search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anti-drug"

    • கூட்டத்தில் முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள் அனைவரும் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ராஜலெட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கத்தில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்புக்கூட்டம் ராஜலெட்சுமி கல்விக்குழுமங்களின் தலைவர் ஆறுமுகநயினார் தலைமையில் நடைபெற்றது.

    ராஜலெட்சுமி கல்விக்குழுமங்களின் செயலாளர் ஆறுமுகம் கிருஷ்ணகுமார் அனைவரையும் வரவேற்றார்.

    கல்லூரியின் முதல்வர் முனைவர் ராஜதுரை, ராஜலெட்சுமி கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சண்முகநாராயணன், அறிஞர் அண்ணா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் விஜயலெட்சுமி போதைப்பொருள் தடுப்பு குறித்தும், தீமை குறித்தும் அறிவுரை வழங்கினார்கள். மேலும் மாணவர்கள் கல்வி கற்கும் காலங்களில் முனைப்புடன் கவனம் செலுத்தி உயர்ந்த நிலையை அடைய வேண்டும் எனவும் குடும்ப உறுப்பினரோ, நண்பர்களோ யாரும் போதைப் பொருட்கள் பயன்படுத்தாதபடி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது. போதைப் பொருள் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் ராஜலெட்சுமி கல்விக் குழுமத்தின் கீழ் செயல்படும் அனைத்து கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    கல்லூரியின் முதல்வர்கள், அனைத்து துறைகளின் தலைவர்கள், பேராசிரியப் பெருமக்கள், மாணவ- மாணவிகள் அனைவரும் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். வணிகவியல் துறைத் தலைவர் பின்னி கிறிஸ்துதாஸ் நன்றி கூறினார்.

    • வாடிப்பட்டியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
    • பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    வாடிப்பட்டி

    போதை ஒழிப்பு தினத்தையொட்டி வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சரவண முருகன் தலைமை தாங்கினார்.

    இதில் போதை ஒழிப்பு சட்டங்கள் பற்றி போலீஸ்இன்ஸ்பெக்டர் கனகசபாபதி, போதை பழக்கத்தால் ஏற்படும் நோய்கள், விளைவுகள் பற்றி டாக்டர் செல்வராஜ், சுகாதார ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன், பொன்.முத்துக்குமார், ராஜேஷ் ஆகியோர் பேசினார். பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் நன்றி கூறினார்.

    • போதை பொருள் பயன்படுத்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு வார நிகழ்ச்சி நடந்தது.
    • விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்படும் நிறுவ–னங்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் போதை பொருள் பயன்படுத்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு வாரம் தொடர்பான முன்னோடி கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தினை போதை இல்லாத தமிழகமாக உருவாக்கிடவும், போதை பொருள் பயன்படுத்தும் பழக்கத்தில் இருந்து தமிழக இளைஞர்களை பாதுகாத்திடவும், போதை பொருள் பயன்படுத்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

    அதன் அடிப்படையில் நாளை (10-ந் தேதி) முதல் 17-ந் தேதி வரை போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்பட உள்ளது.

    முதலமைச்சர் நாளை மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகள் நேரலையாக பார்வையிடும் வகையில் விழிப்புணர்வு உரை நிகழ்த்த உள்ளார்.

    அதனைத் தொடர்ந்து 11-ந் தேதி அனைத்து கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்கும் போதை பொருள் தொடர்பான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறும். 12-ந் தேதி சிவகங்கை மன்னர் துரை சிங்கம் அரசு கலைக்கல்லூரியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு நிகழ்ச்சியும், 14-ந் தேதி காரைக்குடியில் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியும் நடத்தப்பட உள்ளன.

    விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்படும் நிறுவ–னங்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இளைஞர்களை நல்வழிப்படுத்தி சீரான வழியில் கொண்டு சென்று நல்ல சமுதாயத்தை உருவாக்குவதில் அனைவரின் பங்கும் உள்ளது. எனவே, அனைவரும் ஒன்றிணைந்து போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் உதவி ஆணையாளர் (கலால்) கண்ணகி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ராம்கணேஷ், நேரு இளைஞர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் பிரவின் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • போதைப் பொருள் இல்லா தமிழகத்தை உருவாக்கும்போது நோக்கில் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கைது செய்து வருகின்றனர்.
    • நெல்லை மாநகர பகுதியிலும் போலீசார் அதிரடியாக போதை பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    நெல்லை:

    போதைப் பொருள் இல்லா தமிழகத்தை உருவாக்கும்போது நோக்கில் தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கைது செய்து வருகின்றனர்.

    நெல்லை மாநகர பகுதியிலும் போலீசார் அதிரடியாக போதை பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பள்ளி மாணவர்களிடம் போதை பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் போலீசார் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பாளை டக்கரம்மாள்புரம் ஜெயராஜ் அன்னபாக்கியம் பள்ளியில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி தாளாளர் தேவா தலைமை தாங்கினார். அரசு மருத்துவர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் உமா வரவேற்றார்.

    இந்நிகழ்ச்சிக்கு நெல்லை மாநகர கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

    பின்னர் மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் மாணவ மாணவிகள் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • வாகனங்களில் செல்லும் போது சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும்.
    • பள்ளி கல்லூரி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 மற்றும் திருப்பூர் தெற்கு போக்குவரத்து காவல் துறை சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகில் போதை தடுப்பு மற்றும் 33வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றும், விழிப்புணர்வு பற்றிய முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறினார். தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் தினேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    வாகனங்களில் செல்லும் போது சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும். அதி வேகத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும், இரு சக்கர வாகனத்தை எடுக்கும் போதே தலை கவசத்தை மறக்காமல் அணிய வேண்டும். காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் நிச்சயம் அணிய வேண்டும். ஒரு வழி பாதையில் செல்லக் கூடாது . போதை பழக்கத்திற்கு அடிமையாக வேண்டாம்.அவற்றால் எண்ணற்ற நோய்கள் பரவுகிறது. குடும்ப நிம்மதியை இழக்கிறது. பள்ளி கல்லூரி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

    தெற்கு காவல் குற்றப்பிரிவு ஆய்வாளர் ரத்தினகுமார் முன்னிலை வகித்தார். பிறகு மாணவ செயலர்கள் ரத்தினகணேஷ், அருள்குமார், பாலசுப்பிரமணியன் தலைமையில் மாணவர்கள் போதை விழிப்புணர்வு நடனமும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடனமும் அரங்கேற்றினர்.மாணவ மாணவிகள், பொதுமக்கள் , காவல் துறையினர் அனைவரும் இணைந்து போதை ஒழிப்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். இந்த விழிப்புணர்வினை ஏராளமான பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கண்டுகளித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • விழுப்புரத்தில் உலக போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பள்ளி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போதை பொருட்களுக்கு அடிமையாகி இருக்கின்றனர்.

    விழுப்புரம்:

    தமிழகம் முழுவதும் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து சமூக ஆரோக்கியத்தை சிதைத்துக் கொண்டிருக்கிறது. இதில் பள்ளி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போதை பொருட்களுக்கு அடிமையாகி இருக்கின்றனர். எனவே இதிலிருந்து தமிழக மக்களை போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு அடங்கிய பலகைகளை ஏந்தி மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் இருந்து விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு வரை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது. முன்னதாக விழுப்புரம் போதை பொருள் நுண்ணறிவு பிரிவினர் தயார் செய்து வைத்திருந்த குறுந்தகடினை மாவட்ட நீதிபதி பூர்ணிமா வெளியிட மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ஸ்ரீநாதா மற்றும் மாவட்ட கலெக்டர் மோகன் பெற்றுக் கொண்டனர்.

    பேரணியில் நிகழ்ச்சியில் முதன்மை மாவட்ட நீதிபதி பூர்ணிமா, மாவட்ட கலெக்டர் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு டி.எஸ்பி ரவி, சமூக நீதி பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் ஆர்கே குபேரன், இ. எஸ் .கல்வி குழுமத்தின்நிறுவனத் தலைவர் புரவளர் சாமிக்கண்ணு, ஆய்வாளர் பத்மஸ்ரீ, உதவி ஆய்வாளர் சிவா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×