என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Anaimalai bus theft"
கோவை:
கோவை மாவட்டம் ஆனைமலை காந்திநகரை சேர்ந்தவர் ஜெய்லாப்தீன் (வயது 61). டிரைவர்.
இவர் கடந்த 3 வருடங்களாக கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில் பஸ் ஓட்டி வருகிறார்.
சம்பவத்தன்று கல்லூரி பஸ்சில் ஆனைமலை வந்த அவர் பஸ்சை பழைய பஸ் நிலையம் அருகே நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்றார். சிறிது நேரம்கழித்து திரும்பி வந்து பார்த்த போது பஸ்சை காணவில்லை.
யாரோ மர்மநபர்கள் பஸ்சை திருடி சென்றது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து ஆனைமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
பழைய பஸ் நிலைய பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர். அதில், அதேபகுதியை சேர்ந்த விஜயகுமார்(23) என்பவர் பஸ்சை திருடி சென்றது தெரியவந்தது.
போலீசார் தீவிர விசாரணை நடத்தி கோபிசெட்டிபாளையத்தில் பதுங்கி இருந்த விஜயகுமாரை கைது செய்தனர். அங்கிருந்த பஸ்சையும் பறிமுதல் செய்தனர். பஸ்சின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.
விஜயகுமார் மீது ஏற்கனவே வேன் திருடியதாக வழக்கு இருப்பது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.