search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alia Bhatt"

    அயன் முகர்ஜி இயக்கத்தில் ஆலியா பட் நடிப்பில் உருவாகி இருக்கும் பிரம்மாஸ்திரா படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றம் செய்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. #Brahmastra
    பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பிரம்மாஸ்திரா’. இப்படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். இப்படம் இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால், தற்போது அடுத்த ஆண்டு வெளியிட இருப்பதாக இயக்குனர் அறிவித்திருக்கிறார்.

    இதுகுறித்து அவர் அளித்துள்ள அறிக்கையில், ‘இந்தியாவின் முதல் முத்தொகுப்பு திரைப்படமான ‘பிரம்மாஸ்திரா’-வின் சமீபத்திய முக்கியமான பகிர்வு இது.

    இப்படத்தின் கனவானது என்னுள் 2011 இல் உருவானது. 2013-ல் ‘ஏ ஜாவானி ஹய் திவானி’ (Yeh Jawaani Hai Deewani) படம் முடித்தவுடன் இப்படத்திற்கான கதை, திரைக்கதையை உருவாக்கத் தொடங்கினேன்.

    கதை, திரைக்கதையாக்கம், கதாப்பாத்திரப்படைப்பு, இசை மட்டுமல்லாமல் விஎப்எக்ஸ் (vfx) துறையிலும் நம்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப் போகும் ஒரு பிரமிப்பான-பிரமாண்டமான இமாலய முயற்சி இது.



    இப்படத்தின் லோகோவை 2019 கும்பமேளாவில் பிரம்மாண்டமாக ஆகாயத்தில் வெளியிட்டோம்; அப்போது கூட இப்படத்தை 2019 கிறிஸ்துமஸ் அன்று வெளியிட முடியுமென உற்சாகமாக இருந்தோம்.

    ஆனால் கடந்த ஒரு வார காலமாக எங்கள் படத்தின் vfx தொழில்நுட்பக் குழுவினர் இப்படத்தை நினைத்த அளவுக்கு பிரம்மாண்டமாக கொண்டு வர சற்று அதிக காலம் தேவை என கருத ஆரம்பித்தனர்.

    இதை மனதில் கொண்டு 'பிரம்மாஸ்திரா' திரை வெளியீட்டை 2019 கிறிஸ்துமஸ் தினத்தில் இருந்து 2020 கோடை விடுமுறை காலத்திற்கு தள்ளிவைக்க முடிவெடுத்திருக்கின்றோம்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நித்யா மேனனுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. #RRR #Rajamouli
    பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் முன்னணி வேடங்களில் நடிக்கின்றனர். இதில் கதாநாயகியாக ஆலியாபட், வெளிநாட்டு நடிகை டெய்சி நடிக்க ஒப்பந்தமானார்கள். 

    ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தால் டெய்சி படத்திலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக மற்றொரு ஹீரோயினை தேடி வருகின்றனர்.

    நித்யாமேனன், ‌ஷரத்தா கபூர், பரிணிதி சோப்ரா என 3 பேரிடம் பேச்சு நடக்கிறது. இவர்களில் நித்யா மேனனுக்கு ஸ்கிரீன் டெஸ்ட் முடிந்துவிட்டது. அவர் டெய்சிக்கு பதிலாக நடிக்கிறாரா அல்லது வேறுபாத்திரத்தில் நடிக்கிறாரா என்பதை பட தரப்பு உறுதி செய்யவில்லை. வேறு கதாபாத்திரத்தில் அவர் நடித்தால் டெய்சியின் வாய்ப்பு ஷ்ரத்தாவுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



    படப்பிடிப்பு குஜராத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. படம் அடுத்த ஆண்டு ஜூலை 30-ந் தேதி உலகம் முழுவதும் 10 மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #RRR #Rajamouli #JrNTR #RamCharan #NithyaMenen

    ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் நடிக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் இருந்து பிரபல நடிகை ஒருவர் விலகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. #RRR #Rajamouli
    பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்த படம் சுமார் ரூ. 350 கோடியில் உருவாகி வருகிறது.

    இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரணுடன் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட், டேய்சி ஜோன்ஸ் உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் டேய்சி ஜோன்ஸ் இந்த படத்தில் இடம்பெற முடியவில்லை என்று படக்குழு அறிவித்துள்ளது.


    படப்பிடிப்பு குஜராத்தில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், குஜராத் படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடியும் என்று நம்புவதாக ராஜமவுலி தெரிவித்துள்ளார்.



    படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. படம் அடுத்த ஆண்டு ஜூலை 30-ந் தேதி உலகம் முழுவதும் 10 மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #RRR #Rajamouli #JrNTR #RamCharan #AjayDevgn #Samuthirakani #AliaBhatt 

    64-வது பிலிம்பேர் விருது விழாவில் ரன்பீர் கபூர், ஆலியா பட்டுக்கு சிறந்த நடிகர், நடிகைகான விருது வழங்கப்பட்டுள்ளது. #FilmfareAwards #FilmFare
    64-வது பிலிம்பேர் விருது வழங்கும் விழா நேற்று மும்பையில் கோலா கலமாக நடந்தது. இந்தி சினிமா படங்களுக்கு வழங்கப்பட்ட இந்த விருது நிகழ்ச்சியில் இந்தி முன்னணி நடிகர்-நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    சிறந்த நடிகராக ரன்பீர் கபூர் தேர்வு செய்யப்பட்டார். அவர் ‘சஞ்சு’ படத்தில் நடித்ததற்காக இந்த விருதை வென்றார். அந்த படம் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இதில் சஞ்சய்தத் வேடத்தில் ரன்பீர் கபூர் நடித்து இருந்தார்.

    சிறந்த நடிகை விருதை ‘ராஷி’ படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ஆலியாபட் வென்றார். இந்த படத்தில் அவர் பெண் உளவாளி வேடத்தில் நடித்து இருந்தார். சிறந்த படமாக ‘ராஷி’யும், அப்படத்தை இயக்கிய மேக்னா குல்சார் சிறந்த இயக்குனராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.



    வாழ்நாள் சாதனையாளர் விருது மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு வழங்கப்பட்டது. அதை அவரது மகள்கள் பெற்றுக் கொண்டனர். சினிமாவில் 50 ஆண்டு காலம் சேவையாற்றியதற்காக நடிகை ஹேமமாலினிக்கு விருது கொடுக்கப்பட்டது.

    ‘பத்மாவத்’ படத்தில் நடித்த ரன்வீர்சிங்குக்கு சிறந்த விமர்சிக்கப்பட்ட நடிகர் விருது வழங்கப்பட்டது. இதே போல பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் நடிகர்- நடிகைகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

    ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் நடிக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் அஜய்தேவ்கன், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவித்த படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது. #RRR #Rajamouli
    பாகுபலி படங்கள் மூலம் உலகத்தின் பார்வையை இந்திய சினிமாவின் பக்கம் திருப்பியவர் இயக்குனர் ராஜமவுலி. இவரது படங்களில் பிரம்மாண்டம், கதை சொல்லும் முறை, கிராபிக்ஸ் ஆகிய அம்சங்கள் எப்போதும் கவனிக்க வைப்பவை. பாகுபலிக்கு முன்பே ‘விக்ரமாகுடு’, ‘சத்ரபதி’, ‘ஈகா’, ‘மகதீரா’ எனத் தொடர்ந்து பல்வேறு சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்தவர்.

    ராஜமவுலியின் அடுத்த படத்துக்கு சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு நிலவியது. தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் நடிக்க ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இதன் பட்ஜெட் கிட்டத்தட்ட ரூ. 300 கோடி என சொல்லப்படுகிறது.



    இந்த படத்துக்கான அதிகாரபூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடந்தது. இதில் ராஜமவுலி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். ’படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரணுடன் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, டேய்சி ஜோன்ஸ், அலியா பட் ஆகியோரும் நடிக்கிறார்கள். படம் அடுத்த ஆண்டு ஜூலை 30-ந் தேதி உலகம் முழுவதும் 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது.


    படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டது.படத்தின் தலைப்பு இப்போதைக்கு ‘ஆர் ஆர் ஆர்’ என்றே இருக்கும். ஒவ்வொரு மொழிக்குமான விரிவாக்கம் பின்னர் வெளியிடப்படும்’ ஆகிய அறிவிப்புகள் இன்று வெளியாகின.

    படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத் ராமோஜி பிலிமி சிட்டியில் நடந்து வருகிறது. இதற்கு முன்னர் ராம்சரணுடன் ‘மக தீரா’ படத்திலும், ஜூனியர் என்.டி.ஆருடன் ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’, ‘யமதொங்கா’ ஆகிய படங்களிலும் ராஜமவுலி பணிபுரிந்துள்ளார். ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’, இயக்குநராக ராஜமவுலியின் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. #RRR #Rajamouli #JrNTR #RamCharan #AjayDevgn #Samuthirakani #AliaBhatt 

    பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கும், இந்தி நடிகை அலியாபட்டுக்கும் இடையே புதிதாக காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #RanbirKapoor #AliaBhatt
    இந்தி திரையுலக பழம்பெரும் நட்சத்திர தம்பதியான ரிஷிகபூர்-நீட்டுசிங் மகன் ரன்பீர் கபூர். இவர் இந்தியில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். ரன்பீர் கபூருக்கும், இந்தி நடிகை கத்ரினா கைப்புக்கும் சில வருடங்களுக்கு முன்பு காதல் மலர்ந்தது. இருவரும் ஜோடியாக சுற்றினார்கள். திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

    அதன்பிறகு ஒருவரையொருவர் பார்ப்பதை தவிர்த்து வந்த இருவரும் அனுஷ்கா சர்மா-விராட் கோலி திருமணத்தில் நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தது. இருவரும் பேசிக்கொண்டனர். அவர்களுக்கு மீண்டும் காதல் மலரும் என்று கணித்த நிலையில் காதல் முறிந்தது முறிந்ததுதான் என்ற ரீதியில் விலகி விட்டனர்.

    இந்த நிலையில் ரன்பீர் கபூருக்கும், இந்தி நடிகை அலியாபட்டுக்கும் இடையே புதிதாக திடீர் காதல் மலர்ந்துள்ளது. ரகசியமாக சந்தித்து காதலை வளர்த்த இருவரும் மும்பையில் நேற்று முன்தினம் நடந்த நடிகை சோனம் கபூர் திருமணத்தில் ஜோடியாக கைகோர்த்து வந்து காதலை உறுதிப்படுத்தி உள்ளனர்.



    அலியா பட் பிரபல இந்தி இயக்குனரும், தயாரிப்பாளருமான மகேஷ்பட்டின் மகள் ஆவார். ரன்பீர் கபூர்-அலியாபட் காதல் விவகாரம் இந்தி பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. 
    ×