search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "association"

    • அரியலூர் மாவட்ட நீதித்துறை ஊழியர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது
    • அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம் பகுதிகளில் பணிபுரியும் கோர்ட் ஊழியர்கள் ஒருங்கிணைந்த சங்கம்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட நீதித்துறை ஊழியர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம் பகுதிகளில் பணிபுரியும் கோர்ட் ஊழியர்கள் ஒருங்கிணைந்த அரியலூர் மாவட்ட நீதித்துறை ஊழியர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தலைமை குற்றவியல் நீதிமன்ற இரண்டாம் நிலை எழுத்தர் பொன்.சண்முகம் மாவட்ட தலைவராகவும், குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் 1 அலுவலக உதவியாளர் பாஸ்கர் மாவட்ட செயலாளராகவும், முதன்மை சார்பு நீதிமன்ற இரண்டாம் நிலை எழுத்தர் நல்லதம்பி மாவட்ட பொருளாளராகவும், குடும்ப நல நீதிமன்றம் முதல் நிலை எழுத்தர் உதயகுமார், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற அலுவலக உதவியாளர் வேல்முருகன், மகிளா கோர்ட் அலுவலக உதவியாளர் சுப்பிரமணியன், ஆகியோர்கள் மாவட்டத் துணைத் தலைவராகவும், மகிளா விரைவு நீதிமன்ற முதல் நிலை சுருக்கெழுத்து தட்டச்சர் தினேஷ், முதன்மை மாவட்ட நீதிமன்ற உதவியாளர் மதன்குமார், சார்பு நீதிமன்ற நகல் பரிசோதகர் பாஸ்கரன் ஆகியோர்கள் மாவட்ட துணைச் செயலாளராகவும், முதன்மை மாவட்ட நீதிமன்ற முதுநிலை கட்டளை பணியாளர் வடிவேல், ஜெயங்கொண்டம் சார்பு நீதிமன்ற இளநிலை கட்டளை பணியாளர் பாரத், ஆகியோர்கள் மாநில செயற்குழு உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    • பல்லடம் நகரில் சுமாா் 50 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனா்.
    • இக்கட்டான சூழ்நிலைகளில் பல்லடத்திலிருந்து திருப்பூா், கொடுவாய், சூலூா் போன்ற இடங்களுக்கு சுமாா் 20 கி.மீ.க்கு மேல் செல்ல வேண்டி உள்ளது.

    பல்லடம்:

    பல்லடத்தில் எரிவாயு மயானம் அமைக்க பல்லடம் தாலுகா வியாபாரிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சங்கத் தலைவா் ஆனந்தா செல்வராஜ், செயலாளா் விமல் பழனிசாமி, பொருளாளா் காணியப்பா பரமசிவம், துணைத் தலைவா் பானு பழனிசாமி, துணைச் செயலாளா் தங்கலட்சுமி நடராஜன், ஒருங்கிணைப்பாளா் விஜயகுமாா் ஆகியோா் பல்லடம் நகா்மன்றத் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பல்லடம் நகரில் சுமாா் 50 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனா். மேலும், பல்லடம் நகரம் பல முக்கிய நகரங்களுக்கு செல்லும் சாலைகளின் சந்திப்பாக உள்ளது. தமிழக அரசின் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் பல்லடம் நகரில், நகராட்சி மூலம் எரிவாயு மயானம் அமைக்க உள்ளதாக அறிகின்றோம். இக்கட்டான சூழ்நிலைகளில் பல்லடத்திலிருந்து திருப்பூா், கொடுவாய், சூலூா் போன்ற இடங்களுக்கு சுமாா் 20 கி.மீ.க்கு மேல் செல்ல வேண்டி உள்ளது.

    இந்த எரிவாயு மயானம் அமைந்தால் பல்லடம் நகர மக்கள் பெரிதும் பயனடைவாா்கள். இதனால் மக்களுக்கும் சுற்றுப்புற சூழலுக்கும் எந்தவிதமான தீங்கும் ஏற்படாது என அறிகின்றோம். இந்த எரிவாயு மயானத்தால் மக்களுக்கு பொருள் செலவும், காலச்செலவும் மிச்சமாகும். எனவே பல்லடம் நகரில் பொதுமக்களின் ஆதரவு, நகா்மன்றத் தலைவா் மற்றும் அதிகாரிகளின் அனுமதியுடன் அமையும் எரிவாயு மயானம் அமைக்கும் திட்டத்திற்கு எங்களின் ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம் என கூறியுள்ளனர்.

    • தென்காசி மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கம் உதயமானது.
    • தலைவராக அய்யனார், செயலாளராக அய்யப்பன், பொருளாளராக முப்பிடாதி, மாவட்ட அமைப்பு செயலாளராக சுப்புராஜ், துணைத்தலைவர், துணை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.


    தென்காசி:


    ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்தியசங்கம் தென்காசி தனி மாவட்டமாக உருவானதை தொடர்ந்து தென்காசி மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கம் உதயமானது.


    இதன் முதல் நிர்வாக குழு கூட்டம் தென்காசியில் நடைபெற்றது. தலைவராக அய்யனார், செயலாளராக அய்யப்பன், பொருளாளராக முப்பிடாதி, மாவட்ட அமைப்பு செயலாளராக சுப்புராஜ், துணைத்தலைவர், துணை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். 208/87 பதிவு எண் கொண்ட மத்திய சங்கம் செங்ேகாட்டை, அரியப்பபுரம், கீழப்பாவூர், வீரகேரளம்புதூர், சுரண்டை, வீரசிகாமணி, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், புளியங்குடி, கடையநல்லூர் உள்ளிட்ட 10 கிளைகளுடன் செயல்படும் என்று தெரிவித்தனர்.


    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பயின்றோர் கழக ஆண்டு விழா நடந்தது. கல்லூரி முதல்வரும், பயின்றோர் கழக தலைவருமான மகேந்திரன் தலைமை தாங்கினார்.
    • ஆறுமுகநேரி பாரத ஸ்டேட் வங்கி மேலாளரும், பயின்றோர் கழக உறுப்பினருமான சுதாகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பயின்றோர் கழக ஆண்டு விழா நடந்தது. கல்லூரி முதல்வரும், பயின்றோர் கழக தலைவருமான மகேந்திரன் தலைமை தாங்கினார். பயின்றோர் கழக துணைத்தலைவர் ஜெயபோஸ் வரவேற்று பேசினார். இணை செயலாளரும், தமிழ்துறைத் தலைவருமான கதிரேசன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் பகவதிபாண்டியன் நிதிநிலை அறிக்கை வாசித்தார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார்.

    ஆறுமுகநேரி பாரத ஸ்டேட் வங்கி மேலாளரும், பயின்றோர் கழக உறுப்பினருமான சுதாகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். ஓய்வுபெற்ற பேராசிரியர் நாராயண ராஜன், அலுவலர்கள் ராஜன் ஆதித்தன், நடராஜன், தபசுமணி, முருகன் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்கள் சி.கவிதா, ஆரோக்கியமேரி பெர்னாண்டஸ், ராமஜெயலட்சுமி, ஏ.கவிதா, வாசுகி, மகேசுவரி, ராஜகுமாரி, மோதிலால் தினேஷ், லோக்கிருபாகர் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    ஆதித்தனார் கல்வி நிறுவன செயலாளர் நாராயணராஜன் ஏற்புரை வழங்கினார். பயின்றோர் கழக மூத்த உறுப் பினர்கள் மரிய சாமு வேல், கணபதி, ஆறுமுகம், அலெக் சாண்டர், ராஜேந்திரன், சங்கர நாராயணன் ஆகியோர் புதிய செயற் குழு உறுப் பினர்களாக தேர்வு செய் யப் பட்டனர். கட்டுரை, பேச்சு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப் பட்டது.

    • முள்ளக்காடு உப்பு உற்பத்தியாளர் எல்.ஆர்.பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 250 மாணவ- மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினார்.
    • விழாவில் 55 இளைஞர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முள்ளக் காட்டில் காமராஜர் மக்கள் சங்கம் தொடக்க விழா நடைபெற்றது. உப்பு உற்பத்தியாளர் எல்.ஆர்.சிவாகர் தலைமை தாங்கினார். மதசார்பற்ற ஜனதா தள மாநிலத் துணைத் தலைவர் வக்கீல் சொக்கலிங்கம், கோவில் தர்மகர்த்தாக்கள் சேகர், சின்னராஜ், காமராஜ் கல்லூரி வரலாற்றுத்துறை தலைவர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    காமராஜர் மக்கள் சங்கத் தலைவர் கோகுல், செயலாளர் லிங்க பிரதீஷ், பொருளாளர் சரவணன், ரத்ததான அணி பொறுப்பாளர்கள் விக்னேஷ்,செல்லத்துரை, ராபர்ட் ஜெயபால்,சட்ட ஆலோசகர் ஸ்ரீநாத் ஆனந்த் ஆகியோர் கூட்டாக வரவேற்றனர்.

    சிறப்பு விருந்தினராக போலீஸ் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு கலந்துகொண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நடைபெற்ற ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். இதில் 55 இளைஞர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

    தொடர்ந்து முள்ளக்காடு உப்பு உற்பத்தியாளர் எல்.ஆர்.பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 250 மாணவ- மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் முள்ளக்காடு ஊராட்சி தலைவர் கோபிநாத் நிர்மல், முகேஷ் சண்முக வேல், மகாராஜன், பொன்ராம் மற்றும் காமராஜர் மக்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • வாழப்பாடி வட்டார தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கக் கூட்டம், வாழப்பாடி அடுத்த பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.
    • போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களுக்கான சம்பளத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி வட்டார தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கக் கூட்டம், வாழப்பாடி அடுத்த பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, வாழப்பாடி வட்டத் தலைவர் விஜயராஜ் தலைமை வகித்தார்.

    வட்டக் கிளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில், கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழுதடைந்துள்ள விஏஓ அலுவலக கட்டடங்களை சீரமைக்க வேண்டும். அனைத்து விஏஓ அலுவலகங்களுக்கும் கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். 2018 ல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களுக்கான சம்பளத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • மதுரையில் தொழில்முனைவோர் சங்க உறுப்பினர்கள் கலந்துரையாடல் நடந்தது.
    • உணவுபதப்படுத்துதல் தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் சலுகைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    மதுரை

    வேளாண்மை விற்பனை மற்றும்வேளாண் வணிகத்துறை மூலம் தொழில்முனைவோருக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மதுரைமாவட்டகுறுமற்றும்சிறிய அளவிலான தொழில்முனைவோர் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நடந்தது.

    வேளாண்மை விற்பனைமற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர் நடராஜன் தலைமை தாங்கினார்.

    அவர் பேசுகையில், உணவுபதப்படுத்துதல்தொழில்முனைவோருக்குவழங்கப்படும்திட்டங்கள்மற்றும்சலுகைகள்குறித்துஎடுத்துரைத்தார்.

    வேளாண்விளைபொருட்கள்ஏற்றுமதிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும், துறையின் கட்டுப்பாட்டில்உள்ளகட்டமைப்புகளைதொழில்முனைவோர் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    மதுரை மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் உணவுப்பூங்கா, முருங்கை ஏற்றுமதிமண்டலம்குறித்தும் விளக்கினார்.

    இதில் சங்கபிரதிநிதிகள், உறுப்பினர்கள், வேளாண்மைவிற்பனைமற்றும் வேளாண்வணிகத்துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட தொழில்மைய பொது மேலாளர்ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்தில் மே 5-ந் தேதி வணிகர் சங்க மாநாட்டில் அறிவித்த 3 தீர்மானங்களை அரசாணையாக அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது.
    • கூட்டத்தில் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து அறிமுகப்படுத்தி மாநில தலைவரும், அகில இந்திய வணிகர் சம்மேளனத்தின் துணைத் தலைவருமான ஏ.எம்.விக்கிரமராஜா விழா பேருரை ஆற்றுகிறார்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தஞ்சை மாவட்ட பொதுக்குழு கூட்டம் தஞ்சை வடக்கு ஆஜாரம் காமராஜர் மார்க்கெட் அருகில் உள்ள ஆமுக நாடார் முத்தம்மாள் திருமண மண்டபத்தில் நாளை 28-ந்தேதி மாலை 5.30 மணிக்கு தஞ்சை மாவட்ட தலைவர் அபிராமி எஸ்.எஸ்.பாண்டியன் தலைமையில் நடைபெற உள்ளது.

    கூட்டத்தில்மே5 வணிகர் சங்க மாநாட்டில் அறிவித்த 3 தீர்மானங்களை அரசாணையாக அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது.

    கூட்டத்தில் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து அறிமுகப்படுத்தி மாநில தலைவரும், அகில இந்திய வணிகர் சம்மேளனத்தின் துணைத் தலைவருமான ஏ.எம்.விக்கிரமராஜா விழா பேருரை ஆற்றுகிறார்.

    கூட்டத்தில் மாநி துணைத் தலைவர் கே.பி.சுப்பு என்கிற சுப்பிரமணியன் வரவேற்று பேசுகிறார். மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு, மாநிலப் பொருளாளர் ஹாஜி சதக்கத்துல்லா, மாநில செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், தஞ்சை மண்டல தலைவர் செந்தில்நாதன் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர, தொகுதி நிர்வாகிகள் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் நன்றி கூறுகிறார். மேற்கண்ட தகவலை சிங்கப்பூர் தங்க மாளிகை நிறுவனர் இராம.சந்திரசேகரன் தெரிவித்தார்.

    • கிராம உதவியாளர் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • மாநில துணைத் தலைவர் மாரி தலைமையில் சிவகங்கையில் நடந்தது.

    சிவகங்கை

    தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்க ஆலோசனை கூட்டம் மாநில துணைத் தலைவர் மாரி தலைமையில் சிவகங்கையில் நடந்தது.

    கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளருக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும், 10 ஆண்டு பணி முடித்த கிராம உதவியாளர்களுக்கு பணி உயர்வு வழங்க வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மாநில இணைச் செயலாளர் ரமேஷ், மாவட்ட தலைவர் சுருளிபாண்டி, பொருளாளர் ஜெயபாலன், மகளிரணி செயலாளர் காளீஸ்வரி, துணைச் செயலாளர் ஜெயக்குமாரி, வட்டத் தலைவர் செல்வகுமரன், பொருளாளர் கார்த்திகேய ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • டெல்டா மாவட்ட விவசாயிகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் எதிா்பாா்க்கிறது.
    • தங்களுடைய கருத்துகளை தயக்கமின்றி அணை கட்டாத அளவில் எதிா்ப்புகளை பதிவு செய்ய வேண்டும்.

    நாமக்கல்:

    தமிழக விவசாயிகள் சங்க ( நாராயணசாமி நாயுடு) மாநிலத் தலைவா் வேலுசாமி நாமக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மேகதாதுவில் அணை கட்டுவதற்கு காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளதாக அண்மையில் திருச்சி வந்திருந்த ஆணையத்தின் தலைவா் தெரிவித்திருந்தாா். டெல்லியில் காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறும் நிலையில், இக் கூட்டத்தில் அணை கட்டுவதற்கு விவாதிக்கவோ, எவ்வித அனுமதியோ வழங்கக் கூடாது.

    மேகதாது அணை கட்டாமல் தடுப்பதற்கு உண்டான எதிா்ப்பு வாதங்களை தமிழக அரசு சாா்பில் தெரிவிக்க வேண்டும். மூத்த பொறியாளா்கள், அரசுத் துறை உயா் அதிகாரிகள், வழக்குரைஞா்கள் ஆகியோா் தங்களுடைய கருத்துகளை தயக்கமின்றி அணை கட்டாத அளவில் எதிா்ப்புகளை பதிவு செய்ய வேண்டும்.

    டெல்டா மாவட்ட விவசாயிகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் எதிா்பாா்க்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பூரில் தூய்மைப்பணி இயக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாநகர குழு உறுப்பினர் பொம்முதுரை உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் தூய்மைப்பணி இயக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளருமான முத்துக்கண்ணன் துவக்கி வைத்தார்.

    இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஞானசேகரன், மாவட்டச் செயலாளர் மணிகண்டன் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் சிஐடியு. மாவட்ட தலைவருமான கே.உன்னிகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகர குழுச் செயலாளர் ஜெயபால், மாவட்ட குழு உறுப்பினர் சுந்தரம், சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் பி. பாலன், மாநகர குழு உறுப்பினர் பொம்முதுரை உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

    3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் 3 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் கருணாநிதி, பொருளாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீட் மற்றும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வு போன்ற பயிற்சிகளுக்கு முதுநிலை ஆசிரியர்களை பயன்படுத்துவதில் இருந்து அரசு விலக்கு அளிக்க வேண்டும். தலைமை ஆசிரியர் மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கான 2-வது கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். 

    தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 9 முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்களையும் அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் கழகத்தின் பெரம்பலூர் கல்வி மாவட்ட தலைவர் காமராஜ், மகளிர் பிரிவு செயலாளர் எழிலரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் அரியலூர் மார்க்கெட் தெருவில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி அரியலூர் மாவட்ட தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கபேரியல் தலைமை தாங்கினார். செயலாளர் சரவணன், பொருளாளர் செல்லபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஜெயராமன், மல்லிகேசுவரன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
    ×