search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arugankulam"

    • நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா ஆண்டு தோறும் 3 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும்.
    • நாளை காலை கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு சுவாமிக்கு 56 வகையான பதார்த்தங்களை கொண்டு நெய்வேத்தியம், தீபாராதனைகள் நடைபெறுகிறது.

    நெல்லை:

    நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா ஆண்டு தோறும் 3 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும்.

    8 ஆயிரம் பானைகள்

    இந்தாண்டு கிருஷ்ண ஜெயந்தி நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கிருஷ்ணருக்கு பல்வேறு விதமான பலகாரங்கள், நிவேதனம் செய்ய மண்பானைகளில் அமுது படைப்பது வழக்கம்.

    இதற்காக கோவிலில் 8 ஆயிரம் மண்பானைகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த பானைகளில் கிருஷ்ணர், சிவன், ராமர், முருகர், மகாவீரர், பெருமாள், மகாலெட்சுமி உள்ளிட்ட தெய்வங்களின் ஓவியங்கள் வரையப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    10 ஆயிரம் லட்டுகள்

    இந்நிலையில் பக்தர்க ளுக்கு பிரசாதம் வழங்கு வதற்காக 10 ஆயிரம் லட்டுகள் தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.

    நாளை காலை கிருஷ்ண ஜெயந்தி விழாைவ முன்னிட்டு சுவாமிக்கு 56 வகையான பதார்த்தங்களை கொண்டு நெய்வேத்தியம், தீபாராதனைகள் நடைபெறுகிறது.

    12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலையில் கோ பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து படையிடலிடப்பட்ட பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்படும். மேலும் 8 ஆயிரம் பானைகளில் வைக்கப்பட்ட பிரசாதங்கள் பெறுவதற்காக பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

    ×