search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arrested for"

    • மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 24 பேரை போலீசார் கைது செய்து, 221 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    • மேலும் அரசு அனுமதியின்றி மது அருந்த அனுமதித்தாக 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியான இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் பார்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இதையொட்டி சிலர் மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் போலீஸ்சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து மேற்கொண்டனர்.

    இதில் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 24 பேரை போலீசார் கைது செய்து, 221 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அரசு அனுமதியின்றி மது அருந்த அனுமதித்தாக 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    • பவானி திருவள்ளுவர் நகர் பகுதிைய சேர்ந்த சிங்காரவேலு மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
    • போலீ சார் கைது செய்து அவரிடம் இருந்து 12 குவாட்டர் மது பாட்டில்களை பவானி போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பவானி:

    பவானி குட்ட முனிய ப்பன் கோவில், கூத்தம்பட்டி பகுதியில் பவானி சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கிருந்த ஒரு திருமண மண்டபத்தின் அருகில் உள்ள மறைவான இடத்தில் மது விற்பனை செய்யப்படுவதாக போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அங்கு இருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் அவர் பவானி, திருவள்ளுவர் நகர் பகுதிைய சேர்ந்த சிங்காரவேலு (45) என்பதும் அரசு அனுமதி இன்றி அதிக விலைக்கு மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து சிங்காரவேலுவை போலீ சார் கைது செய்து அவரிடம் இருந்து 12 குவாட்டர் மது பாட்டில்களை பவானி போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அதேபோல், பவானி அருகில் உள்ள எலமலை கிராமம், குள்ளம்பாறை பகுதியில் சித்தோடு போலீ சார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது குள்ளம் பாறை பகுதியில் மறைவான இடத்தில் அரசு அனுமதி இன்றி மது விற்பனை செய்து கொண்டிருந்த கந்தசாமி‌ (73) என்பவரை சித்தோடு போலீசார் கைது செய்து 7 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • ஈரோடு ரெயில் நிலையம் வந்த திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலை ரெயில்வே போலீசார் ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனை மேற்கொண்டனர்.
    • வாலிபர் ஒருவர் ஒரு பெரிய பை வைத்திருந்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பையை சோதனை செய்த போது அதில் 7 கிலோ கஞ்சாவை மறைத்துக் கொண்டு வந்தது தெரிய வந்தது.

    ஈரோடு:

    வடமாநி லங்களில் இருந்து ஈரோடு வழியாக இயக்கப்படும் ரெயில்களில் கஞ்சா கடத்தப்படுவதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன் பேரில்ரெயில்வே போலீசார் உஷார்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்ற னர்.

    இதையடுத்து ஈரோடுரெயில் நிலையத்தில் வந்து நிற்கும் வெளி மாநில ரெயில்களில் ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனை நடத்தி வருகின்றனர். இதில் கேட்பாரற்று கிடந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் இருந்து கேரளா செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் ஈரோடுரெயில் நிலையம் 2-வது நடைமேடையில் வந்து நின்றது. அப்போது ஈரோடுரெயில்வே போலீசார் ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது எஸ்.5 பெட்டியில் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் ஒரு பெரிய பை வைத்திருந்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பையை சோதனை செய்த போது அதில் 7 கிலோ கஞ்சாவை மறைத்துக் கொண்டு வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.70 ஆயிரம் இருக்கும்.

    அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் மேற்கு வங்காளம், கோல்பாரா பகுதியை சேர்ந்த பவதுல்லா (23) என தெரிய வந்தது. அவர் அந்த கஞ்சாவை கேரளாவிற்கு விற்க சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து ரெயில்வே போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து பவதுல்லாவை கைது செய்தனர். அவரிடமிருந்து 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    • கள்ளம்பாறை பகுதியில் உள்ள கடையில் சோதனை செய்ததில் அங்கு தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா பாக்கெட்டுகள் கட்டு கட்டாக இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
    • இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சனீஸ்வரனை கைது செய்தனர்.

    ஈரோடு:

    அந்தியூர் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது அந்தியூர்-பிரம்மதேசம் பிரிவில் உள்ள கள்ளம்பாறை பகுதியில் உள்ள கடையில் சோதனை செய்தனர்.

    அங்கு தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா பாக்கெட்டுகள் கட்டு கட்டாக இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 7 கிலோ எடையில் உள்ள 714 பாக்கெட்டுகள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    போலீஸ் விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சதீஸ்வரன்(34) கடையில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது பெரிய வந்தது.

    இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சனீஸ்வரனை கைது செய்தனர்.அவரிடம் இருந்து 7 கிலோ எடையுள்ள 714 போதைப்பொருள் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.9,000 ஆகும்.

    • தினேஷ்(வயது30) தனியார் பேக்கரியில் கேசியராக பணிபுரிந்து வருகிறார்.
    • நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் இருவர் திருட முயன்றனர். இதனைக் கண்ட தினேஷ், கூச்சலிட்டார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்(வயது30). இவர் அங்குள்ள தனியார் பேக்கரியில் கேசியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மோட்டார் சைக்கிளை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் இருவர் திருட முயன்றனர்.

    இதனைக் கண்ட தினேஷ், கூச்சலிட்டார். உடனே அப்பகுதி மக்கள் திரண்டு வந்து 2 பேரையும் கையும், களவுமாக பிடித்தனர். இருவரையும் வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த தினேஷ் இது குறித்து புகார் அளித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்கள் வாழப்பாடியை அடுத்த செக்கடிப்பட்டியைச் சேர்ந்த கண்ணதாசன் (28). பாலமணிகண்டன், (20). என்பதும், இருவரும் லாரி டிரைவர்கள் என்றும் தெரியவந்தது. இதை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • ஈரோடு அருகே தனியார் நிதி நிறுவனத்தில் பண மோசடியில் ஈடுபட்டதாக பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஈரோடு:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார்(32). எம். சி.ஏ பட்டதாரி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திற்கு சென்று நான் மற்றொரு தனியார் நிதி நிறுவனத்தில் எனது பெயரில் 15 பவுன் நகையை அடமானம் வைத்துள்ளேன். அந்த நகையை நீங்கள் மீட்டு அதற்குண்டான பணத்தை தருமாறு அந்த நிதி நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டார்.

    இதை உண்மை என்று நம்பிய அந்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பிரேம்குமார் வங்கி கணக்கில் 2 தவணையாக ரூ. 3.50 லட்சம் போட்டு உள்ளனர். பின்னர் அந்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பிரேம்குமார் கூறிய நிதி நிறுவனத்திற்கு சென்று விவரங்கள் கேட்டபோது அப்படி ஒரு பெயரில் நகை அடமானம் வைக்கப்படவில்லை என தெரிய வந்தது. பிரேம்குமார் மோசடி செய்து பணம் பெற்றதும் தெரிய வந்தது.

    இது குறித்து அந்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பிரேம்குமார் க்கு போன் செய்த போது வருகிறேன் என்று கூறி காலம் தாழ்த்தி வந்து உள்ளார். இது தொடர்பாக நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இந்நிலையில் மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பிரேம்குமார் சென்றது போலீசாருக்கு தெரிய வந்தது.

    இதையடுத்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் பிரேம்குமாரை மடக்கி பிடித்தனர். அப்போது அந்த நிதிநிறுவனத்தில் பிரேம்குமார் இதே போல் மோசடியில் ஈடுபட முயன்றது தெரிய வந்தது. பிரேம்குமாரை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    விசாரணையில் பிரேம்குமார் ஏற்கனவே ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நீதி நிறுவனத்தில் இதே போல் மோசடியில் ஈடுபட்டு பணத்தை பெற்றது தெரிய வந்தது.

    மேலும் இவர் மீது நாமக்கல்லில் பொருளாதார குற்றப்பிரிவில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. இது குறித்து ஈரோடு தலைமை மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்தனர்.

    பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார். பிரேம்கு மாருக்கு நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது உதவி செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×