search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "almsgiving"

    • மேலூர் அருகே பட்ட சாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கூத்தப்பன்பட்டி கிராமத்தில் உள்ள பிரான்மலை திருமலைசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி பிரான்மலை ராமசுப்பிரமணிய குருக்கள் தலைமையில் யாகசாலையில் இருந்து காப்புகட்டிய பக்தர்கள் புனித தீர்த்ததை எடுத்து சென்றனர். பின்னர் கோபுர கலசத்திற்கு புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. கோவில் முன்பு நடைபெற்ற அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை கூத்தப்பன்பட்டி பெரியஅம்பலம், சின்னஅம்பலம் வகையாறவினர் செய்திருந்தனர்.

    • அலங்காநல்லூர் அருகே சீலைக்காரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள தனிச்சியம் கிராமத்தில் அமைந்துள்ள சீலைக்காரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. 4 நாட்கள் நடந்த யாகசாலை பூஜையில் 4 கால சிறப்பு ஹோமங்கள் நடந்தன. மூலமந்திர ஹோமம், கோ பூஜை, மகா கணபதி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடானது. புனித நீர் கோவிலை சுற்றி வலம் வந்து பின்னர் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பூசாரி ஜெயசீலன் மற்றும் கோவில் பங்காளிகள், கிராம மக்கள் செய்தனர்.

    • பரவையில் பக்தர்களுக்கு நீர் மோர், அன்னதானம் நடந்தது.
    • சமயநல்லூர் அருகே உள்ள அதலையில் ராமலிங்க சுவாமிகள் கோவில் திருவிழா 2 நாட்கள் நடக்கிறது.

    வாடிப்பட்டி

    சமயநல்லூர் அருகே உள்ள அதலையில் ராமலிங்க சுவாமிகள் கோவில் திருவிழா 2 நாட்கள் நடக்கிறது. திருவிழாவை காண்பதற்காக பக்தர்கள் பரவை வழியாக சென்று வருகின்றனர். அவர்கள் பயன்பெறும் வகையில் பரவை பேரூராட்சியில் ராமலிங்க சுவாமிகள் அறப்பணி பேரவையின் 65-வது ஆண்டு விழா நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

    இதை பேரூராட்சி சேர்மன் கலா மீனாராஜா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜா அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

    • அகத்திய மாமுனிவருக்கு சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • மூடிக்கிடந்த திருக்கதவை அப்பரும், சம்பந்தரும் தேவாரப்ப திகங்கள் பாடி திறந்ததாகவும் வரலாறு இக்கோவிலுக்கு உண்டு.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் அகத்திய மாமுனி வருக்கு சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    புராண காலத்தில் 4 வேதங்களும் பூஜை செய்தும், மூடிக்கிடந்த திருக்கதவை அப்பரும், சம்பந்தரும் தேவாரப்ப திகங்கள் பாடி திறந்ததாகவும் வரலாறு இக்கோவிலுக்கு உண்டு.

    இந்த கோவிலில் சிவபெருமானும் பார்வதியும் திருமண கோலத்தில் அகத்தி யருக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் யாழ்ப்பாண வரணி ஆதீனம், செவ்வந்திநாத பண்டார சன்னதி, கயிலைமணி வேதரத்தினம், கேடிலியப்பன் மற்றும் கோவில் நிர்வாக அதிகாரி அறிவழகன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நிகழ்ச்சியில் யாழ்ப்பாண வரணி ஆதினம், செவ்வந்தி நாதபண்டார சன்னதி ஸ்தத்தார், கயிலைமணி வேதாரத்தினம், கேடிலியப்பன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சோழிய வேலாளர் சங்கத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • பங்குனி உத்திர திருவிழாவில் தி.மு.க.வினர் அன்னதானம் வழங்கினர்.
    • நகர்மன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் பங்குனி உத்தர திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம், பழச்சாறு மற்றும் மோர் வழங்கும் நிகழ்ச்சி தி.மு.க. சார்பில் நடந்தது. மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.யின் அறிவுரையின்படி நடந்த இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. செயற்குழு உறுப்பினர் குணசேகரன், அவரது மகன் அருண் குணசேகரன், ராமநாதபுரம் கார்மேகம், நகர்மன்ற துணைத்தலைவர் பிரவீன் தங்கம், முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜெகநாதன், முன்னாள் நகரச்செயலாளர் மங்களேஸ்வரன், தகவல் தொழில்நுட்ப அணி பழ.பிரதீப் பழனிவேல், நகர்மன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • உலக சிவனடியார் கூட்டத்தினர் திருவாசக முற்றோதல் நடத்தினர்.
    • தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

    நாகப்பட்டினம்:

    நாகூர் காங்கேய சித்தர் ஜீவபீடத்தில் திருவாசக முற்றோதல் நாகூர் கொச தெரு என்னும் குயவர் மேட்டு தெருவில் அருள்பாளித்து வரும் காங்கேய சித்தர் ஜீவ பீடத்தில் உலக அமைதி வேண்டி திருநாகை காயாரோகனத்தார் அர்தசாம அடியார் திருக்கூட்டத்தினர், உலக சிவனடியார் திருக்கூட்டம் மற்றும் மலேசியாவின் பினாங் நகர உலக சிவனடியார் திருகூட்டத்தினர் திருவாசக முற்றோதல் நடத்தினர்.

    இந்நிகழ்வில் உலக சிவனடியார் கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜம்புலிங்கம் மற்றும் மலேசிய பினாங் நகர சிவனடியார் கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நாகூர் பிடாரி அம்மன் கோவில் நிர்வாகி கணபதி மற்றும் நாகை சத்ரு சம்ஹார மூர்த்தி ஆலய நிர்வாகி சிங்காரவேலு ஆகியோர் முற்றோதல் செய்த சிவனடியார்களுக்கும் பக்தர்களுக்கும் அன்ன தானம் வழங்கினர்.

    இந்த நிகழ்வை ஸ்ரீ காங்கேய சித்தர் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் இராஜசரவணன், கோகுல கிருஷ்ணன், குமார், டாக்டர் அனிதா பழனிவேல் மற்றும் சேலம் வெங்கடேசன், நாகை ஐடிசி நடராஜ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

    • தென்கரை கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள தென்கரை கிராம வைகைக்கரையில் அமைந்துள்ள ஆதிகாலத்து உச்சி மகாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி சமேத மூலநாதர் ேகாவில் நாகேசுவரசிவம், செந்தில் ஆகியோர் தலைமையில் யாகபூஜை நடந்தது. மேளதாளத்துடன் புனித நீர் குடங்கள் எடுத்து கோவிலை வலம் வந்தனர். மகா கும்பாபிஷேகம் நடைபெற்று சிறப்பு அர்ச்சனை, பூஜை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    • ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

    இதனையொட்டி தஞ்சை மேம்பாலம் அரசினர் காது கேளாதோர் பள்ளியில் அ.ம.மு.க சார்பில் துணை பொது செயலாளர் எம்.ரெங்கசாமி தலைமையில் தஞ்சாவூர் மாநகர் மாவட்ட செயலாளர் ப.ராஜேஸ்வரன் முன்னிலையில் காலை உணவு வழங்கப்பட்டது.

    தொடர்ந்து, கல்லுக்குளம் ஓசோனம் முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. பின்னர், நாஞ்சிக்கோட்டை ஈ.பி.காலனியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து ரெயிலடியில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதில் மாவட்ட அவை தலைவர் விருதாச்சலம், அம்மா பேரவை செயலாளர் ராமதாஸ், வர்த்தக அணி முரளி, பொதுக்குழு உறுப்பினர் அய்யாவு (எ) வேலாயுதம், செயற்குழு உறுப்பினர் கீதா சேகர், வக்கீல் செந்தில், பூக்கடை பகுதி செயலாளர் செந்தில், ஒன்றிய செயலாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை தஞ்சாவூர் மாநகர மாவட்ட அ.ம.மு.க.வினர் செய்திருந்தினர்.

    • இன்று மகாசிவராத்திரி விழா சிவாலயங்களில் நடைபெறுகிறது.
    • கும்பகோணம் பகுதியில் உள்ள 14 முக்கிய சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா நடக்கிறது.

    கும்பகோணம்:

    ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் தேய் பிறை திரயோதசி பிரதோஷம் நாளில் மகாசிவராத்திரி விழா சிவாலயங்களில் நடைபெறுகிறது.

    அந்த வகையில் இன்று மகா சிவராத்திரி விழா நடைபெறுகிறது.

    திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் சுவாமி, செஞ்சடையப்பர் கோவில், கஞ்சனூர் அக்னீஸ்வர சுவாமி, திருமங்கலக்குடி பிராண நாதசுவாமி, சூரியனார் கோவில் சிவ சூரியபெருமான் காசி விஸ்வநாதர், சோழபுரம் கைலாசநாதர், திருலோக்கி கைலாசநாதர் உள்பட 14 முக்கிய சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா நடக்கிறது.

     இதையொட்டி இன்று இரவு அர்த்தஜாம பூஜை முதல் மறுநாள் 19ந் தேதி அதிகாலை 5 மணி வரை 4 காலம் சிறப்பு ஹோமம், மகா அபிஷேக ஆராதனைகள், வேதபாராயணம் திருமுறை பாராயணம், நாதஸ்வர மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகள், அன்னதானம் நடைபெறுகிறது.

    அந்தந்த கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    • வேத மந்திரங்கள் முழங்க மூலவர் கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் கீழக்கரை தெற்கு பள்ளியமேடு பத்ரகாளியம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் முதல் கால யாகபூஜை ஆரம்பிக்கப்பட்டு விக்னேஷ்வர பூஜை, ஹோமாதா பூஜை, கிராம யஜமான சங்கல்பம், ரக்க்ஷனபந்தனம் நடைபெற்று மாலை பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து நேற்று 2-ம் கால யாக பூஜைகள் மற்றும் தீபாராதனை தொடங்கி யாத்ரா தானம் கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மூலவர் கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராமமக்கள் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • அய்யப்ப பக்தர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது
    • விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    புதுக்கோட்டை:

     பொன்னமராவதி அருகே உள்ள மேலச்சிவபுரியில் ஸ்ரீ சுவாமிநாத ஐயப்ப பக்தர்கள் அங்கு உள்ள சுவாமிநாத விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை முதல் தேதி மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் மேற்கொண்டு பின்னர் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி கட்டி சென்று வருவது வழக்கம். அதனை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி தங்களது பயணத்தை தொடங்குவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக சபரிமலை பயணத்தை பக்தர்கள் தொடரவில்லை. தற்பொழுது சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து செந்தில்குமார், சின்னையா குருசாமி தலைமையில் சரண கோஷம் முழங்க இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தங்களது புனித பயணத்தை தொடங்கியுள்ளனர். அதனை முன்னிட்டு அங்கு நடைபெற்ற அன்னதான விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


    • 100-க்கும் மேற்பட்ட சிறுமிகளின் அகல் விளக்கு ஊர்வலம் நடந்தது.
    • வீட்டு வாசலில் அனைவரும் வண்ண கோலமிட்டு விளக்கேற்றி வரவேற்றனர்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் ஒன்றியம் புலவஞ்சி கிராமத்தில் தர்மா சாஸ்தா பெரும்பாதை ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் 15 ஆம் ஆண்டு மண்டல பூஜை திருவிழா நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு தெய்வத்திரு குருசாமிக்கள் கலியமூர்த்தி, சாத்தையன் ஆகியோரின் அருளால் ஐயப்ப சாமியின் மண்டல பூஜை திருவிழா மற்றும் ஐயப்ப ரத ஊர்வலமும் சிறுமிகளின் அகல் விளக்கு ஊர்வலமும் நடைபெற்றது.

    முத்து மாரியம்மன் கோயிலில் கணபதி ஹோமம் நடந்தது. இதை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

    நேற்று மாலை புலவஞ்சி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள பிள்ளையார் கோவிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக மாரியம்மன் கோயில் வரை ஐயப்பன் ரத ஊர்வலம் சென்றடைந்தது.

    பின்னர் ஸ்ரீ காமன் கோவில்களில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக பிள்ளையார் கோவில் வரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுமிகள் அகல் விளக்கு ஊர்வலம் நடந்தது.

    இதனை அடுத்து அவர் அவர் வீட்டு வாசலில் அனைவரும் கோலமிட்டு விளக்கு ஏற்றி வரவேற்றனர். இந்த விழாவினை அடுத்து மெய்யன்பர்களும் ஐயப்ப பக்தர்களும் கிராம வாசிகளும் கலந்து கொண்டு அய்யன் அருள் பெற்றனர்.

    மேலும் குருசாமி முருகையன் சுவாமி ஐயப்ப பக்தர்களும் மற்றும் புலவஞ்சி கிராமவாசிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    ×