search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anjaneya"

    • ஆஞ்சநேயருக்கு பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • ஆஞ்சநேயருக்கு தங்ககவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.

    நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    முன்னதாக சாமிக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு தங்ககவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவிலில் ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி மாரியம்மனுக்கு பால், இளநீர், தேன், சந்தனம் உள்பட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.
    • எதிரிகள் தொல்லை நீங்கும்.

    விருத்தம் (த்யானம்):

    மாசற்ற மனத்துடனே ஸ்ரீராமனைப் பாட

    குருநாதனே துணை வருவாய் (2) வாயுபுத்ரனே வணங்கினேன் (2) ஆற்றலும் ஞானமும் வரமும் தர வந்தருள்வாய் ஸ்ரீஹனுமானே

    ஜயஹனுமானே..ஞானகடலே,

    உலகத்தின் ஒளியே..உமக்கு வெற்றியே (1) ராமதூதனே..ஆற்றலின் வடிவமே, அஞ்ஜனை மைந்தனே..வாயு புத்திரனே, (2) மஹா வீரனே..மாருதி தீரனே.. ஞானத்தை தருவாய்..நன்மையை சேர்ப்பாய்.. (3)

    தங்க மேனியில் குண்டலம் மின்ன,

    பொன்னிற ஆடையும்.. கேசமும் ஒளிர(4)

    தோளிலே முப்புரிநூல் அணிசெய்ய, இடியும்..கொடியும்..கரங்களில் தவழ.., (5) சிவனின் அம்சமே..கேசரி மைந்தனே.. உன் ப்ரதாபமே..உலகமே வணங்குமே.. (6) அறிவில் சிறந்தவா..சாதுர்யம் நிறைந்தவா, ராம சேவையே..சுவாசமானவா.. (7) உன் மனக் கோவிலில் ராமனின் வாசம், ராமனின் புகழை கேட்பது பரவசம் (8)

    ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி

    உன் சிறுவடிவை சீதைக்கு காட்டினாய், கோபத் தீயினில் லங்கையை எரித்தாய் (9) அரக்கரை அழித்த பராக்ரம சாலியே, ராமனின் பணியை முடித்த மாருதியே.. (10) ராமன் அணைப்பிலே ஆனந்த மாருதி, லக்ஷ்மணன் ஜீவனை காத்த சஞ்சீவி.. (11) உனது பெருமையை ராமன் புகழ்ந்தான், பரதனின் இடத்திலே உன்னை வைத்தான், (12)

    ஆயிரம் தலைக் கொண்ட சேஷனும் புகழ்ந்தான், அணைத்த ராமன் ஆனந்தம் கொண்டான்(13) மூவரும்..முனிவரும்..ஸனக ஸனந்தரும்.

    நாரதர் சாரதை ஆதிசே-ஷனும்.. (14)

    எம..குபேர..திக்பாலரும்..புலவரும்..

    உன் பெருமைதனை சொல்ல முடியுமோ..(15) சுக்ரீவனை ராமனிடம் சேர்த்தாய்,

    ராஜ யோகத்தை அவன் பெற செய்தாய். (16)

    ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி

    இலங்கையின் மன்னன் விபீஷணன் ஆனதும் உன் திறத்தாலே..உன் அருளாலே.. (17) கதிரவனை கண்ட கவி வேந்தனே கனியென விழுங்கிய ஸ்ரீஹனுமானே, (18) முத்திரை மோதிரம் தாங்கியே சென்றாய், கடலை கடந்து ஆற்றலை காட்டினாய் (19) உன்னருளால் முடியாதது உண்டோ மலையும் கடுகென மாறிவிடாதோ (20)

    ராம ராஜ்யத்தின் காவலன் நீயே, ராமனின் பக்தர்க்கு எளியவன் நீயே, (21) சரண் அடைந்தாலே ஓடியே வருவாய், கண் இமை போல காத்தே அருள்வாய் (22) உனது வல்லமை சொல்லத் தகுமோ, மூவுலகமும் தொழும் ஸ்ரீஹனுமானே.. (23) உன் திருநாமம் ஒன்றே போதும் தீய சக்திகள் பறந்தே போகும். (24)

    ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி

    ஹனுமனின் ஜபமே பிணிகளைத் தீர்க்குமே துன்பங்கள் விலகுமே..இன்பங்கள் சேர்க்குமே.(25) மனம்,மெய்,மொழியும் உந்தன் வசமே உன்னை நினைத்திட எல்லாம் ஜெயமே, (26)

    பக்தர்கள் தவத்தில் ராம நாமமே,

    ராமனின் பாதமே..உந்தன் இடமே. (27)

    அடியவர் நிறைவே கற்பகத் தருவே,

    இறையனுபூதியை தந்திடும் திருவே. (28)

    நான்கு யுகங்களும் உன்னைப் போற்றிடும் உன் திருநாமத்தில் உலகமே மயங்கும். (29) ஸ்ரீராமன் இதயத்தில் உந்தன் இருப்பிடம் ஞானியர் முனிவர்கள் உந்தன் அடைக்கலம். (30) அஷ்ட சித்தி நவநிதி உன் அருளே அன்னை ஜானகி தந்தாள் வரமே (31) ராம பக்தியின் சாரம் நீயே எண்ணம் எல்லாமே ராமன் ஸேவையே (32)

    ராம லக்ஷ்மண..ஜானகி… ஸ்ரீராம தரதனே மாருதி

    ஹனுமனைத் துதித்தால் ராமனும் அருள்வான் பிறவா வரம் தந்து பிறவியைத் தீர்ப்பான் (33) ராம நாமமே வாழ்வில் உறுதுணை அந்திம காலத்தில் அவனின்றி யார் துணை (34) என் மனக் கோவிலில் தெய்வமும் நீயே உனையன்றி வேறொரு மார்க்கமும் இல்லையே (35) நினைப்பவர்துயரை நொடியில் தீர்ப்பாய் துன்பத்தைத் துடைத்து துலங்கிட வருவாய் (36)

    ஜெய ஜெய..ஜெய..ஜெய ஸ்ரீஹனுமானே ஜெகத்தின் குருவே..ஜெயம் தருவாயே (37) "ஹனுமான் சாலீஸா" அனுதினம் பாடிட பரமன் வருவான் ஆனந்தம் அருள்வான் (38) சிவபெருமானும் அருள் மழை பொழிவான் இகபர சுகங்களை எளிதில் பெறுவான் (39) அடியவர் வாழ்வில் ஹனுமனின் அருளே துளஸீதாஸனின் பிரார்த்தனை இதுவே (40)

    ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி

    மூல நட்சத்திர நாளில், விரதம் இருந்து அனுமனுக்கு வெண்ணெய் சார்த்தியோ வெற்றிலை மாலை அணிவித்தோ துளசி மாலை வழங்கியோ வழிபடுங்கள்.
    மூல நட்சத்திர நாளில், விரதம் இருந்து அனுமனுக்கு வெண்ணெய் சார்த்தியோ வெற்றிலை மாலை அணிவித்தோ துளசி மாலை வழங்கியோ வழிபடுங்கள். உங்கள் எதிர்ப்பையெல்லாம் தவிடுபொடியாக்குவார் அனுமன் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    அனுமனுக்கு உகந்த நட்சத்திரம் மூலம். அவரின் ஜன்ம நட்சத்திரம் இது. மாதந்தோறும் வருகிற மூல நட்சத்திரம் ரொம்பவே சிறப்பானது. புதன் மற்றும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வணங்கி வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். அதேபோல் அவருக்கு உரிய மூல நட்சத்திர நாளில், விரதம் இருந்து அனுமன் கோயிலுக்குச் சென்று அவரை வழிபட்டால், எதிர்ப்பையெல்லாம் தவிடுபொடியாக்குவார். இன்னல்கள் மொத்தமும் விலகிவிடும். எடுத்த காரியத்தில் ஜெயம் உண்டாகும் என்பது ஐதீகம்.

    நாமக்கல், சென்னை நங்கநல்லூர், திருச்சி கல்லுக்குழி, நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயர் ஆலயங்களில் மூல நட்சத்திர சிறப்பு வழிபாடு, விசேஷ அலங்காரங்கள், பூஜைகள் விமரிசையாக நடைபெறுகின்றன.

    அனுமனுக்கு உகந்த மூல நட்சத்திர தினத்தில் விரதம் இருந்து, அருகில் உள்ள அனுமன் கோயிலுக்குச் சென்று தரிசியுங்கள். துளசி மாலை சார்த்துங்கள். வெற்றிலை மாலை கட்டி எடுத்துச் சென்று வழங்குங்கள். கொஞ்சம் வெண்ணெய் வழங்கி சார்த்துங்கள். அப்படியே இயலாதோருக்கு புளியோதரை அல்லது தயிர்சாதம் அன்னதானமாக வழங்குங்கள். உங்களின் எல்லாக் காரியங்களிலும் பக்கபலமாக இருந்து காத்தருள்வார் ராமபக்தன் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.

    திருமணத்தடை இருப்பவர்கள் ஸ்ரீ கல்யாண ஆஞ்சநேயர் தலத்துக்கு வந்து கல்யாண ஆஞ்சநேயரை வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
    தைரியமும் வீரமும் கொடுப்பவர் அனுமன். பிரம்மச்சரியாக வாழ்பவர்களுக்கு விருப்பமான கடவுளும் அனுமன் தான். ஆனால் பிரம்மச்சாரி என்று போற்றும் அனுமன் திருமணக்கோலத்தில் காட்சித்தரும் திருத்தலம் சென்னை செங்கல்பட்டு சாலையில் தைலாவரத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீ கல்யாண ஆஞ்சநேயர் திருத்தலம்.

    கல்வி, இசை, கலை, வேதங்கள் என அனைத்தையும் சூரியன் அனுமனுக்குக் கற்றுத் தந்தார். அனைத்தையும் திறமையாக கற்றுக்கொண்ட அனுமனுக்கு “நவவியாகரண பண்டிதன்’ என்ற பட்டம் பெறும் ஆசை இருந்தது. ஆனால் இந்தப் பட்டம் பெறுபவர்கள் குடும்ப வாழ்வை மேற்கொண்டிருக்க வேண்டும் என்பது நியதியாக இருந்ததால் அனுமன் மணம் புரிய சம்மதித்தார். அனுமன் விரும்பிய பட்டத்தை அளிக்க விரும்பிய சூரிய பகவான் தன்னுடைய மகளான சுவர்ச்சலா தேவியை தன் சிஷ்யனான அனுமனுக்கு மண முடித்து வைத்தார் என்று சூரிய புராணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  
     
    ஆஞ்சநேயரின் திருமணக்கோலத்தைத் தரிசிக்க தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் இங்கு வருகிறார்கள். இத்தலத்தில் மூலவரான ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் எட்டடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். தனி சன்னிதியில் உற்சவராக தன்னுடைய தேவியும் சூரிய புத்திரியுமான சுவர்ச்சலா தேவியுடன் பத்மபீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீ கல்யாண ஆஞ்சநேயர். சங்கு சக்கரம் ஏந்தி நான்கு கரங்களுடன் வீற்றிருக்கும் ஆஞ்சநேயர் சமேத சதுர்புஜ சுபமங்களவரத ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படுகிறார். 
     
    வேறு எந்த கோவிலும் இல்லாத சிறப்பாக காதலித்தவர்களும் தங்களது துணையுடன் இத்தலத்துக்கு வந்து வேண்டுதல் வைக்கிறார்கள். ஆஞ்சநேயரின் சம்மதத்தைப் பெற்றால் அவரது அருளால் பெற்றோர்களின் சம்மதமும் மனமுவந்து கிடைக்கிறது என்கிறார்கள் இங்கு வரும் காதல் புரிந்து தம்பதியரான புதுமண  தம்பதியர்.
     
    திருமணத்தடை இருப்பவர்களும் இத்தலத்துக்கு வந்து ஸ்ரீ கல்யாண ஆஞ்சநேயரை வழிபட்டால் திருமணம் கைகூடும் என்கிறார்கள் பக்தர்கள். 
    ஆஞ்சநேயரை பூரண பிரம்மச்சரியத்துடன் உபாசிப்பதால் எல்லா நலன்களும் உண்டாகும். பில்லி, ஏவல் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
    நிஷ்காம்ய பக்தி யோகத்தின் மூர்த்தமாகத் திகழ்பவர் ஸ்ரீஆஞ்சநேயர். இந்தக் கலியுகத்துக்குப் பிரம்மாவாக விளங்குபவர். ஆஞ்சநேயரை பூரண பிரம்மச்சரியத்துடன் இவரை உபாசிப்பதால் எல்லா நலன்களும் உண்டாகும். பில்லி, ஏவல் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

    ஓம் பராபிசார சமனோ
    துக்கக்னோ பக்த மோக்ஷத
    நவத்வார புராதாரோ
    நவத்வார நிகேதனம்
    நாம் ஆஞ்சநேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம். ஆஞ்சநேயருக்கு என்ன பரிகாரங்கள் என்ன பலனை தரும் என்று பார்க்கலாம்.
    நாம் ஆஞ்சநேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம். ஏழரை சனி இருப்பவர்கள் ஆஞ்சனேயர் பாதத்தை பிடித்துக் கொண்டால் போதும் சனியின் தாக்கம் மிகவும் குறையும் அதே போல்

    பலவிதமான இன்னல்கள் துக்கங்கள் என்று வரும் போது ஆஞ்சநேயருக்கு நெய் விளக்கு வைத்தால் படிப்படியாக பிரச்சனைகள் தீரும்.

    அவருக்கு செய்பவைகளில் சில,

    - வடைமாலை சாத்துதல்

    - செந்தூரக்காப்பு அணிவித்தல்

    - வெண்ணெய் காப்பு சாத்துதல்

    - ராம் ராம் என்று எழுதி மாலை சாத்துதல்

    இந்த பரிகாரங்களை செய்து பலர் நன்மை நடந்ததை கண்கூடாகப் பார்க்கிறோம்.

    ஆஞ்சநேயர் கவசத்தை தினமும் காலை பூஜையறையில் 108 தடவைகள் சொல்ல வேண்டும். இதனால் காரியங்கள் கைக்கூடி நன்மை அளிக்கும். மனபயம் இருப்பின் அகலும்.
    ஆஞ்சநேயர் கவசத்தை தினமும் காலை பூஜையறையில் 108 தடவைகள் சொல்ல வேண்டும். `ஓம்' என்று தொடங்கி `போற்றி' என்று முடிக்க வேண்டும். ஒவ்வொரு தடவையும் பூ இதழ்களை அனுமன் படத்தின் மீது போட்டு அர்சிக்க வேண்டும். இதனால் குடும்பத்தில் நோய் நொடி இருந்தால் அகலும். மனபயம் இருப்பின் அகலும். காரியங்கள் கைக்கூடி நன்மை அளிக்கும். அந்த 108 போற்றி வருமாறு:-

    ஓம் ஆஞ்சனாதேவி பெற்ற அருமை மைந்தா போற்றி
    ஓம் ஆஞ்சநேயனே எங்கள் இதய தெய்வமே போற்றி
    ஓம் இன்னலைத் தீர்க்க வந்த இறைவா போற்றி
    ஓம் ஈடு இணையில்லாத வீரதீர இளமையே போற்றி
    ஓம் உன்னத வாலை உச்சி உகந்தவா போற்றி

    ஓம் ஊறிலா வண்ணம் காக்கும் உத்தமா போற்றி
    ஓம் எண்ணரும் கலைகள் வல்லாய் எளிமையே போற்றி
    ஓம் ஏற்றமே அருளும் செல்வ மாருதி போற்றி
    ஓம் ஐந்தெனும் புலனை வென்ற ஆண்டவா போற்றி
    ஓம் ஒண்ணதி வழங்க வல்ல உயர்குணமே போற்றி

    ஓம் ஓங்காரம் செய்து துள்ளும் உரிமையே போற்றி
    ஓம் ஓளடதம் தேடிச் சேர்ந்த அதிசயம் போற்றி
    ஓம் கண்ணுதல் கருதும் செல்வ கண்மணி போற்றி
    ஓம் காற்றிகை அருளால் வந்த கடமையே போற்றி
    ஓம் கிண்கிணி தண்டை கொண்ட கிளர்ச்சியே போற்றி

    ஓம் கீசகன் பகையின் அண்ணன் அனுமனே போற்றி
    ஓம் குரக்கினத் தலைமைகொள் துணைவா போற்றி
    ஓம் கூரிய சொல்லின் செல்வ சுந்தர போற்றி
    ஓம் கெடுதியை களையும் எங்கள் இறைவனே போற்றி
    ஓம் கேடுகள் நீக்கும் ஆஞ்சநேயனே போற்றி

    ஓம் கைவரு ராம பக்த அனுமனே போற்றி
    ஓம் கொடுமையை நீக்க வந்த குமுதமே போற்றி
    ஓம் கோடி சூரியப்பிரபை கொண்ட இறைவா போற்றி
    ஓம் கௌவையைக்களையும் செல்வ மாருதி போற்றி
    ஓம் சங்கடம் நீக்க எண்ணும் சத்தியம் போற்றி

    ஓம் சாத்திரம் எல்லாம் கற்ற சற்குணா போற்றி
    ஓம் சிந்தனை சிறந்த செல்வ அனுமனே போற்றி
    ஓம் சீரிய ஞானதீப மாருதி போற்றி
    ஓம் சுந்தரமுகம் கொள்ஞான சூக்குமம் போற்றி
    ஓம் சூரியன் மணியான சுடரொளி போற்றி

    ஓம் செந்தமிழ் கம்பன் போற்றும் கீர்த்தியே போற்றி
    ஓம் சேய்மையில் அண்மையாம் துணைவரே போற்றி
    ஓம் சைலமே உறையும் எங்கள் சற்குணா போற்றி
    ஓம் சொர்ணமே மேனியான சுந்தரா போற்றி
    ஓம் சோகமே தீர்ப்பாய் எங்கள் அனுமனே போற்றி

    ஓம் சௌகரியம் சேர்ப்பாய் எங்கள் சஞ்சீவி போற்றி
    ஓம் கடாயெனும் பெயர் கொண்ட கண்மணி போற்றி
    ஓம் காட்டினில் மலையில் வாழும் கற்பகம் போற்றி
    ஓம் கிளிபயில் சோலை எல்லாம் திரிகுவை போற்றி
    ஓம் கீண்டினை அசுரர் மாளக் கீர்த்தியே போற்றி

    ஓம் குறைவறு கல்வி ஞானம் படைத்தனை போற்றி
    ஓம் கூறு சொல் தன்னின் செல்வன் சுந்தரன் போற்றி
    ஓம் கெடுதியைச் சாய்த்து நீக்கும் அனுமன் போற்றி
    ஓம் கேடறியாத தூத இறைவனே போற்றி
    ஓம் கைநகம் வஜ்ரமான கண்மணி போற்றி

    ஓம் கொள்கையில் உறுதி வாய்ந்த மாருதி போற்றி
    ஓம் கோட்டையைத் தாண்டும் செல்வ மாருதி போற்றி
    ஓம் கௌபீன் இறைவன் போற்றும் கனகமே போற்றி
    ஓம் தண்ணிழல் ஆன எங்கள் புண்ணியா போற்றி
    ஓம் தாங்கரும் துயரும் தீர்க்கும் தருநிழல் போற்றி

    ஓம் திண்ணிய உரம்கொள் தேகா மாருதி போற்றி
    ஓம் தீமையை நீக்கும் செல்வ அனுமனே போற்றி
    ஓம் துணிவினில் சிறந்த எங்கள் அனுமனே போற்றி
    ஓம் தூய்மை வாய்மை வாய்ந்த மெய்ம்மையே போற்றி
    ஓம் தெளிவுறு கேள்வி ஞானம் கிளர்த்துவை போற்றி

    ஓம் தேடியே சஞ்சீவி நல்கும் கீர்த்தியே போற்றி
    ஓம் தையலாம் சீதை போற்றும் தூதனே போற்றி
    ஓம் தொழில் நலம் வலிமை நல்கும் தூயவா போற்றி
    ஓம் தோள்வலி மிக்க ராம தூதனே போற்றி
    ஓம் தௌமியன் போற்றும் ஞான அனுமனே போற்றி

    ஓம் நற்குண சீலரே மாருதி வீர போற்றி
    ஓம் நாடிய தரவே வல்லாய் நாயக போற்றி
    ஓம் நிச்சயம் பிரம்மச்சரியம் காத்தனை போற்றி
    ஓம் நீடிய பகையை நீக்கும் நிறைகுணம் போற்றி
    ஓம் நுண்மைகொள் அறிவு கொண்ட மாருதி போற்றி

    ஓம் நாலறி புலவ ஞான பானுவே போற்றி
    ஓம் நெற்றியில் நாமம் காட்டும் நெறியதே போற்றி
    ஓம் நேர்ந்தனை ராம நாமம் தூதனே போற்றி
    ஓம் நைந்திடும் நிலைமை நீக்கும் நாயகா போற்றி
    ஓம் நொந்திட வண்ணம் காக்கும் நோக்கமே போற்றி

    ஓம் நோயினை அண்டா வண்ணம் காக்க நீ போற்றி
    ஓம் நௌவிபின் சென்ற இராம தூதரே போற்றி
    ஓம் பலநலம் கொண்ட எங்கள் பரமனே போற்றி
    ஓம் பாலக வஜ்ர தேகா அனுமனே போற்றி
    ஓம் பிலமதில் சென்று வெற்றி சேர்த்தனை போற்றி

    ஓம் பிழைகள் நீக்கும் செல்வ மாருதி போற்றி
    ஓம் புன்மைகள் தன்னை நீக்கும் புனிதமே போற்றி
    ஓம் பூவுடைக் கானம் வாழும் பூரண போற்றி
    ஓம் பெருமைக்கொள் உரமே பெற்ற பரமனே போற்றி
    ஓம் பேசரு வியாகரணம் பிறவெலாம் கற்றாய் போற்றி

    ஓம் பைம்பொழில் திரியும் அன்பே அனைத்தும் போற்றி
    ஓம் பொறுமை கொள் அறத்தின் தூத புண்ணியா போற்றி
    ஓம் போயினை வென்றாய் நன்றாய் பூரண போற்றி
    ஓம் பௌவமே தாவிப் பாயும் பரமனே போற்றி
    ஓம் எக்குலத் தாரும் போற்றும் இறைவனே போற்றி

    ஓம் எங்ஙணும் நீயே உள்ளாய் இறைவனே போற்றி
    ஓம் அச்சரத்தால் வாலி அழிந்திடச் செய்தாய் போற்றி
    ஓம் அஞ்சனை செல்வ அரிய செம்மணியே போற்றி
    ஓம் திட்டமாய் செயல் செய்யும் தினகரன் தூத போற்றி
    ஓம் திண்ணமாய் வெற்றி தரும் ஆஞ்சநேயனே போற்றி

    ஓம் எத்திறம் தனிலும் வல்ல இனிய மாருதியே போற்றி
    ஓம் எந்தையர் சிந்தை வாழும் இறைவ மாருதியே போற்றி
    ஓம் எம்மருங்கினிலும் வாழும் இறைவா போற்றி
    ஓம் எப்பரம் பொருளும் வாழ்த்தும் இனியவா போற்றி
    ஓம் எவ்வனம் செலினும் உய்வன சொல்வாய் போற்றி

    ஓம் எய்திடும் இனிமை எல்லாம் இயற்றுவை போற்றி
    ஓம் இல்லற ராம தூதன் எங்கள் மாருதியே போற்றி
    ஓம் நள்ளிரா தன்னில் காக்கும் காலசஞ்சீவி போற்றி
    ஓம் ஆழ்கடல் கடந்த வஜ்ர தேகனே இறைவா போற்றி
    ஓம் பாற்கடல் பிறந்த மாது பரிவுறும் கடமை போற்றி

    ஓம் மார்பினை பிளந்து மாயன் மகத்துவம் அளித்தாய் போற்றி
    ஓம் பன்னலம் சேர்க்கும் எங்கள் பத்ம தேகனே போற்றி
    ஓம் நன்னயம் சேர்க்கும் எங்கள் இராம தூதனே போற்றி
    ஓம் பொன்னவிர் அஞ்சனை தந்த புதுமையே போற்றி

    ஓம் நூற்கடல் கடந்த எங்கள் நுண்மையே போற்றி
    ஓம் நாற்பயன் விளைக்கும் எங்கள் நாயகா போற்றி
    ஓம் பாற்படு பொருளில் எல்லாம் படர்ந்தனை போற்றி
    ஓம் போற்றியே அனும போற்றி
    பூரணா போற்றி போற்றி.
    ×