search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ambur"

    ஆம்பூர் அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் மணல் தடுப்பு பிரிவு தனிப்படை போலீசார் வெங்கிளி, ஜமீன் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிரே வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து லாரி டிரைவர் அமரேசன் (வயது 30). என்பவரை கைது செய்தனர். மேலும் லாரியை பறிமுதல் செய்து ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    ஆம்பூர் அருகே வீட்டில் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த தோட்டாளத்தை சேர்ந்த சாமிநாதன் மகன் ரமேஷ் (வயது 27). வீட்டில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக ஆம்பூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் ரமேஷ் வீட்டில் திடீர் சோதனை செய்தனர்.

    வீட்டில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து ரமேசை கைது செய்தனர்.

    ஆம்பூர் அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த நரியாம்பட்டு பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் குப்பன். இவரது மனைவி ரஜினா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சுசிலா (வயது 14). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பும், அவரது தங்கை சுஸ்மிதா (12). 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று மாலை சகோதரிகள் 2 பேரும் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு திடீரென கைகலப்பாக மாறியது.

    இதனை கண்ட ரஜினா, சுசிலாவை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சுசிலா வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவலறிந்த உமராபாத் போலீசார் உடலை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா:

    ஆற்காடு அருகே உள்ள உப்புபேட்டையை சேர்ந்தவர் சிவக்குமார் மகன் அர்ஜூனன் (வயது 22). இவர் நேற்று காலை ஆம்பூருக்கு வேலைகாரணமாக சென்று விட்டு மாலை வீட்டிற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

    ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு என்ற இடத்தில் பைக் வந்த போது பின்னால் வந்த வேன் பைக் மீது மோதியது. இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசபட்ட அர்ஜூனன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் உடலை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு கர்ப்பிணி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே உள்ள வீராங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி வினோதினி (வயது 22). இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது வினோதினி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வினோதினிக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு காய்ச்சல் சரியாகாததால் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மதியம் வினோதினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    வினோதினி பன்றி காய்ச்சலால் இறந்ததாக தகவல் பரவியது. அதைத் தொடர்ந்து வீராங்குப்பம் கிராமத்தில் மருத்துவ குழுவினர் முகாமிட்டுள்ளனர்.

    ஆம்பூர் அடுத்த கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முனிசாமி (45), கூலி தொழிலாளி. இவர் கடந்த 3 நாட்களாக காய்ச்சலில் அவதிப்பட்டு வந்தார். காய்ச்சலுக்காக ஆம்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி முனிசாமி பரிதாபமாக இறந்தார்.

    ஆம்பூரில் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த உமராபாத் கடாம்பூரை சேர்ந்தவர் அமீர் பாஷா (வயது 57). ஷூ கம்பெனி தொழிலாளி. இவர் நேற்று மாலை கெங்காபுரம் பகுதியில் உள்ள நண்பரின் பீடா கடைக்கு சென்றார்.

    அப்போது, அங்கு வந்த ஒரு வாலிபர் அமீர்பாஷாவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போன், 1000 ரூபாயை பறித்தார்.

    மேலும் 2 பேரிடம் மிரட்டி பணம் வழிப்பறி செய்தார். இதுகுறித்து, ஆம்பூர் டவுன் போலீசுக்கு புகார் சென்றது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தனர்.

    வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர், ஆம்பூர் பி.கஸ்பா குமரேசன் தெருவை சேர்ந்த ஆனந்தன் மகன் பிரபுகுமார் (28) என் பது தெரியவந்தது.

    பிரபுகுமாரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மனிதர்கள் இறந்து போனாலே அனாதை பிணமாக விட்டு செல்லும் நிலையில் இறந்த குரங்குக்கு முறையாக இறுதி சடங்கு செய்து, அடக்கம் செய்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சி, ஊட்டல்மலை கானாறு கரையில் நெமிலியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அருகே மரம் விட்டு, மரம் தாவும் போது மின்கம்பியில் சிக்கி பெண் குரங்கு ஒன்று உயிரிழந்தது.

    இதனை கண்ட வன்னியநாதபுரம் இளைஞர்கள் மின்சாரத்துறை ஊழியர்களுடன் இணைந்து, இறந்த குரங்கின் உடலை மீட்டனர்.

    இதனையடுத்து தென்னை ஓலையில் பாடைக்கட்டி இறந்தவர்களுக்கு செய்யும் அனைத்து இறுதி சடங்குகளையும் செய்து, பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர். பின்னர் இறுதி ஊர்வலம் நடத்தி, குரங்கின் உடலை அடக்கம் செய்தனர்.

    மனிதர்கள் இறந்து போனாலே அனாதை பிணமாக விட்டு செல்லும் நிலையில் இறந்த குரங்குக்கு முறையாக இறுதி சடங்கு செய்து, அடக்கம் செய்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
    ஆம்பூர் அருகே டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டத்தில் கைதான 40 பேரை வேலூர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே உள்ள அழிஞ்சிகுப்பம் கிராமத்தில் கடந்த ஆண்டு புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் கடை சூறையாடப்பட்டது. போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து 20 பெண்கள் உள்பட 40 பேரை கைது செய்தனர். வழக்கு விசாரணை வேலூர் விரைவு கோர்ட்டில் நடந்தது. நீதிபதி குணசேகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    அவர் இன்று தீர்ப்பளித்தார். டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடி கைதான 40 பேரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பில் கூறினார்.

    இதையடுத்த கைதான 40 பேரும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
    ஆம்பூர் அருகே லோடு ஆட்டோ மீது தனியார் பஸ் மோதியதில் 6 வயது சிறுமி பலியானார், 8 பேர் படுகாயமடைந்தனர்.

    ஆம்பூர்:

    சென்னை திருமங்கலம் காமராஜ் நகரை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 40). கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி வசந்தி (30) தம்பதிக்கு ராமச்சந்திரன் (12) என்ற மகனும் மாலினி (10), கீர்த்தி (6) என்ற மகள்களும் உள்ளனர்.

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே சின்னபுதூர் கிராமத்தில் இவர்களது குலதெய்வம் கோவில் உள்ளது. கோவிலுக்கு நேற்று இரவு தண்டபாணி தனது உறவினர்களுடன் ஒரு லோடு ஆட்டோவில் புறப்பட்டு வந்தார்.

    ஆம்பூர் அருகே சென்னை பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் லோடு ஆட்டோ சென்று கொண்டிருந்த போது சென்னையில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற தனியார் சொகுசு பஸ் லோடு ஆட்டோவின் பின்புறம் மோதியது. இதில் லோடு ஆட்டோ சாலையின் அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

    விபத்தில் லோடு ஆட்டோவில் பயணம் செய்த தண்டபாணியின் மகள் கீர்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    அவரது மனைவி வசந்தி (30), மகள் மாலினி(10), மகன் ராமச்சந்திரன் (12), மேலும் உறவினர்கள் கண்ணன் (56), ரேவதி (13) கீதா (16) சத்யா (12) மகேஸ்வரி (31) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

    இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இடுபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×