search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arjun Tendulkar"

    தெண்டுல்கர் மகன் அர்ஜூன் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். #IND19vSL19
    19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணி இலங்கையில் சுற்றுப் பயணம் சென்று இரண்டு நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. முதல் ஆட்டம் இன்று கொழும்பில் தொடங்கியது.

    டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி கே மிஷரா, விக்கெட் கீப்பர் பெர்னாண்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சச்சின் தெண்டுல்கர் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் நான்கு ரன்கள் விட்டுக்கொடுத்தார்.



    3-வது ஓவரை அர்ஜூன் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் பவுண்டரி விட்டுக்கொடுத்த அர்ஜூன், அடுத்த பந்தில் மிஷராவை எல்பிடபிள்யூ மூலம் வீழ்த்தினார். இதனால் இந்திய அணிக்காக தனது முதல் விக்கெட்டை பதிவு செய்தார். இலங்கை அணி 55 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்துள்ளது. அர்ஜுன் தெண்டுல்கர் 11 ஓவர்கள் வீசி 2 மெய்டன் ஓவருடன் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
    இங்கிலாந்தில் இந்திய வீரர்களுக்கு பந்து வீசிய அர்ஜூன் தெண்டுல்கர் ரவி சாஸ்திரியிடம் முத்தான டிப்ஸ்களை பெற்றுள்ளார். #ArjunTendulkar
    இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்ற அழைக்கப்படுபவர் சச்சின் தெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் தெண்டுல்கர். 18 வயதான இவர் முதன்முறையாக 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். U-19 இந்திய அணி ஜூலையில் இலங்கைக்கு எதிராக இரண்டு நான்கு நாள் போட்டியிலும், ஐந்து ஒருநாள் போட்டியிலும் விளையாடுகிறது. இதில் இரண்டு நான்கு நாள் போட்டிக்கான இந்திய அணியில் அர்ஜூன் தெண்டுல்கர் இடம்பிடித்துள்ளார்.

    தற்போது இந்திய சீனியர் கிரிக்கெட் அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது. இந்திய அணி நேற்று தனது முதல் பயிற்சி செசனை தொடங்கியது. அப்போது அர்ஜூன் தெண்டுல்கர் வலைப்பயிற்சியில் இந்திய வீரர்களுக்கு பந்து வீசினார்.



    அப்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ரவி சாஸ்திரியிடம் முத்தான டிப்ஸ்களை பெற்றுள்ளார். இந்த தகவலை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டரான பிசிசிஐ-யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களுக்கான பயிற்சி முகாம் தரம்சாலாவில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் அர்ஜூன் தெண்டுல்கர் கலந்து கொண்டார்.
    சச்சின் தெண்டுல்கர் மகன் என்பதால் அர்ஜூனுக்கு தனிப்பட்ட முறையில் விஷேச கவனிப்பு இருக்காது என U19 பவுலிங் கோச்சர் தெரிவித்துள்ளார். #ArjunTendulkar
    இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படுபவர் சச்சின் தெண்டுல்கர். வலது கை பேட்ஸ்மேன் ஆன இவர், சர்வதேச போட்டிகளில் 100 சதங்களை பதிவு செய்துள்ளார். மேலும் டெஸ்டிலும் ஒருநாள் போட்டியிலும் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற முத்திரையை பதிவு செய்துள்ளார்.

    இவரது மகன் அர்ஜூன் தெண்டுல்கர். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், நடுகள பேட்ஸ்மேனும் ஆவார். இவர் முதன்முறையாக 19 வயதிற்குட்பட்டோருக்கான அணியில் இடம்பிடித்துள்ளார்.

    19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக சனத் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சச்சின் தெண்டுல்கரின் மகன் என்பதற்காக அர்ஜூன் விஷேசமாக பார்க்கப்படுவாரா? என்ற கேள்விக்கு எல்லா வீரர்களும் ஒரே மாதிரிதான் என்று தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து சனத் குமார் கூறுகையில் ‘‘பயிற்சியாளர் பதவியில் எனது வேலை என்ன என்பது எனக்கு முழுவதுமாக தெரியவில்லை. ஆனால், ஒரு பயிற்சியாளராக அனைத்து வீரர்களும் எனக்கு ஒன்றுதான்.

    அர்ஜூன் தெண்டுல்கர் மற்ற இளைஞர்களைவிட மாறுபட்டவர் இல்லை. என்னுடைய வேலை ஒவ்வொரு வீரர்களிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதுதான்’’ என்றார்.
    19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றது தொடர்பாக சச்சின் கூறுகையில், அர்ஜூன் கிரிக்கெட் வாழ்க்கையில் இது ஒரு முக்கிய மைல்கல் என்றார். #SachinTendulkar #ArjunTendulkar #IndiaUnder19
    மும்பை: 

    இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களுள் இவர் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளார். சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் தான் முதலிடத்தில் உள்ளார். மேலும் சர்வதேச போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் சச்சின் 100 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

    சச்சின் டெண்டுல்கரின் மகன், அர்ஜூன் டெண்டுல்கர். இவரும் கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். நீண்ட நாட்களாக ஆடி வரும் அர்ஜூன் டெண்டுல்கர், தற்போது இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் களமிறங்கும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக திகழும் அர்ஜூன் டெண்டுல்கர் முதல் முறையாக 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



    இந்நிலையில், 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றது தொடர்பாக சச்சின் கூறுகையில், அர்ஜூன் கிரிக்கெட் வாழ்க்கையில் இது ஒரு முக்கிய மைல்கல் என்றார். 

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் என் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அர்ஜூன் வெற்றியடைய நானும், எனது குடும்பத்தினரும் பிரார்த்திப்போம். அர்ஜூனின் கிரிக்கெட் வாழ்க்கையில் இது ஒரு முக்கிய மைல்கல் ஆகும் என தெரிவித்துள்ளார். #SachinTendulkar #ArjunTendulkar #IndiaUnder19
    இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன், இலங்கைக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். #SachinTendulkar #ArjunTendulkar #IndiaUnder19

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களுள் இவர் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளார். சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் தான் முதலிடத்தில் உள்ளார். மேலும் சர்வதேச போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் சச்சின் 100 சதங்களுடன் முதலித்தில் உள்ளார்.

    சச்சின் டெண்டுல்கரின் மகன், அர்ஜூன் டெண்டுல்கர். இவரும் கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். அர்ஜூன் டெண்டுல்கர் நீண்ட நாட்களாக இந்திய அணியில் இடம்பிடிக்க போராடி வந்தார். இந்நிலையில், அவர் தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.

    இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் களமிறங்கும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக திகழும் அர்ஜூன் டெண்டுல்கர் முதல் முறையாக 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தந்தை போலவே மகனும் சாதிப்பாரா என்று சச்சின் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.  #SachinTendulkar #ArjunTendulkar #IndiaUnder19
    ×