search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arrestமது விற்படின"

    அந்தியூர் அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    அந்தியூர்:

    காந்தி பிறந்த நாள் விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

    இதை பயன்படுத்தி அந்தியூர் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதாக அந்தியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் அந்தியூர் பஸ் நிலையம் அருகில் ரோந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் ஒருவர் அங்கிருந்த ஓட முயன்றார். உடனே போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில், ‘அவர் அந்தியூர் தேர் வீதியை சேர்ந்த சங்கர் (வயது 37) என்பதும், அவர் மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து விற்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சங்கரை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 50 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் அந்தியூர் கருமலையான் கோவில் பகுதியில் மது விற்றதாக அந்தியூர் புதுக்காடு பகுதியை சேர்ந்த சின்னதம்பி (42) என்பவரை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 50 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். 
    கடந்த ஜனவரி மாதம் பீகார் மாநிலம் புத்த கயாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த திபெத் புத்த மதத்தலைவர் தலாய்லாமாவை கொல்ல முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் 5 பேர் கைதாகியுள்ளனர். #DalaiLama
    பெங்களூர்:

    திபெத் புத்தமதத் தலைவர் தலாய்லாமா கடந்த ஜனவரி மாதம் பீகார் மாநிலம் புத்த கயாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார்.

    அப்போது அங்கு சக்தி வாய்ந்த 2 வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அந்த 2 வெடிகுண்டுகளையும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர்.

    இதையடுத்து தலாய் லாமா, பீகார் கவர்னர் சால்ஜி டாண்டன் ஆகியோரை கொல்ல முயன்றதாக ஜே.எம்.பி. அமைப்பினர் மீது வழக்கு தொடரப்பட்டது. பாட்னா சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் இவ்வழக்கில் கடந்த 27-ந்தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலம் ராம்நகரில் பதுங்கி இருந்த ஜே.எம்.பி. அமைப்பை சேர்ந்த ஜவாஹில் அஸ்லாம், அகமதுஅலி, பைகம்பர் ஷேக், முனீர்நூர், அஸ்சாம் மொஹீன் ஆகிய 5 பேரை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களை பலத்த பாதுகாப்புடன் பீகாருக்கு அழைத்து சென்றனர்.

    கைதான 5 பேரையும் பாட்னா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். #DalaiLama
    கோத்தகிரி அருகே தொழிலாளியை அடித்து கொன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    கோத்தகிரி:

    கோத்தகிரி அருகே ஓம்நகரை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 43). தொழிலாளி. இவருடைய மனைவி ராசாத்தி(38). இவர்களுக்கு கவின்(10) என்ற மகனும், காவியா(8) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் மகேந்திரனுக்கும், அதே பகுதியை சேர்ந்த சின்ராஜ் மகன்கள் புவனேஷ்வரன்(22) மற்றும் சதீஷ்(19) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. மகேந்திரன் நேற்று காலை 8 மணியளவில் எஸ்.கைகாட்டிக்கு சென்றார். அங்கு புவனேஷ்வரன்(22), சதீஷ்(19) மற்றும் இவர்களது நண்பரான பிரட்லீ என்ற நாகராஜ்(25) ஆகியோர் நின்றிருந்தனர். அப்போது இவர்களுக்கும், மகேந்திரனுக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 3 வாலிபர்களும் இரும்பு கம்பியால் மகேந்திரனை தாக்கினர். அதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த கோத்தகிரி போலீசார், அங்கு விரைந்து வந்தனர். பின்னர் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து புவனேஷ்வரன், சதீஷ், நாகராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    இதனிடையே மகேந்திரனை கொலை செய்த 3 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கோத்தகிரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி சம்பவ இடத்திற்கு வந்தார். பின்னர் முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் கொலை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து முற்றுகையை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். 
    ×