search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "amith shaa"

    பாராளுமன்றத் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாது சிவசேனா தனித்து போட்டியிடும் என்ற தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் கூறியுள்ளார். #shivsena #BJP
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க.-சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பா.ஜ.க - சிவசேனா இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் காரணமாக விரிசல் ஏற்பட துவங்கியது. இதையடுத்து, சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்ரே பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாகவும், இனி வரப்போகும் அனைத்து தேர்தல்களிலும் தனித்து போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார்.

    இந்த அறிவிப்பினால் பா.ஜ.க தலைமை சற்றே நிலைகுலைந்தது. 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சிவசேனாவின் இந்த அறிவிப்பு பா.ஜ.க.வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இதையடுத்து, சிவசேனாவுடன் மீண்டும் கூட்டணியை அமைக்க பா.ஜ.க தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர். நேற்று பா.ஜ.க.வின் தலைவர் அமித் ஷா சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்ரேவை நேரில் சந்தித்து பேசினார்.



    இந்த சந்திப்பு சமாதானத்துக்கான தூதாகவும், கூட்டணியை உறுதி படுத்துவதற்காகவும் நடைபெற்றதாக அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், அமித் ஷாவுடனான சந்திப்பு குறித்து பேசிய சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் சிவசேனா தனித்து போட்டியிடும் என முன்னதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

    சஞ்சய் ராவத்தின் இந்த கருத்தால் பா.ஜ.க தலைமை மேலும் கலக்கம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. #shivsena #BJP
    ×