search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anointing"

    • முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.
    • சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பாபநாசம்:

    பாபநாசம் அடுத்த மாளாபுரம் கிராமத்தில் உள்ள நல்லமுத்து முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

    விழாவில் ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி, முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.

    பின், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    • காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி பால்குடம் மற்றும் தீர்த்த குடங்களுடன் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
    • ஏற்பாடுகளை ஆடி கழுவாடி விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்

    வேலாயுதம்பாளையம் 

    கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி பகுதி சேர்ந்த குளிர்ந்தமலை முனியப்ப சாமி கோவிலில் ஆடி கழுவாடியை முன்னிட்டு முனியப்பசாமிக்கு 2008 பால்குடம் அபிஷேக விழா நடைபெற்றது. பால்குட அபிஷேகத்தை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதிகளை சேர்த்த ஏராளமான பக்தர்கள் காலை சுமார் 7 மணி அளவில் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி பால்குடம் மற்றும் தீர்த்த குடங்களுடன் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து முனியப்ப சுவாமிக்கு 2008 பால்குடம் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் ,திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன் ,கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .அதேபோல் குளிர்ந்த மலை முனியப்ப சாமி கோவிலில் உள்ள முருகனுக்கு பல்வேறு வகையான அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முனியப்ப சாமி மற்றும் முருகப்பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். மாலை முனியப்பசாமியின் உற்சவமூர்த்தி திருவீதி உலா நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து தேங்காய், பழம் ,மாவிளக்குகளை கொண்டு வந்து சாமிக்கு படைத்து தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆடி கழுவாடி விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    இதேபோல் வேலாயுதம்பாளையம் சுற்று வட்டார பகுதி கோவில்களில் கழுவாடியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

    • தினமும் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளும், வீதிஉலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.
    • முக்கிய நிகழ்வான மஞ்சள் விளையாட்டு விழா நேற்று நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த வாய்மேடு சிந்தாமணிக்காடு பகுதியில் உள்ள வேம்படி மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

    விழா நாட்களில் தினமும் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளும், வீதிஉலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    முக்கிய நிகழ்வான மஞ்சள் விளையாட்டு விழா நேற்று நடைபெற்றது.

    முன்னதாக சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • சீதளாதேவி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
    • சீதளாதேவி மாரியம்மன் வளையல் அலங்காரத்தில் வீதிஉலா நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, ஆக்கூரில் பழமை வாய்ந்த சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் உள்ளது. இவ்வாலயத்தில் திருமண வரம் வேண்டுபவர்களுக்கு திருமணத்தடை நீக்கியும், குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் தந்தும் பக்தர்கள் வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றி தருபவளாக ஸ்ரீதளா தேவி மாரியம்மன் விளங்குவதால் ஆக்கூர் சுற்றுவட்டாரப் பகுதியின் பல்வேறு கிராமத்தினர் தங்கள் குல தெய்வமாக பாவித்து வணங்கி வருகின்றனர்.

    பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆடிப்பூர வளையல் திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு சீதளாதேவி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

    தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல வண்ண நிறத்தில் பல்லாயி ரக்கணக்கான வளைய ல்கள் அணிவித்து ஸ்ரீசீதளாதேவி மாரியம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். தொடர்ந்து ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் வளையல் அலங்காரத்தில் வீதி உலா காட்சி நடைபெற்றது. வழிநெடுகம் பக்தர்கள்தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

    • ஆடிப்பூர விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதார ண்யேஸ்வரர் திருக்கோயில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் தம்பதி சமேதரராய் திருமண காட்சி அளித்த தலம், நான்கு வேதங்களும் பூஜித்த தலம். இங்குள்ள வேதநாயகி அம்மனுக்கும், சரஸ்வதிக்கு சரஸ்வதியின் வீணையின் ஒலி இனிமையானதா? அம்மனின் குரல் வலிமை இனிமையானதா என்ற போட்டி ஏற்பட்டது.

    அப்போது வீணையின் ஒலியை விட அம்மனின் குரல் இனிமையானதாக இருந்ததால், இந்த கோயிலில் உள்ள சரஸ்வதி வீணை இல்லாமல் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அதே நேரத்தில் அம்மனுக்கு யாழை பழித்த மொழியம்மை என்ற பெயா் வரலாயிற்று.

    இப்படி சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் ஆடிபூர திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு ஆடிப்பூர விழா கொடியேற்றம் 12.7.23 தொடங்கி நடந்து வருகிறது. தினந்தோறும் காலை மாலை அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது.

    21.7.23 வெள்ளி இரவு ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு அபிஷேக ஆராத னைகளும், அர்ச்சனைகளும் நடந்தது. பின்பு இரவு மின் விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரி க்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அம்பாள் எழுந்தருளி வீதியுலா நடந்தது. வீதியுலாவின் போது 10க்கும் மேற்பட்ட நாதஸ்வரக் கலைஞர்கள் கலந்து கொண்ட இன்னிசை கச்சேரி நடந்தது.

    இதில் ஏராளமான பெண்கள் உட்பட பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அரசு போக்குவரத்துக் கழக வேதாரண்யம் கிளையினர் செய்திருந்தனர்.

    • வேலாயுதம் பாளையத்தில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது
    • ஆனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் அருகே நன்செய் புகளூரில் உள்ள பாகவல்லிஅம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோவிலில் ஆனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், கரும்புச்சாறு, விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர், பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் புன்னம் சத்திரம் அருகே புன்னம் பகுதியில் உள்ள புன்னைவனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் உள்ள காலபைரவர், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை உடனுறை மாதேஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவர், குந்தாணிபாளையம் நத்தமேடு ஈஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவர் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் சிவன் கோவில்களில் ஆனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பவுர்ணமி அன்று அர்ச்சனை செய்து வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகில் உள்ள வல்லத்தில் யோக நரசிங்கப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் பக்தர்கள் குழந்தை பேறு வேண்டி பிரதி பவுர்ணமி தோறும் வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். குழந்தை வரம் தரும் அம்மனை பிரதி வெள்ளி கிழமை மற்றும் பவுர்ணமி அன்று அர்ச்சனை செய்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட கிரக தோஷமும் நீங்கும் என்பது ஐதீகம்.

    இந்த நிலையில் இன்று ஆனி மாதம் பவுர்ணமியை முன்னிட்டு கமலவல்லி தாயாருக்கு சிறப்பு பாலாபிஷேகம், அபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து கமலவல்லி தாயாருக்கு மங்கள வாழ்வு தரும் மஞ்சள் காப்பு சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • 18 வகையான வாசனை திரவியங்களால் நடைபெற்றது

    கரூர்,

    கரூர் நொய்யலில் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வெள்ளிக்கிழமையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதேபோல் கரியாம்பட்டி, சேமங்கி, அத்திப்பாளையம், உப்புபாளையம் புன்னம் உள்பட நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பாண்ட மங்கலத்தில் உள்ள பிரசன்ன வெங்கட்ரமணசாமி கோவிலில் வைகாசி மாத ஏகாதசியை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசி இலை மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்ட மங்கலத்தில் உள்ள பிரசன்ன வெங்கட்ரமணசாமி கோவிலில் வைகாசி மாத ஏகாதசியை முன்னிட்டு, சாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்க ளால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசி இலை மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பிரசன்ன வெங்கட்ரமணசாமி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிரசன்னசிறப்பு அபிஷேகம்வெங்கட்ரமணசாமி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 

    • பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவில் உள்ள முருகப்பெருமானுக்கு பாலமுருகனுக்கு வைகாசி மாத சஷ்டியை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவில் உள்ள முருகப்பெருமானுக்கு பாலமுருகனுக்கு வைகாசி மாத சஷ்டியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திரு மஞ்சனம், பஞ்சாமிர்தம் ,விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்க ளுக்கு காட்சியளித்தார். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெரு மானை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    அதேபோல் கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. கபிலர்மலை பாலசுப்பிரமணியசுவாமி கோவில், பரமத்தி அடுத்த பிராந்தகத்தில் 34.5 அடி உயரத்தில் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன் கோவில், அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர் கோவில், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவில், நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோவில் சுப்ரமணியர், ராஜா சுவாமி கோவில் ராஜா சுவாமி, கந்தம்பாளையம் அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில் உள்ள முருகப்பெருமானுக்கு வைகாசி மாத சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • முன்னதாக பந்தக்கால் முகூர்த்தமும் தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
    • பக்தர்கள் சக்திகரகம், அக்னி கொப்பரை, அலகுகாவடி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தை அடுத்த மாத்தி கிராமத்தில் உள்ள ரணகுண மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், காவடி, அலகு காவடி எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    முன்னதாக பந்தக்கால் முகூர்த்தமும் தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவையொட்டி மகா காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. சிறப்பு மலர் அலங்காரத்தில் மகா காளியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை கும்பகோணம் அரசலாற்றங்கரையிலிருந்து சுமார் 100-க்கு மேற்பட்ட பக்தர்கள் சக்திகரகம், அக்னி கொப்பரை, வேல், காவடி, அலகுகாவடி, பால்குடம் எடுத்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

    இதனை தொடர்ந்து கோவிலில் மகா காளியம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கபிஸ்தலம் அருகே அக்கரைப்பூண்டி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.
    • அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    கபிஸ்தலம்:

    தஞ்சாவூர் கபிஸ்தலம் அருகே அக்கரைப்பூண்டி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவி்லில் பால்குட திருவிழா நடைபெற்றது.

    விழாவையொட்டி அக்கரைப்பூண்டி காவேரி ஆற்றங்கரையில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், சக்தி கரகம், காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.

    பின்பு அம்மனுக்கு பால்அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    ×