search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aphid"

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை, பரமத்தி வட்டாரங்களில் மக்காச்சோளம் இறவை மற்றும் மானாவாரியில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது.
    • கடந்த 2018-ம் ஆண்டு மக்காச்சோளத்தில் படைப்புழுவின் தாக்குதல் கண்டறியப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை, பரமத்தி வட்டாரங்களில் மக்காச்சோளம் இறவை மற்றும் மானாவாரியில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. கடந்த 2018-ம் ஆண்டு மக்காச்சோளத்தில் படைப்புழுவின் தாக்குதல் கண்டறியப்பட்டது.

    மேலும், இந்த படைப்புழுவானது நெல், சோளம், பருத்தி, நிலக்கடலை, கரும்பு, தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட 80வகையான பயிர்களை தாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.

    மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலால் 30-50 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படும். ஆகவே நடப்பு ஆண்டில் மக்காச்சோளப்பியிரில் மகசூல் இழப்பினை தவிர்த்திட எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்ககைகள் குறித்த தொழில்நுட்ப ஆலோசனைகளை வேளாண்மை இணை இயக்குநர் அசோகன் தெரிவித்துள்ளார்.

    கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணிலுள்ள கூட்டுப்புழுக்களை அழிக்கலாம். கடைசி உழவின்போது ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும். இதனால் மண் வளமும் மேம்படுத்தப்படுகிறது.

    அனைத்து விவசாயிகளும் பருவத்தில் ஒரே சமயத்தில் விதைப்பு செய்ய வேண்டும். பல்வேறு நிலைகளில் விதைப்பு செய்வதால் வளர்ச்சி நிலையில் உள்ள மக்காச்சோளப் பயிர்களில் படைப்புழு அதிகளவில் தாக்கும்.சயண்ட்ரானிலிப்ரோல் 19.8 சதவீதம் + தியாமெதாக்சம் 19.8 சதவீதம்எ ன்ற மருந்தை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் மருந்து என்ற அளவில் விதை நேர்த்தி செய்வதன் மூலம் படைப்புழுத் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.

    மக்காச்சோளம் இறவையில் 60x25 செ.மீ இடைவெளியிலும், மானாவாரியில் 45x20 செ.மீ இடைவெளியிலும், சாகுபடி செய்யப்படவேண்டும். மேலும், ஒவ்வொரு 10 வரிசைக்கும் 1 வரிசை இடைவெளி விட்டு சாகுபடி செய்ய வேண்டும்.

    அமெரிக்கன் படைப்புழு தாய் அந்துப் பூச்சிகள் உள்ளதா என கண்காணிக்க விதைத்தவுடன் இனக்கவர்ச்சி பொறிகள் எக்டருக்கு 5 எண்கள் வைத்து கண்காணித்து பொருளாதார சேத நிலைக்கு அதிகமாகும் போது கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்.

    பூச்சிக்கொல்லி பொருளாதார சேத நிலையினை கடந்து அதிகரிக்கும் பட்சத்தில் விதைத்த 15 முதல் 20 நாட்களில் அசாடிராக்டின் 1500பிபிஎம் 50மிலி/10 லிட்டர் நீர் குளோரன்ட்ரனிலிப்ரோல் 18.5 சதவீதம் எஸ்சி 4 மி.லி/ 10 லிட்டர் நீர் (அல்லது) புளுபென்டமைடு 480 எஸ்சி 4 மி.லி/10லிட்டர் நீர் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

    மேலும் விதைத்த 40 முதல் 45 நாட்களில் தாக்குதல் தென்பட்டால் இமாமெக்டின் பென்சோயேட் 5 சதவீதம் எஸ்இ 4 கிராம்/10 லிட்டர் நீர் அல்லது ஸ்பைன்டோரம் 11.7 சதவீதம் எஸ்இ 5மிலி/10லிட்டர் நீர் அல்லது நாவாலூரான் 1- இசி 15மிலி/10லிட்டர் நீர் அல்லது மெட்டாரைசியம் அனிசோபிலியே 80 கிராம்/ லிட்டர் நீர் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

    இவற்றில் ஏதாவது ஒன்றினை தெளித்து மக்காசோளப் படைப்புழுவினை கட்டுப்படுத்தலாம்.இந்த தொழில்நுட்பங்கள் அனைத்தையும் விவசாயிகள் அனைவரும் ஒருங்கிணைந்து கடைபிடித்து மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்திட வேளாண்மை இணை இயக்குநர் அசோகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    ×