகத்திலும் நடிக்க இருக்கிறார். மேலும் தனுஷ் ஒரு படத்தை இயக்கி, நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #Asuran #Dhanush

  ×