search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "asiangames 2018"

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஹாக்கி அணி 20 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. #AsianGames2018 #HockeyIndia
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று பெண்களுக்கன ஹாக்கி அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் ஒரு ஆட்டத்தில் இந்தியா, சீனாவை எதிர்கொண்டது. போட்டியின் தொடக்கத்தில் இரு தரப்பு வீராங்கனைகளும் தங்களுக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்தினர். இந்தியாவிற்கு கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் கோல் அடிக்கவிடாது சீன வீராங்கனைகள் தவிர்த்தனர். 

    இந்த பரபரப்பான ஆட்டத்திற்கு மத்தியில் 52-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சரியாக பயன்படுத்திய இந்திய வீராங்கனை குர்ஜித் கவுர், கோல் அடித்து நம்பிக்கை கொடுத்தார். இதனால் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. 

    அதன்பின்னர் இந்தியாவிற்கு பதிலடி கொடுத்து சமன் செய்ய சீன வீராங்கனைகள் முயன்றனர். ஆனால், கடைசி நேரத்தில் சிறப்பான பாதுகாப்பு ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீராங்கனைகள், சீனாவின் கோல் முயற்சியை தடுத்தனர். 

    இறுதியில் 1-0 என்ற கணக்கில் சீனாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி. இதனால் இந்தியாவிற்கு வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது. நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இந்தியா, ஜப்பான் அணியுடன் மோத உள்ளது. 

    ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பெண்கள் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. கடைசியாக 1982ல் டெல்லியில் நடந்த போட்டியில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. #AsianGames2018 #HockeyIndia
    ×