என் மலர்

  நீங்கள் தேடியது "Arrest"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளி அருகே மாணவர்களுக்கு புகையிலை பொருட்களை சிலர் விற்பனை செய்வதாக பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • ரூ.85 ஆயிரம் மதிப்பிலான 13 மூட்டை புகையிலை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

  தென்காசி:

  பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளி அருகே மாணவர்களுக்கு புகையிலை பொருட்களை சிலர் விற்பனை செய்வதாக பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

  அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஆவுடையானூர் அருகே உள்ள சின்னகுமார்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த ஆறுமுகநயினார் என்பவரது மகன் ஆனந்த செல்வம் (வயது 24) என்பவர் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடமிருந்து ரூ.85 ஆயிரம் மதிப்பிலான 13 மூட்டை புகையிலை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஆனந்த செல்வத்தை கைது செய்தனர். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கண்ணங்குடி ஒன்றியத்தில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என யூனியன் கூட்டத்தில் தீர்மானம் எழுந்துள்ளது.
  • பெண்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாமல் அச்சத்துடன் வாழும் அவல நிலை உள்ளது.

  தேவகோட்டை

  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்குடி யூனியன்கூட்டம் தலைவர் மெய்யப்பன் கார்த்திக் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் சந்திர போஸ், ஆணையாளர் முத்துக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் பழனியம்மாள், உதவி பொறியாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.

  துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) சுப்பிரமணியன் வரவேற்றார். யூனியன் தலைவர் பேசுகையில், ஒன்றியத்தில் நடைபெறும் திட்ட பணிகளை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக பால பணிகள் நடைபெறும் பொழுது அதிகாரிகள் முன்னிலையில் கான்கிரீட் போடப்பட வேண்டும் என்று ஒப்பந்ததாரருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றார்.

  சில மாதங்களாக தேவகோட்டை நகரில் இருந்து கண்ணங்குடி ஒன்றிய பகுதிகளுக்கு வரும் சாலையில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  மேலும் தலைவர் பேசுகையில், சித்தானூர், தாழையூர், கோடகுடி, தேரளப்பூர் சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளன. இதுகுறித்து காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து 10-க்கும் மேற்பட்ட நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்த நிலையில் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகிறது. இது வேதனையாக உள்ளது.

  கண்ணங்குடி ஒன்றியத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வழிப்பறி சம்பவங்களால் தற்போது பொதுமக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

  துணைத் தலைவர் சந்திர போஸ் பேசுகையில், கண்ணங்குடி ஒன்றியத்தில் மற்ற இடங்களை காட்டிலும் அதிகமாக வழிப்பறி நடக்கிறது. இதுகுறித்து தலைவர் காவல்துறைக்கு பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க ப்படவில்லை, பெண்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாமல் அச்சத்துடன் வாழும் அவல நிலை உள்ளது. மேலும் ஆண்கள் தற்பொழுது இரவு நேரங்களில் அச்சத்துடன் சாலைகளில் வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
  • தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது.

  கடலூர்:

  குறிஞ்சிப்பாடி சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குறிஞ்சிப்பாடி புவனகிரி சாலையில் உள்ள பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கடை உரிமையாளர் கோவிந்தனை (வயது 52) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் குஞ்சப்பனை சோதனைச்சாவடி அருகே ரோந்து சென்றனர்.
  • அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த நபரை போலீசார் சோதனை செய்தனர்.

  கோத்தகிரி 

  கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி சிலர் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் குஞ்சப்பனை சோதனைச்சாவடி அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த நபரை போலீசார் சோதனை செய்தனர்.

  அவர் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பதற்காக பையில் கொண்டு சென்றது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கவுரி சங்கர் (வயது 40) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 19 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஐசக் சாமுவேல் தினமும் மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்து வந்துள்ளார்.
  • ஆத்திரமடைந்த ஐசக் சாமுவேல் மனைவியை கத்தியால் குத்தினார்.

  நெல்லை:

  பாளை கோரிப்பள்ளம் மாத்தியூ தெருவை சேர்ந்தவர் ஐசக் சாமுவேல் (வயது 29). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சித்ரா. ஐசக் சாமுவேல் தினமும் மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்து வந்துள்ளார்.

  நேற்று வழக்கம் போல மதுகுடித்துவிட்டு வந்துள்ளார். இதனால் அவருக்கும், சித்ராவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

  அப்போது ஆத்திரமடைந்த ஐசக் சாமுவேல் மனைவியை கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த சித்ராவை அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  சித்ரா கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த பாளை போலீசார் ஐசக் சாமுவேலை கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சமூக நல அலுவலர் கள ஆய்வு செய்ததில் திருமணம் நடைபெற்றது உண்மையென தெரியவந்தது.
  • காங்கயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார்.

  காங்கயம் :

  திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியில் 16 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில், சமூக நல அலுவலர் கள ஆய்வு செய்ததில் திருமணம் நடைபெற்றது, உண்மையென தெரியவந்தது.

  இந்த நிலையில் ஊர்நல அலுவலர் ஜோதியம்மாள் காங்கயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் காரைக்குடி பகுதியை சேர்ந்த சிறுமியின் தாய் மற்றும் தந்தை திருமணம் நடத்தி வைக்க உடந்தையாக இருந்த காரணத்தால் 2 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • புல்லுக்காட்டில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
  • ரூ.3,100 ரொக்க பணம், ஒரு மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

  கோவை

  கோவை தெற்கு உக்கடம் அருகே உள்ள புல்லுக்காட்டில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து பெரியக்கடை வீதி சப்-இன்ஸ்பெக்டர்கோமதி தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.

  பின்னர் அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த புல்லுக்காடு குடிசை மாற்றுவாரிய குடியிருப்பை சேர்ந்த காய்கறி வியாபாரி நவுபல் ரகுமான் (வயது 20), சி.எம்.சி. காலனியை சேர்ந்த சூர்யா (18) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 1 கிலோ கஞ்சா, ரூ.3,100 ரொக்க பணம், ஒரு மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.   

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சேதுராமன் பனைத் தொழில் செய்து வருகிறார்.
  • ஆத்திரமடைந்த ராமநாதன் கம்பியால் தனது தம்பி சேதுராமனை தாக்கினார்.

  விளாத்திகுளம்:

  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி வடக்குசெவல் காலனியை சேர்ந்தவர் சேதுராமன் (36). இவர் பனைத் தொழில் செய்து வருகிறார்.

  இவருக்கும் இவரது அண்ணன் ராமநாதன் (38) என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. நேற்று வீட்டில் இருந்த ராமநாதனுக்கும், சேதுராமனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராமநாதன் கம்பியால் தனது தம்பி சேதுராமனை தாக்கினார்.

  இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த சூரங்குடி காவல் நிலைய போலீசார், சேதுராமனின் சடலத்தை கைப்பற்றி விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ராமநாதனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இறந்த சேதுராமனின் மனைவி குடும்ப தகராறு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தி.மு.க. கவுன்சிலர் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டது.
  • இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

  விருதுநகர்

  விருதுநகர் சிவந்திபுரம் ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்தவர் பணப்பாண்டி (வயது 43). தி.மு.க. நிர்வாகி யான இவர் விருதுநகர் நகராட்சியில் 35-வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.

  சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் வெளியே நிறுத்தி இருந்தார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து விட்டு தப்பினார். இதில் மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமானது.இது குறித்து விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

  உறவினர் கைது

  சம்பவம் நடந்த பகுதியிலுள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தது அதே பகுதியில் வசிக்கும் கவுன்சிலர் பணப்பாண்டியின் உறவினர் காளீஸ்குமார் (38) என தெரியவந்தது. தேர்தல் பிரச்சினையில் காளீஸ் குமார் இதில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஏற்காடு பகுதியில் உள்ள அரங்கம் பகுதியில் சிலர் மரம் வெட்டியதாக கூறி கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து சோதனை சாவடியை மூடி மலை கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
  • மரம் வெட்டியவர்கள் 5 பேர் மீது ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

  ஏற்காடு:

  கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஏற்காடு ஒன்றியம், அரங்கம் மலைகிராமத்தில் இருந்து குறுக்கு வழியாக குப்பனூர் செல்வதற்காக, கிராமத்தை சேர்ந்தவர்கள் சிலர் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு 250 சில்வர்ஓக் மரங்கள் வெட்டி உள்ளனர்.

  இந்த சம்பவத்தில் வனத்துறை அலுவலர்கள் தொடர்பு இருந்ததை உறுதி செய்த வனத்துறை அதிகாரிகள், அந்தப் பகுதியில் பணியில் இருந்த கார்ட் குமார் என்பவரை சஸ்பெண்டு செய்தனர். மேலும் பொதுமக்கள் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

  இந்த வழக்கில் தலை மறைவாக இருந்த அரங்கம் கிராமத்தை சேர்ந்த புஷ்ப நாதன், மகேந்திரன் மற்றும் வேல்முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

  இந்த கைது நடவ டிக்கையை கண்டித்து மலை கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் குப்பனூர் சோதனை சாவடியை மூடி வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.

  இதனை அடுத்து ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மோகன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பொதுமக்களின் கோரிக்கையை மாவட்ட கலெக்டரிடம் கொண்டு சென்று, நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததை அடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அஜேஸ்ராமு மற்றும் அவரது தாத்தா செல்வராஜ் ஆகியோர் அவ்வப்போது கண்காணித்து வருகின்றனர்.
  • கடையில் ஆள் இல்லாததால், இரும்புத்துண்டுகளை திருடியதையும் ஒப்புகொண்டனர்.

  புதுச்சேரி:

  காரைக்கால் அருகே திரு.பட்டினத்தில் மெயின் சாலையில், இறந்த தொழில் அதிபர் ராமு மனைவி வினோதாவின் மதுபானகடை உள்ளது. இந்தக்கடை போலீஸ் வழக்கு தொடர்பாக, கடந்த 2 ஆண்டுகளாக பூட்டியே உள்ளது. இருந்தாலும், வினோதாவின் மகன் அஜேஸ்ராமு மற்றும் அவரது தாத்தா செல்வராஜ் ஆகியோர் அவ்வப்போது கண்காணித்து வருகின்றனர். சம்பவத்தன்று அஜேஸ்ராமு தனது நண்பர் வைத்தீஸ் என்பவருடன், வழக்கம் போல், கடையை கண்காணிக்க சென்றபோது, கடையின் பின்பக்கத்தில் உள்ள குடோனில் இருந்து, செட்டர் இரும்புத்துண்டுகளை 2 நபர்கள் திருடிச்சென்றதை பார்த்து, 2 நபர்களையும், விரட்டி பிடித்து, திரு.பட்டினம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து, அஜேஸ்ராமு கொடுத்த புகாரின் பேரில், போலீசார் இருவரையும் பிடித்து விசாரித்தபோது, திருவாரூர் சின்ன மேட்டு பபளையத்தைச்சேர்ந்த ஷாகுல் அமீது(வயது24), கரூர் தோகமலையைச்சேர்ந்த முகம்மது ஷாகுல் அமீது(26) ஆகிய 2 பேர் என்பதும், கடையில் ஆள் இல்லாததால், இரும்புத்துண்டுகளை திருடியதையும் ஒப்புகொண்டனர். அதன்பேரில், 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சாலையைக் கடக்க முயன்ற ஒருவர், கார் வருவதை கவனிக்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
  • இருவருக்குள்ளும் வாய்த்தகராறு ஏற்பட்டு,பின்னர் கைகலப்பாக மாறியது.

  பல்லடம் :

  பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் எஸ்.ஆர்.சி. நகர் பஸ் நிறுத்தம் அருகே அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் கார் ஓட்டி வந்துள்ளார். அப்போது சாலையைக் கடக்க முயன்ற ஒருவர், கார் வருவதை கவனிக்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்குள்ளும் வாய்த்தகராறு ஏற்பட்டு,பின்னர் கைகலப்பாக மாறியது. இதற்குள் ரோட்டில் நடந்து சென்றவர் தரப்பில் இருந்து வந்த நபர்கள், காரில் வந்தவரை தாக்கியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து காரில் வந்தவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அங்கு திரண்டனர். மோதல் ஏற்படும் சூழ்நிலையில் அங்கு வந்த பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் சோமசுந்தரம், பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் பாலசுப்பிரமணி ஆகியோர் இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர்.

  இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் அந்தப் பகுதிக்கு நேரில் வந்தார். அப்போது அவரிடம் ஒரு தரப்பினர், எதிர்த் தரப்பினர்,சட்டவிரோத மது விற்பனை, கஞ்சா விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும், அவர்களால் சமூகவிரோதச் செயல்கள் அடிக்கடி நடப்பதாகவும், தட்டி கேட்பவர்களை கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை காட்டி மிரட்டுவதாகவும் அவரிடம் புகார் தெரிவித்தனர். இதன் பின்னர் இரு தரப்பினரும் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர் இதையடுத்து 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த ஹரிதாஸ் மகன் மலைவாசன்(வயது 26) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.